ஜியோ பார்சி திட்டம்:
- ஜியோ பார்சி என்பது பார்சி சமூகத்தின் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு தனித்துவமான மத்திய துறை திட்டமாகும். இந்த திட்டம் 2013-14 இல் தொடங்கப்பட்டது.
- அறிவியல் பூர்வமான நெறிமுறைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட தலையீடுகளைப் பின்பற்றுவதன் மூலம் பார்சி மக்கள் தொகையின் குறைந்து வரும் போக்கை மாற்றுவது, அவர்களின் மக்கள் தொகையை நிலைப்படுத்துவது மற்றும் இந்தியாவில் பார்சிகளின் மக்கள் தொகையை அதிகரிப்பது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
இத்திட்டம் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது:
1. மருத்துவ உதவி – நிலையான மருத்துவ நெறிமுறைகளின் கீழ் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்குதல்
2. ஆதரவு – கருவுறுதல் பிரச்சினைகள் உள்ள தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் பயிலரங்குகள் உள்ளிட்ட விளம்பரம் சார்ந்த நிகழ்வுகள்
3. சமூகத்தின் ஆரோக்கியம் – பார்சி தம்பதிகளுக்கு குழந்தை பராமரிப்புக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் சார்ந்துள்ள முதியோருக்கு உதவி அளித்தல்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் உயிரி அடையாள சரிபார்ப்பு மற்றும் பிற நடைமுறைகளுக்குப் பிறகு நேரடி பலன் பரிமாற்றம் மூலம் பயனாளிகளுக்கு விடுவிக்கப்படுகிறது. திட்ட வழிகாட்டுதல்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.minorityaffairs.gov.in)
வெளியிடப்பட்டுள்ளன.