SAGAR PARIKRAMA YATRA PROGRAMME DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

SAGAR PARIKRAMA YATRA PROGRAMME DETAILS IN TAMIL


சாகர் பரிகிரமா பயணத் திட்டம்:

  • மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை சார்பில், 75-வது இந்திய விடுதலைப் பெருவிழா கொண்டாட்டத்தையொட்டி நாட்டின் கடலோரப் பகுதிகளை படிப்படியாக மேம்படுத்துவதற்கு 'சாகர் பரிக்கிரமா' என்ற விரிவான திட்டம் 2022 மார்ச் 5 அன்று  தொடங்கப்பட்டுள்ளது. 
  • குஜராத் மாநிலம்  மாண்ட்வியில் தொடங்கிய இத்திட்டம் 12 கட்டங்களாக 80 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 113 பகுதிகளில் 12 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது.  
  • 12 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 7,440 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதியை உள்ளடக்கியதாக இருந்த இந்த பயணம் 11.01.2024 அன்று மேற்கு வங்கத்தின் கங்கா சாகரில் நிறைவடைந்தது.


சாகர் பரிகிரமா பயணத் திட்டத்தின்  நோக்கம் :

  • மீனவர்கள், கடலோர சமூகங்கள், அத்துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு மீன்வளம் தொடர்பான திட்டங்கள், அது சார்ந்த தகவல்கள் மூலம் தற்சார்பு நிலையை உருவாக்குதல் 
  • நாட்டின் உணவுப் பாதுகாப்பை  உறுதி செய்வதற்காக கடல்விளை மீன்வளத்தைப் பயன்படுத்துவதற்கும் கடலோர மீனவ சமூகங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இடையில் நீடித்த சமநிலையைப் பேணுதல் 
  • கடல்சார்  சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை மையமாகக் கொண்டு மீன்வளத்தை மேம்படுத்துதல்.

SOURCE : PIB



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)