அகரமுதலி
(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]-தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்)
அகரம் ஆதி என்னும் இருசொற்களின் சேர்க்கையே “அகராதி” என்றானது. “அகராதி” என்னும் சொல் தற்போதைய வழக்கில் “அகர முதலி” என வழங்கப்படுகிறது.
ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை, அம்மொழியாலேனும், பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். அகராதி என்னும் சொல்லின் 'ஆதி' என்னும் சொல் வடமொழி என்பதால், மொழிஞாயிறு பாவாணர் அகரமுதலி என்று அழைத்தார்.
வரலாறு:
- தமிடழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தை பெரும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாகும். இதில் பழமையானது சேந்தன் திவாரகம். இதன் ஆசிரியர் திவாகர் 25 நிகண்டுகளில் சிறந்தது மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
அகரமுதலி:
- திருமூலர் எழுதிய “திருமந்திரத்தில்” “அகராதி” என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ளது. அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த நூல் அராதி நிகண்டு.
சதுரகராதி:
- தமிழில் தோன்றிய முதல் அகராதி “சதுரகராதி” இதனைத் தொகுத்தவர் வீரமாமுனிவர். இது 1732-ம் ஆண்டு வெளிவந்தது. சதுர் – நான்கு என்பது பொருள். (பெயர் பொருள், தொகை, தொடை என நான்கு).
வீரமாமுனிவர் இயற்றியது:
- தமிழ் – இலத்தீன் அகராதி
- இலத்தீன் – தமிழ் அகராதி
- தமிழ் – பிரெஞ்சு அகராதி
- பிரெஞ்சு – தமிழ் அகராதி
- போர்த்துகீசியம் – இலத்தீன் தமிழ் அகராதி
பிற அகர முதலிகள்:
- தமிழ் – தமிழ் அகராதி – லெவி-ஸ்-பால்டிஸ்
- தமிழ்ச்சொல்லகராதி – யாழ்பாணம் கதிர்வேல்
- இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி – இராமநாதன் (இது படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலி
- தமிழ் – ஆங்கிலப் பேரகராதி – வின்சுலோ
- தமிழ் – தமிழ் அகரமுதலி – மு. சண்முகம் (இது 1985 ஆம் ஆண்டு (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
- 1985-ம் ஆண்டு தேவநேயப்பாவாணரின் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேகரமுதலியின்” முதல் தொகுதி வெளிவந்தது. இதன் 2-ம் தொகுதி 1993 ஆம் ஆண்டு வெளியானது. இது படங்களைத் தந்த இரண்டாவது அகரமுதலி ஆகும்.
- “அபிதான கோசம்” தமிழ்க் கலைக் களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902-ல் வெளியானது.
- சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்ட “அபிதான சிந்தாமணி” இலக்கியச் சொற்களோடு அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934-ல் வெளியிட்டது.
- 1925-ம் ஆண்டு பாவனந்தரின் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியும் 1937-ம் ஆண்டு மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளிவந்தது
நிகண்டுகள்:
நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.
- தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
- நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
- நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
தமிழ்வளர்ச்சிக் கழகம்:
- முதல் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து “தமிழ்வளர்ச்சிக்கழகம்” வெளியிட்டது. (பத்துத் தொகுதிகள்) இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாகக் கலைக்களஞ்சியம், இசுலாமியக் கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக் களஞ்சியங்களையும் வெளியிட்டுள்ளது.
தமிழ் நூல்கள் :
- “மணவை முஸ்தபா” அறிவியல் சார்ந்த துறைவாரியான “கலைச்சொல் அகரமுதலிகளைத்” தொகுத்து கலைச்சொல் அகர முதலிகள்” 1960-ம் ஆண்டு தொகுக்கப்பட்டன. அறிவியல் கலைச் சொல் களஞ்சியம் 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
542 தமிழ் கலைச் சொற்கள் :
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககத்தின் சார்பில், பல்வேறு துறைச் சார்ந்த நவீன ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக, 542 தமிழ் கலைச் சொற்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் கோ.செழியன் தெரிவித்தார்.
- தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககத்தின் சார்பில், தமிழ்க் கலைக் கழகத்தின் 10 -ஆவது கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதுகுறித்து அகரமுதலி திட்ட இயக்குநர் கோ.செழியன் செய்தியாளர்களிடம் கூறியது:
- தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் தமிழ்க் கலைக் கழகம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்ககத்தின் சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், தமிழ் மொழியாக்கம் இல்லாத ஆங்கிலச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களை கண்டறிந்து அதற்கு இணையான நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்கி தருவர். இதுவரை 542 சொற்கள் இதுபோன்று உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 158 கலைச் சொற்கள் ஏற்புக்கு வைக்கப்பட்டன. இவற்றில் "பவர் பேக்'- திறன்தேக்கி, "எர்த் வயர்'- நிலக்கம்பி, "பார்கோட்'- வரிக்குறி, "எவர் சில்வர்'- நிலை வெள்ளி, "டேப்'-தாவல், "கிரீப்பிங்'- ஊடுருவல் போன்ற 69 சொற்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.