STRUCTURAL ENGINEERING CONVENTION (SEC-2024) DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

Structural Engineering Convention (SEC-2024) DETAILS IN TAMIL


கட்டமைப்பு பொறியியல் மாநாடு 2024: Structural Engineering Convention (SEC-2024)


  • திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்ஐடி-டி) கட்டுமானப் பொறியியல் துறை, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, 14வது கட்டமைப்பு பொறியியல் மாநாட்டுக்கு (எஸ்இசி-2024) ஏற்பாடு செய்துள்ளது. 
  • கட்டமைப்பு பொறியியல் மாநாடு என்பது அதிநவீன ஆராய்ச்சி, புதுமையான பொருட்கள், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் கட்டமைப்பு பொறியியலை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான சர்வதேச மாநாடு ஆகும்.  
  • மேலும் நெகிழ்தன்மையுடன் கூடிய, நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கியமான சவால்களை எதிர்கொள்ள கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாக இது செயல்படுகிறது.
  • "நிலையான கட்டுமானப் பொருட்கள் மற்றும் முறைகள் மூலம் நெகிழ்தன்மையுடன் கூடிய கட்டமைப்புகள்" என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தி, இந்த மாநாடு, தீ, காற்று, பூகம்பங்கள், பேரலைகள் மற்றும் பிற தீவிர பாதிப்புகளால் ஏற்படும் சவால்களுக்குத் தீர்வு காண்கிறது. 
  • பாதுகாப்பான, பசுமையான கட்டுமான நடைமுறைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், இந்த சவால்களைத் தாங்கக்கூடிய வலுவான கட்டமைப்புகளை வடிவமைத்து பகுப்பாய்வு செய்வதற்கான கணக்கீட்டு முறைகளை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
  • "இந்த மாநாடு கட்டுமான நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதில் சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும். பசுமை கட்டிடங்கள், புதுமையான பொருட்கள் மற்றும் மேம்பட்ட வடிவமைப்பு முறைகள் மூலம் நிலையான தீர்வுகளை அது ஆராய்கிறது"


SOURCE : PIB




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)