- 2020, ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்வமித்வா திட்டம், கிராம குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சொத்துரிமையாளர்களுக்கு "உரிமைகளின் பதிவு" (“Record of Rights) வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நில எல்லையை வரையறுத்து வரைபடமாக்கலில்மேம்பட்ட ட்ரோன் மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தைப் (GIS Technology) பயன்படுத்தும் இந்தத் திட்டம் சொத்தைப் பணமாக்குதலை ஊக்குவிக்கிறது, வங்கிக் கடன்களை அணுகுவதை எளிதாக்குகிறது, சொத்து தகராறுகளைக் குறைக்கிறது, கிராம அளவில் விரிவான திட்டமிடலை ஊக்குவிக்கிறது.
- உண்மையான கிராம சுயராஜ்யத்தை அடைவதற்கான ஒரு நடவடிக்கையாக, இந்த முன்முயற்சி கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்கும் அதை தற்சார்பாக மாற்றுவதற்கும் கருவியாக உள்ளது
- பொருளாதார அதிகாரமளித்தலுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சொத்து ஆவணங்களின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்து ஸ்வமித்வா திட்டம் உருவாக்கப்ப ட்டது.
- ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் இதுவரை 3.17 லட்சம் கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.
- லட்சத்தீவு, லடாக், தில்லி, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்களிலும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.
- இதுவரை, 1.49 லட்சம் கிராமங்களுக்கு, 2.19 கோடி சொத்து அட்டைகள்(SVAMITVA Property Cards) தயாரிக்கப்பட்டுள்ளன.
- ஹரியானா, உத்தராகண்ட், திரிபுரா, கோவா ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரியிலும், அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் அனைத்து கிராமங்களின் சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு இன்று (2025 ஜனவரி 18) பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் வழங்கினார்.
- அண்மைக்கால ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 'உரிமைகளின் பதிவு' வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் ஸ்வமித்வா திட்டம் பிரதமரால் தொடங்கப்பட்டது.
- சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதிநிறுவனக் கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்துகளையும் சொத்து வரியையும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது.
- 3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. இது இலக்கு கிராமங்களில் 92 சதவீதமாகும். இதுவரை, 1.53 லட்சம் கிராமங்களுக்கு, 2.25 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
- புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, கோவா, உத்தராகண்ட், ஹரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டியுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பல யூனியன் பிரதேசங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.
SOURCE: PIB