MARITIME AMRIT KAAL VISION 2047 (Details in Tamil)

TNPSC PAYILAGAM
By -
0

MARITIME AMRIT KAAL VISION 2047 (Details in Tamil)


கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டம் 2047:

  • உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பகுதியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023, அக்டோபர் 17 அன்று காணொலி காட்சி மூலம்  தொடங்கி வைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியின் போது, இந்திய கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கு நீண்டகாலத் திட்டமான 'அமிர்தகாலத் தொலைநோக்கு-2047'-ஐப் பிரதமர் வெளியிட்டார். 
  • துறைமுக வசதிகளை மேம்படுத்துதல், நீடித்த நடைமுறைகளை ஊக்குவித்தல், சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட உத்திசார்ந்த முன்முயற்சிகளை இந்தத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. 
  • கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டங்களின் ஒரு பகுதியாக 2047 ஆம் ஆண்டிற்குள் ஆறு மெகா துறைமுகங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


புதிய முயற்சிகள் :
  • கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2030 (MIV 2030) மற்றும் கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டம் 2047 (MAKV 2047) ஆகியவற்றின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் பல புதிய முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

புதிய முயற்சிகள் விவரம்:

1. துறைமுக நவீனமயமாக்கல் மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பு விரிவாக்கம்:

  • இரண்டு புதிய பெரிய துறைமுகங்கள் – வாதவன் மற்றும் கலத்தியா விரிகுடா, தீன்தயாள் துறைமுக ஆணையம் (கண்ட்லா), வாதவன், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (தூத்துக்குடி), கலத்தியா விரிகுடா, பாரதீப் துறைமுக ஆணையம் ஆகியவை பெரிய கப்பல்களை (பனாமாக்ஸ், கேப் அளவு) கையாள உதவும்.
  • துறைமுக செயல்பாடுகளை நவீனப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் மூலம், கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல் நிறுத்தப்பட்டு உள்ள போது கன்டெய்னர் கையாளும் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த துறைமுக இணைப்புத் திட்டத்தின் கீழ் பல்வகை துறைமுக இணைப்பை மேம்படுத்துதல்
  • ஆறு புதிய தேசிய நீர்வழிப் பாதைகளை செயல்படுத்துதல்.

2. கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்பு மேம்பாடு:

  • உள்நாட்டு கொள்ளளவை மேம்படுத்துவதற்காக புதுப்பிக்கப்பட்ட கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.
  • 4 கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் வளாகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன: முதலீட்டை ஈர்ப்பதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் கப்பல் கட்டும் தளங்களை நவீனமயமாக்குவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை வளர்ப்பதும் இதில் அடங்கும்.

3. பசுமை முயற்சிகள் மற்றும் நிலைத்தன்மை:

  • கரியமில வாயுவின் தீவிரத்தைக் குறைக்கவும், பெரிய துறைமுகங்களில் மாசுபடுத்தாத சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும் "ஹரித் சாகர்" பசுமைத் துறைமுக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
  • தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், தீன்தயாள் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆகிய 3 பெரிய துறைமுகங்கள் பசுமை ஹைட்ரஜன் / அம்மோனியா மையங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
  • வழக்கமான எரிபொருள் அடிப்படையிலான துறைமுக இழுவைப் படகுகளிலிருந்து பசுமையான, நிலையான மாற்றுகளுக்கு மாறுவதற்கான பசுமை இழுவை மாற்றம் திட்டம் (GTTP).
  • உள்நாட்டு நீர்வழிகள் அடிப்படையிலான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பின் பசுமை மாற்றத்திற்கான ஹரித் நௌகா வழிகாட்டுதல்கள்.

4. கப்பல் சுற்றுலா:

  • 2024 செப்டம்பரில் தொடங்கப்பட்ட கப்பல் பயண பாரத் மிஷன், 2029-க்குள்,  நாட்டில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுற்றுலாவை மேம்படுத்தவும், இந்தியாவை ஒரு முக்கிய உலகளாவிய கப்பல் பயண இடமாக நிலைநிறுத்தவும், ஆறு புதிய சர்வதேச கப்பல் முனையங்களை உருவாக்குதல்.

5. திறன் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு:

  • திறன் மேம்பாட்டு முயற்சிகளில் கவனம் செலுத்துதல் மற்றும் கப்பல் கட்டுவதில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளித்தல்
  • கடல்சார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியர் பதவிகளில் மாலுமிகள் சேரச் செய்தல்


தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பிற முயற்சிகள் பற்றிய விவரங்கள்:

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றம்:

  • கடல் வழிசெலுத்தல் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு மிக உயர் அதிர்வெண் (VHF) சேனல்களைப் பயன்படுத்துதல்.
  • அனைத்து கேபெக்ஸ் திட்டங்களையும் கண்காணிக்க மையப்படுத்தப்பட்ட திட்ட மேலாண்மை அமைப்பு
  • ஸ்மார்ட் தகவல்தொடர்பு அமைப்புகளை செயல்படுத்துதல்
  • தேசிய சரக்குப்போக்குவரத்து இணையதளம் (NLP) மரைன் 2.0 மற்றும் கடல்சார் ஒற்றை சாளரம் ("MSW") (2026-க்குள்)
  • கப்பல் பதிவு, கணக்கெடுப்பு மற்றும் சான்றுப்படுத்தலுக்கான ஈ-சமுத்ரா திட்டம்
  • தேசிய நதி வழிசெலுத்தல் மற்றும் போக்குவரத்து அமைப்பு (2027-க்குள்)
  • தேசிய உள்நாட்டு கப்பல்கள் மற்றும் பணியாளர்கள் பதிவேட்டிற்கான தகவல் தொழில்நுட்ப தளம் (2026-க்குள்)
  • செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு அடிப்படையிலான யார்டு மேலாண்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி தானியங்கி பெர்த்களின் ஒதுக்கீடு (2025-க்குள்)


பசுமை கப்பல் மற்றும் நிலைத்தன்மை முயற்சிகள்:

  • 2026-ம் ஆண்டுக்குள் ஹாங்காங் உடன்படிக்கைக்கு (சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த மறுசுழற்சி தொடர்பாக) இணங்கி செயல்படும் வகையில்  கப்பல் கட்டும் தளங்களுக்கு ஆதரவளித்தல்.
  • 2029-க்குள் நாட்டில் 5 பசுமை ஹைட்ரஜன் / அம்மோனியா மையங்கள் மற்றும் 1000+ பசுமை கப்பல்களை உருவாக்குதல்


Source : PIB 



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)