RASHTRAPARV WEBSITE & MOBILE APP DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

RASHTRAPARV WEBSITE & MOBILE APP DETAILS IN TAMIL


ராஷ்ட்ரபர்வ் இணையதளம், கைபேசி செயலி:

  • முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நினைவுகூரும் 'நல்லாட்சி தினத்தை' முன்னிட்டு 2024 டிசம்பர் 25 அன்று பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மொபைல் செயலியுடன் ராஷ்டிரபர்வ் (Rashtraparv)/என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
  • குடியரசு தினம், படைகள் பாசறை திரும்பும் விழா, சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நேரடி ஒளிபரப்பு, அனுமதிச் சீட்டு வாங்குதல், இருக்கை ஏற்பாடுகள், நிகழ்வுகளின் வழித்தட வரைபடங்கள் தொடர்பான தகவல்களை வழங்க இந்த வலைத்தளம் உதவும்.
  • இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட (Rashtraparv) ராஷ்டிரபர்வ் இணையதளம், மொபைல் செயலி ஆகியவை,  நிகழ்வுகள் தொடர்பான தரவுகளை நிர்வகிப்பதற்கான ஒரு அமைப்பையும் கொண்டுள்ளது என்றார். குடியரசு தின நிகழ்ச்சிக்கான காட்சிப் படங்களை வடிவமைத்து இறுதி செய்வதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், அமைச்சகங்கள், துறைகளுக்கு உதவும் வகையில் காட்சிப் பட மேலாண்மை  தளம் ஒன்றை இது கொண்டிருக்கும்.
  • ராஷ்டிரபர்வ் இணையதளம், மொபைல் செயலி ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனை செயல்முறையின் விளைவாகும். அட்டவணை வடிவமைப்பு தரவுகளை நிர்வகிப்பதற்கான தளத்தை மாநிலங்கள் பரிந்துரைத்திருந்தன. இவற்றை உள்ளடக்கிய ராஷ்டிரபர்வ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இணையதளத்தை https://rashtraparv.mod.gov.in என்ற முகவரியில் அணுகலாம். மொபைல் செயலியை அரசு ஆப் ஸ்டோர் (எம்-சேவா) மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.


SOURCE : PIB 


Post a Comment

0Comments

Post a Comment (0)