என்விஎஸ்-02 செயற்கைக்கோள் / NVS-02 SATELLITE

TNPSC PAYILAGAM
By -
0
NVS-02 SATELLITE



இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பு:

  • நம் நாட்டில் தரை, கடல், வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பு’ (Indian Regional Navigation Satellite System ) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
  • இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக ‘நாவிக்’ தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு(நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் (NavIC)) செயல்பாட்டில் உள்ளது. இந்த நாவிக் மூலம்தான் நமது நாட்டின் கண்காணிப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.
  • NavIC என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும், இது துல்லியமான நிலை, வேகம் மற்றும் நேரம் (PVT) சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த அமைப்பு இந்தியாவை உள்ளடக்கியது மற்றும் இந்திய நிலப்பரப்பைத் தாண்டி 1,500 கிமீ வரை செல்கிறது.
  • இது இரண்டு வகையான சேவைகளை வழங்குகிறது: ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ் (SPS), இது 20m ஐ விட சிறந்த நிலை துல்லியத்தை வழங்குகிறது, மேலும் கூடுதல் சிறப்பு வழிசெலுத்தல் திறன்களை வழங்கும் கட்டுப்படுத்தப்பட்ட சேவை (RS).


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ஒரு பார்வை:

செயற்கைக்கோள்

விண்ணில் செலுத்தப்பட்ட நாள்

செலுத்து வாகனம்

.ஆர்.என்.எஸ்.எஸ்-1A

ஜூலை 2013

பி.எஸ்.எல்.வி C22

.ஆர்.என்.எஸ்.எஸ்-1B

ஏப்ரல் 2014

பி.எஸ்.எல்.வி C24

.ஆர்.என்.எஸ்.எஸ்-1C

15 அக்டோபர் 2014

பி.எஸ்.எல்.வி C26

.ஆர்.என்.எஸ்.எஸ்-1D

28 மார்ச் 2015

பி.எஸ்.எல்.வி C27

.ஆர்.என்.எஸ்.எஸ்-1E

20 ஜனவரி 2016

பி.எஸ்.எல்.வி C31

.ஆர்.என்.எஸ்.எஸ்-1F

10 மார்ச் 2016

பி.எஸ்.எல்.வி C32

.ஆர்.என்.எஸ்.எஸ்-1G

28 ஏப்ரல் 2016

பி.எஸ்.எல்.வி C33

.ஆர்.என்.எஸ்.எஸ்-1 H

31 ஆகஸ்ட் 2017

பி.எஸ்.எல்.வி C39



பயன்பாடு என்ன ? 

  • ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. 
  • இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைக்கோள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
  • மேலும் 1,500 கி. மீ. சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். 
  •  இந்த செயற்கைக்கோள் கார்கள், சரக்கு வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பதை துல்லியமாக தெரிவிப்பதுடன், பயண நேரம் குறித்து சரியான தகவல்களையும் அளிக்கும். 
  • மேலும், பேரிடர் மேலாண்மை, செல்லிடப்பேசிகள் ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுநர்களுக்கு குரல்வழி மூலம் முறையாக ஓட்டச்சொல்லி வாகனங்களை இயக்க வழிகாட்டும். 
  • இது இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிகாட்டியாக இந்தச் செயற்கைக்கோள்கள் அமையும். 


என்விஎஸ்-02 செயற்கைக்கோள்:

  • இதையடுத்து, ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அந்த வகையில், ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி-க்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக் கோள் கடந்த 2023 மே 29-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 
  • இதைத் தொடர்ந்து, தற்போது ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கைக் கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-02 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைக் கோள் வரும் 29-ம் தேதி அதிகாலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
  • என்விஎஸ் செயற்கைக் கோள் 2,250 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். இதில் எல்-1, எல்-5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம்பெற்றுள்ளன. இது மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)