மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கம்:
- மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கம் 2020-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது உலகளாவிய கண்ணோட்டத்துடன் இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள குடிமைப் பணி சேவையை வழங்க முயற்சிக்கிறது.
- கர்மயோகி இயக்கம் என்பது மத்திய அரசு பணியாளர்களின் அணுகுமுறைகள், திறன்கள், பொது அறிவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முன்முயற்சியாகும். பொது நிர்வாகத்தில் தொழில்நிபுணத்துவம், வெளிப்படைத்தன்மை, புதுமை ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் நடத்தைகளின் திறனை மேம்படுத்துவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கர்மயோகி இயக்கம், திறன் சார்ந்த பயிற்சி மற்றும் சூழல் அமைப்பை உருவாக்குவதாகும். அரசின் ஒவ்வொரு நிலையிலும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதை இலக்காக கொண்டு இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயக்கம் iGOT கர்மயோகி என்ற இணைய தளத்தில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கற்றலுக்கு ஏற்ற ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது.
- கர்மயோகி இயக்கம் நிர்வாக நடைமுறைகளில் ஒரு புதிய கலாச்சாரத்தை வளர்த்துள்ளது. 2024 ம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி நிலவரப்படி, 62 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் iGOT கர்மயோகி இணைய தளத்தில் 2.04 கோடிக்கும் அதிகமான படிப்புகளை படித்து முடித்துள்ளனர். இநத் இணைய தளத்தில் மொத்தம் 1500 க்கும் கூடுதலான படிப்புகள் அரசு பணியாளர்களின் திறன்களை மேம்படுத்த உதவுகின்றன. மக்களை மையமாக கொண்டு வருங்காலத்திற்கு ஏற்ற வகையில் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதில் இந்த இணைய தளம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
- தேசிய கற்றல் வாரம் (என்எல்டபிள்யூ) அரசு ஊழியர்களுக்கான தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் நிறுவன திறன் மேம்பாட்டிற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும். "ஒரே அரசு" என்ற செய்தியை உருவாக்கி, அனைவரையும் தேசிய இலக்குகளுடன் ஒருங்கிணைத்து, வாழ்நாள் கற்றலை இது ஊக்குவிக்கும்.
'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) :
- புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி (19.10.2024) தொடங்கி வைத்தார்.
SOURCE : PIB