அயற்சொல் - தமிழ்ச்சொல் / AYARCHOL TAMILCHOL ARIDHAL TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0
AYARCHOL TAMILCHOL ARIDHAL

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்-அயற்சொல் - தமிழ்ச்சொல் அறிதல்:


பிற மொழிச் சொற்கள் / அயற்சொல்:

வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் சோழர் காலத்திலும் வடமொழிச் செல்வாக்கு மிகுந்தது. எனவேதான் நன்னூல் ஆசிரியர் பதவியல் என்ற இயலில் வடமொழியாக்கம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் தமிழகத்தின் ஒரு பகுதியை முஸ்லிம்கள் ஆண்டனர். அப்போது அரபு, உருது, பார்சிச் சொற்கள் தமிழில் புகுந்தன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் விஜய நகர நாயக்கர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆளத் தொடங்கிய போது தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மேலை நாட்டார் தொடர்பு ஏற்படவே போர்ச்சுக்கீஸ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலந்தன.


அயற்சொல் - தமிழ்ச்சொல் அறிதல்:

 பிற மொழி சொல்
தமிழ்ச் சொல்
காகிதம்
தாள்
கிரீடம்
மணிமுடி
புஷ்பம்
மலர்
உபயோகம்
பயன்
நஷ்டம்
இழப்பு
பாக்கி
நிலுவை
நிபுணர்
வல்லுநர்
இருதயம்
நெஞ்சகம்
குபேரன்
பெருஞ்செல்வன்
இலஞ்சம்
கையூட்டு
இலாபம்
வருவாய்
உத்தரவு
ஆணை
உத்தியோகம்
பணி
ப்ரொஜெக்டர்
படவீழ்த்தி
ரிஜிஸ்டர் போஸ்ட்
பதிவு அஞ்சல்
எவர்சில்வர்
நிலைவெள்ளி
லாண்டரி
வெளுப்பகம்
புல்லட்டின்
சிறப்புச்செய்தி இதழ்
டெட்லைன்
குறித்த காலம்
எடிட்டோரியல்
தலையங்கம்
ஃபேக் நியூஸ்
பொய்ச்செய்தி
ஃபிளாஷ் நியூஸ்
சிறப்புச்செய்தி
ஃபோலியோ எண்
இதழ் எண்
கிரீன் ப்ரூஃ
திருத்தப்படாத அச்சுப்படி
லே அவுட்
செய்தித்தாள் வடிவமைப்பு
டிமாண்ட் டிராப்ட்
வரைவோலை
ஏரோப்ளேன்
வானூர்தி
அப்பாயின்ட்மென்ட்
பணி அமர்த்தல்
பஸ்
பேருந்து
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
பல்பொருள் அங்காடி
அஸ்தெடிக்
இயற்கை வனப்பு
பயாலாஜி
உயிரியல்
கிளாசிக்கல் லாங்குவேஜ்
உயர்தனிச்செம்மொழி
டிக்ஷ்னரி
அகராதி
ஆர்டர் ஆஃ ப் நேச்சர்
இயற்கை ஒழுங்கு
ஸ்நாக்ஸ்
சிற்றுணவு
கோர்ட்
மன்றம்
டெலஸ்கோப்
தொலைநோக்கி
தெர்மா மீட்டர்
வெப்பமானி
இன்டர்நெட்
இணையம்
மதர்லேண்ட்
தாயகம்
சயின்ஸ்
அறிவியல்
மைக்ராஸ்கோப்
நுண்ணோக்கி
நம்பர்
எண்
செல்போன்
கைப்பேசி
பிரிட்ஜ்
குளிர்சாதனப்பெட்டி
டிவி
தொலைக்காட்சி
ரேடியோ
வானொலி
டிபன்
சிற்றுண்டி
டீ
தேநீர்
லைட்
விளக்கு
தம்ளர்
குவளை
சைக்கிள்
மிதிவண்டி
பிளாட்பாரம்
நடைபாதை
தியேட்டர்
திரை அரங்கு
ஆஸ்பத்திரி
மருத்துவமனை
மெடிக்கல் ஷாப்
மருந்தகம்
பைக்
விசையுந்து
ஹெலிகாப்டர்
உலங்கு வானூர்தி
யுனிவர்சிட்டி
பல்கலைகழகம்
அட்லஸ்
நிலப்படத்தொகுப்பு
கிரைண்டர்
அரவை இயந்திரம்
வாஷிங் மெஷின்
சலவை இயந்திரம்
அட்டெண்டன்ஸ்
வருகைப்பதிவு
கிளாத் ஸ்டோர்ஸ்
துணியங்காடி
ஆட்டோமொபைல்
தானியங்கி
காம்பாக்ட் டிஸ்க்
வட்டத்தகடு
S.S.L.C  எக்ஸாம்
இடைநிலைச் சான்று தேர்வு
ஜட்ஜ்
நீதிபதி
ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட்
ஆளறி சான்றிதழ்
விஞ்ஞானம்
அறிவியல்
அந்நியர்
அயலார்
அபிஷேகம்
நீராட்டு
ஈசன்
இறைவன்
ஆதவன்
ஞாயிறு
உபசரித்தல்
விருந்தோம்பல்
ஐதிகம்
உலக வழக்கு
உஷார்
விழிப்பு
ஹோட்டல்
உணவகம்
பார்லிமென்ட்
நாடாளுமன்றம்
டிசிப்ளின்
ஒழுக்கம்
இண்டஸ்ட்ரி
தொழிலகம்
வெரிபிகேஷன்
சரிபார்த்தல்
சக்சஸ்
வெற்றி
டீ பார்ட்டி
தேநீர் விருந்து
அங்கத்தினர்
உறுப்பினர்
அதிகாரி
அலுவலர்
அதிபர்
தலைவர்
அபூர்வம்
புதுமை
அலங்காரம்
ஒப்பனை
ஆபத்து
இடர்
ஆராதனை
வழிபாடு
ஆசீர்வாதம்
வாழ்த்து
குமாரன்
மகன்
சாவி
திறவுகோல்
ஜனங்கள்
மக்கள்
டைப்ரைட்டர்
தட்டச்சுப்பொறி
ரோடு
சாலை
பிளைட்
விமானம்
பேங்க்
வங்கி
ஏஜென்ட்
முகவர்
டிக்கெட்
பயணச்சீட்டு
ஸ்கூல்
பள்ளி
லைசென்ஸ்
உரிமம்
இண்டர்வ்யூ
நேர்காணல்
கெஸ்ட் ஹவுஸ்
விருந்தகம்
பிளாஸ்டிக்
நெகிழி
புனல்
வடிகுழலி
பீரோ
இழுப்பறை
ராக்கெட்
ஏவுகணை
ஆயுசு
வாழ்நாள்
உயில்
இறுதிமுறி
கவுன்சில்
மன்றம்
ரயில்
தொடர்வண்டி
பேனா
தூவல்
ரப்பர்
தேய்ப்பம்
அட்மிஷன்
சேர்க்கை
ஏஜென்சி
முகவாண்மை
ஆக்ஸிடென்ட்
நேர்ச்சி
கிரீன் ரூம்
பாசறை
கார்
மகிழுந்து
டாக்டர்
மருத்துவர்
ஆடியோ கேசட்
ஒலிப்பேழை
செக்
காசோலை
பைண்டிங்
கட்டமைப்பு
கேபிள்
கம்பிவடம்
சாக்பீஸ்
சுன்னக்கட்டி
லாரி
சரக்குந்து
நோட்புக்
குறிப்பேடு
சுவிட்சு
பொத்தான்
ஐஸ்வாட்டர்
குளிர்நீர்
கூல்ட்ரிங்க்ஸ்
குளிர்பானம்
ஃபுட் போர்டு
படிக்கட்டு
டைரி
நாட்குறிப்பு
டைப்பிஸ்ட்
தட்டச்சர்
வீடியோகேசட்
ஒளிப்பேழை
ஜெராக்ஸ்
ஒளிப்படி
கம்ப்யூட்டர்
கணினி
காலேஜ்
கல்லூரி
கலெக்டர்
ஆட்சியர்
கரண்ட்
மின்சாரம்
டெலிபோன்
தொலைபேசி
ஃபேன்
மின்விசிறி
சேர்
நாற்காலி
ஆபீஸ்
அலுவலகம்
சினிமா
திரைப்படம்




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)