New Health Insurance Scheme, 2021 :
- தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
- புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தகுதியுடைய அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் ரூ. 5.00 இலட்சம் வரை நான்கு ஆண்டு தொகுப்பிற்கு 01.07.2021. முதல் 30.06.2025 வரை சிகிச்சை பெற்று பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மேலும் இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
- மேலும் அட்டவணை 1A குறிப்பிட்டுள்ள சிகிச்சைகளுக்கு ரூ. பத்து இலட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெற அரசாணை எண்.160 நிதி(சம்பளங்கள்) நாள் 30.06.2021 மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
- ஓய்வூதியதாரர்கள்: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். சிகிச்சை பெற விரும்புவோர், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் இதற்கென பணியில் இருக்கும் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுக வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான முன் அனுமதி பெற்ற பின்னர், சிகிச்சையை தொடங்க வேண்டும். எனினும், எதிர்பாராத சூழல் ஏற்பட்டால், மருத்துவசிகிச்சையை உடனடியாக தொடங்கி,பின்னர் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முன் அனுமதி மற்றும் தேவையான இதர ஆவணங்களைப் பெற வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டண படுக்கை: அதாவது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம், கட்டண படுக்கை வார்டுகளிலும் சிகிச்சை பெற முடியும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களாக கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கான செலவு, சில குறிப்பிட்ட வகையான நோய், சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெறலாம் என்பதுடன், 203 நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.. அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கட்டண படுக்கை பிரிவுகளில், இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ((தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள் உட்பட)) ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் அரசுத்துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் 4 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டு பலன்களை பெற முடியும்.
- இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு அரசு பணியாளர்கள சந்தா தொகையாக மாதம் ரூ. 295 செலுத்த வேண்டும்.
- இந்நிலையில், அரசாணை எண்: 160, நிதித் துறை, நாள்: 30.6.21-ன்படி காப்பீட்டிற்கான காலஅளவு 30.06.25 தேதியுடன் புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டம் முடிவடைய உள்ளது.
ஆதாரம்: அரசாணை எண்: 160, நிதித் துறை, நாள்: 30.6.21