மது மற்றும் போதைப் பழக்கத்தை தடுக்க மருந்து தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டம்:
- போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல்திட்டம் ( National Action Plan for Drug Demand Reduction (NAPDDR) ) உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- போதைப்பொருள் பயன்பாட்டைச் சமாளிக்க, இத்துறை தேசிய செயல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.
NAPDDR திட்டத்தின் கீழ் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
- போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கம்-(நஷா முக்த் பாரத் அபியான் ( NMBA-Nasha Mukt Bharat Abhiyaan) ஆகஸ்ட்15, 2020 அன்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 272 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.
- இப்போது இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- நஷா முக்த் பாரத் அபியான் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் பள்ளிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதுவரை, இந்த இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், 4.42 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், 2.71 கோடிக்கும் அதிகமான பெண்கள் உட்பட 13.57 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு போதைப் பொருள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
SOURCE : PIB