இந்தியாவின் முதல் சைகை மொழி தொலைக்காட்சி:
- இந்தியாவில், அனைவரையும் உள்ளடக்கும் கல்வி முறையை ஊக்குவிக்கும் நோக்கில் முதன்முறையாக சைகை மொழிக்கென ஓர் ஒளிவழி தொடங்கப்பட்டுள்ளது.
- இம்முறை 24 மணிநேரம் செயல்படவிருக்கும். அந்த ஒளிவழியை இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதன் தொடங்கி வைத்தார்.
- இந்திய நாட்டின் பிஎம் இ-வித்யா (PM e-VIDYA) திட்டத்தின்கீழ் புதிய ஒளிவழி தொடங்கப்பட்டுள்ளது.
- மேலும், சேனல் 31 (Channel 31) என்றழைக்கப்படும் அந்தப் புதிய ஒளிவழியை இந்தியாவின் தேசிய கல்வி ஆய்வு, பயிற்சி மன்றம் (NCERT) நடத்தும்.
- இந்தியா முழுவதும் உள்ள செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு முழுமையான கல்வி வளங்களை வழங்குவது சேனல் 31ன் இலக்காகும்.