NAMASTE SCHEME DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

NAMASTE SCHEME DETAILS IN TAMIL


நமஸ்தே திட்டம் :சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை 

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் 'இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)' (‘NATIONAL ACTION FOR MECHANISED SANITATION ECOSYSTEM (NAMASTE)” SCHEME) திட்டத்தை உருவாக்கியுள்ளது. 
  • இது நாட்டின் அனைத்து 4800+ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தம் வகையில்  2023-24-ல் தொடங்கப்பட்டது.


நமஸ்தே திட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு:

  • துப்புரவு உள்கட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்களிப்பாளர்களாக துப்புரவுத் தொழிலாளர்களை அங்கீகரிக்கும் ஒரு சாத்தியமான சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • துப்புரவுத் தொழிலாளர்களின் பாதிப்புகளைக் குறைக்க உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான உதவியை வழங்குதல் மற்றும் துப்புரவு தொடர்பான திட்டங்களுக்கு மூலதன மானியம் வழங்குவதன் மூலம் அவர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட உதவுதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
  • கூடுதலாக, நமஸ்தே திட்டமானது துப்புரவுத் தொழிலாளர்களிடம் ஒரு நடத்தை மாற்றத்தைக் கொண்டுவரும். மேலும் பாதுகாப்பான துப்புரவு சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும். ஏனெனில்  சேவை தேவைப்படும் அனைவரும்  கழிவுநீர் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவு பொறுப்பேற்பு பிரிவை (எஸ்.ஆர்.யூ.) அணுக வேண்டும். எந்தவொரு முறைசாரா பணியாளரும் அத்தகைய பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


SOURCE : PIB




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)