அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் / AKARAVARISAI TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0
AKARAVARISAI TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்:


விளக்கம் :

மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அகராதிப்படி வரிசைப் படுத்துவதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் எனப்படும் .

உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்துதல்:

முதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.

உயிர் : அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
ஆய்த எழுத்து : ஃ

(எ.கா):
ஒட்டகம் , இலை, அரும்பு, ஊஞ்சல்
விடை:
அரும்பு , இலை , ஊஞ்சல் , ஒட்டகம்

மெய்யெழுத்துக்களை வரிசைப்படுத்துதல் :

முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்.

மெய் : க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

(எ.கா):
நன்மை, நம்பகம் , நல்லது , நட்சத்திரங்கள்
விடை:
நட்சத்திரங்கள், நம்பகம், நல்லது, நன்மை

உயிர் மெய் எழுத்துக்களை வரிசைப்படுத்துதல் :

உயிர் மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்.
குறிப்பாக எக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது.

உயிர்மெய் எழுத்துகள் வரிசை:



(எ.கா):
மிருகம், முத்து, மௌனம், மதி
விடை:
மதி , மிருகம், முத்து , மௌனம்


அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்  சில எ.கா:

வினா:தண்ணீர், தாவரம், தேர், திங்கள், தென்னை
  • விடை:தண்ணீர், தாவரம், திங்கள், தென்னை, தேர்
வினா:பெறு, பூத்தல், பொறு, பேறு, பீலி, பைங்கூழ்
  • விடை:பீலி, பூத்தல், பெறு, பேறு, பைங்கூழ், பொறு
வினா:அற்றம், அங்கை, அர்ப்பணி, அட்டை, அச்சம், அவ்வவை
  • விடை:அங்கை, அச்சம், அட்டை, அர்ப்பணி, அவ்வவை, அற்றம்
வினா:ஏடகம், அறிவு, இருள், ஊண், உடுக்கை, உடம்பு, அற்றம்
  • விடை:அற்றம், அறிவு, இருள், உடம்பு, உடுக்கை, ஊண், ஏடகம்
வினா: முகில், மேகம், மண், மாலை
  • விடை: மண், மாலை, முகில், மேகம்
வினா: மாற்றம், தாய்மொழி, உரிமை, கடமை, வன்மை
  • விடை: உரிமை, கடமை, வன்மை, தாய்மொழி, மாற்றம்

கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக.

  • பூனை, தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை :

அகரவரிசை :

1. ஆசிரியர்
2. ஓணான்
3. கிளி
4. தேனி
5. தையல்
6. பழம்
7. பூனை
8. மனிதன்
9. மாணவன்
10. மான்
11. வௌவால்.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)