பாரத்போல் வலைதள சேவை:
- புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உருவாக்கியுள்ள , இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (2025-ம் ஆண்டு ஜனவரி 07) தொடங்கி வைத்தார்.
- வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க, இந்திய விசாரணை அமைப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்தே, இண்டர்போல் போன்று பாரத்போல் போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
- மத்திய புலானாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கியுள்ள இந்த போர்ட்டலின் மூலம் சர்வதேச முகமைகளின் உதவியை உடனடியாக கோர முடியும்.
- மேலும், இந்த போர்ட்டலில் மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகள் எளிதாக இண்டர்போல் உடன் இணைக்கப்பட்டு விசாரணையை துரிதப்படுத்த முடியும்.
- இந்தியாவில் சர்வதேச காவல் துறையின் தேசிய பணியகமாக உள்ள சிபிஐ அமைப்பானது சட்ட அமலாக்க முகமைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு புலனாய்வு முகமைககளுடன் இணைந்து குற்றவியல் தொடர்பான விஷயங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புடன் ஒத்துழைக்க இந்த இணையதளம் உதவுகிறது. மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள உதவுகிறது.
- இந்தியாவில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன்பிறகு வெளிநாடுகளில் தஞ்சமடையும் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த நவீன தொழி்நுட்பங்களை நமது முகமைகள் பயன்படுத்திக் கொள்ள இந்த புதிய பாரத்போல் போர்ட்டல் இணைப்பு உதவிகரமாக செயல்படும்.
- 195 உறுப்பு நாடுகளைக் கொண்ட இண்டர்போல் அமைப்பிலிருந்து மத்திய மற்றும் மாநில விசாரணை முகமைகள் தங்கள் வழக்குகளுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய பாரத்போல் போர்ட்டல் இணைப்பு பாலமாக செயல்படும்.
SOURCE : PIB