NATIONAL QUANTUM MISSION DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

 

NATIONAL QUANTUM MISSION DETAILS IN TAMIL

தேசிய குவாண்டம் இயக்கம்:

  • குவாண்டம் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் திறன்களை உருவாக்குவதற்காக ஏப்ரல் 2023 இல் இந்தியா தேசிய குவாண்டம் மிஷனைத் தொடங்கியது.
  • தேசிய குவாண்டம் இயக்கம் (NQM -என்க்யூஎம்) எட்டு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படுகிறது.
  • தேசிய குவாண்டம் மிஷன் எட்டு ஆண்டுகளுக்கு ரூ.6003.65 கோடி செலவில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
  • நேஷனல் குவாண்டம் மிஷன் என்பது, பீகார் உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 14 தொழில்நுட்பக் குழுக்களை உள்ளடக்கிய நான்கு தீமேடிக் ஹப்கள் (டி-ஹப்ஸ்) நிறுவப்பட்ட ஒரு இந்திய முயற்சியாகும். 
  • இந்த மையங்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் - தொழில்நுட்ப மேம்பாடு, மனித வள மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு, தொழில் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை தேசிய அளவில் உள்ளன. பீகார் உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகள், மிஷனின் திட்டங்களில் பங்கேற்று பயனடைய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை   குவாண்டம் தொழில்நுட்பத் துறையில் புதிய  தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. 
  • இந்த வழிகாட்டு நெறிமுறைகள் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான  அத்தியாவசிய வளங்கள், நிதி வாய்ப்புகள், வழிகாட்டுதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பெறுவதற்கான  கட்டமைப்பை வழங்குகின்றன. மேலும் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் நாட்டின் குவாண்டம் தொழில்நுட்ப சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் அதிகாரம் அளிக்கிறது.


தேசிய குவாண்டம் இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் :
  • சூப்பர் கண்டக்டிங், ஃபோட்டானிக் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தளங்களில்  இடைநிலை அளவிலான குவாண்டம் கணினிகளை உருவாக்குதல்
  • செயற்கைக்கோள் அடிப்படையிலான பாதுகாப்பான குவாண்டம் தகவல்தொடர்பை இரண்டு தரை நிலையங்களுக்கு இடையே இந்தியாவிற்குள் 2000 கிலோமீட்டர் தூரத்திற்கு உருவாக்குதல்
  • பிற நாடுகளுடன் நீண்ட தூர பாதுகாப்பான குவாண்டம் தகவல்தொடர்புகளை உருவாக்குதல்.
  • தற்போதுள்ள ஆப்டிகல் ஃபைபரில் அலைநீள பிரிவு மல்டிபிளக்சிங்கைப் பயன்படுத்தி நம்பகமான முனைகளுடன் 2000 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடங்களுக்கு இடையே குவாண்டம் விசை விநியோகத்தை உருவாக்குதல்.
  • ஒவ்வொரு முனையிலும் (2-3 முனைகள்) ஒத்திசைக்கப்பட்ட குவாண்டம் ரிப்பீட்டர்களுடன் பல முனை குவாண்டம் கட்டமைப்பை உருவாக்குதல்
  • குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்யூனிகேஷன், குவாண்டம் சென்சிங், குவாண்டம் மெட்டீரியல்ஸ் ஆகியவை இந்த இயக்கத்தின் கீழ் கவனம் செலுத்தப்படும் முக்கிய பகுதிகளாகும்.
  • 6003.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு ஆண்டு காலத்திற்கு தேசிய குவாண்டம் இயக்கத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


SOURCE : PIB 


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)