National Consumers Day 2024 -தேசிய நுகர்வோர் தினம் 2024
By -TNPSC PAYILAGAM
December 27, 2024
0
ஒவ்வொரு ஆண்டும், தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த நாள் இந்தியாவில் நுகர்வோர் இயக்கத்தின் மாறிவரும் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
இந்த நாளில்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நுகர்வோரின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், மோசடி, சுரண்டல் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதிருந்து, வளர்ந்து வரும் சந்தைச் சூழலில் நுகர்வோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகள், போக்குகள் மற்றும் சவால்களை மையமாகக் கொண்ட வெவ்வேறு கருப்பொருள்களுடன் ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.இது 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூருகிறது.
இந்த ஆண்டு நுகர்வோர் தினம் தில்லியில் "மெய்நிகர் விசாரணைகள் மற்றும் நுகர்வோர் நீதிக்கான டிஜிட்டல் அணுகல்"( "Virtual Hearings & Digital Access to Consumer Justice") என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
நுகர்வோருக்கு விரைவான, செலவு குறைந்த மற்றும் இடையூறு இல்லாத நீதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன் நோக்கங்களுக்கு ஏற்ப இந்தக் கருப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் ஆன்லைன் உலகில் நுகர்வோர்கள் நீதியை அணுக முடிகிறது என்பதை உறுதி செய்வதில் டிஜிட்டல் ஊடகம் மற்றும் கருவிகளின் முக்கியத்துவத்தை திருத்தப்பட்ட சட்டம் எடுத்துக்காட்டுகிறது.
நுகர்வோர்கள் தங்களது புகார்களை மின்னணு முறையில் தாக்கல் செய்தல் மற்றும் மின்னணு வர்த்தகம் தொடர்பான விதிகளுடன், டிஜிட்டல் தளங்கள் மூலம் நீதியை அணுகுவதற்கான விதிகளையும் இந்த சட்டம் உள்ளடக்கியுள்ளது.