BETI BACHAO BETI PADHAO SCHEME / பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்

TNPSC PAYILAGAM
By -
0
BETI BACHAO BETI PADHAO SCHEME



  • பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் கல்வியை உறுதிப்படுத்தவும் மாண்புமிகு பிரதமரால் 22 ஜனவரி 2015 அன்று ஹரியானா மாநிலத்தில் பானிபட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்திற்கான செயல்பாட்டு அமைச்சகமாகும்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, குழந்தை பாலின விகிதத்தில் (CSR) விரிவான மற்றும் குறிப்பிடத்தக்க சரிவை வெளிப்படுத்தியது. இது 1000 ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகள் என்ற மிகக் குறைந்த அளவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • 35 மாநிலங்களில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரியை விட குறைவான பிறப்பு விகிதத்தை கொண்டிருந்தன. 
  • எனவே, 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, குறைந்த குழந்தை பாலின விகிதத்தின் அடிப்படையில் இந்திய அரசு, யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய அனைத்து மாநிலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து, 100 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டில், குழந்தை பாலின விகிதம் மாநிலத்திலேயே மிகக் குறைவாக இருந்த கடலூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டின் குழந்தை பாலின விகிதம் 943/1000 என தேசிய விகிதமான 918/1000 ஐ விட அதிகமாக இருந்தது.


கடலூர் மாவட்டம், தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கான CSR கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

  மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011
  • இந்தியா 927 918
  • தமிழ்நாடு 942 943
  • கடலூர் 957 896
 
இந்த திட்டத்தின் நோக்கம்:

  • பாலின சார்ந்த பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுத்தல்.
  • பெண் குழந்தைள் உயிர் வாழ்வதையும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.
  • பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்களிப்பை உறுதி செய்தல்
  • இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தலைவர் மாவட்ட ஆட்சியர் ஆவார்.


திட்டத்தின் சாதனை:

  • கடலூர் மாவட்டத்தில் குழந்தை பாலின விகிதம் 2015ல் 886 ஆக இருந்தது 2016ல் 895 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2015-ல் 1.5% இருந்த மேல்நிலைப் பள்ளி (பெண்கள்) இடைநிற்றல் விகிதம் 2016-ல் 1.0% ஆகக் குறைந்துள்ளது.
  • இடைநிலைப் பள்ளி (பெண்கள்) இடைநிற்றல் விகிதம் 3.26% 2015ல் இருந்து 2016ல் 1.5% ஆகக் குறைந்துள்ளது.
  • சுகன்யா சமிரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 59491 குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
  • மாணவியர் விடுதி பள்ளி, கழிவறை மற்றும் தண்ணீர் வசதி, பெண்கள் பள்ளிகளில் எரியூட்டி நிறுவுதல் என அனைத்து உள்கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.


SOURCE : https://www.tnsocialwelfare.tn.gov.in/ta/node/6528








Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)