வீர பாலகர் தினம்:
- சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளையமகன்கள் ஜோராவர் சிங், பாபாஃபதே சிங்கின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி வீர பாலகர் தினம் கொண்டாடப்படுகிறது.
- பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 1666-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங் பிறந்தார். அவரது தலைமையிலான சீக்கிய படைகளுக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப் படைகளுக்கும், இடையே பல்வேறு போர்கள் நடைபெற்றன.
- கடந்த 1705-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி பஞ்சாபின் சம்கவுர் பகுதியில் சீக்கிய படைக்கும் அவுரங்கசீப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் சாஹிப்ஜாதா அஜித் சிங் (18), சாஹிப்ஜாதா ஜுஜார் சிங் (14) வீர மரணம் அடைந்தனர்.
- பின்னர் கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் பாபா சோராவார் சிங் (9), பாபா பதே சிங் (6) ஆகியோர் முகலாய படை வீரர்களால் கடத்தப்பட்டனர். இரு குழந்தைகளையும் மதம் மாறச் சொல்லி நவாப் வாசிர் கான் என்பவர் நிர்பந்தித்தார். வீரமிக்க இரு சிறுவர்களும் மதம் மாற மறுத்துவிட்டனர். கடந்த 1704-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரு சிறுவர்களையும் உயிரோடு புதைத்து சமாதி கட்டப்பட்டது.
- அவர்களின் வீர மரணத்தின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி வீர பாலகர் தினம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜனவரியில் அறிவித்தார்.