சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் திட்டம் 2024:
- நெடுஞ்சாலைகளில் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி 2024 பணமில்லா சிகிச்சை திட்டத்தை அமல்படுத்தியது.
- அதன்படி, சாலைகளில் விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தால், காயம் அடைந்தவருக்கு 7 நாட்கள் பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது.
- அதன்படி காயம் அடைந்தவர் ரூ.1.5 லட்சம் வரை பணமில்லாமல் சிகிச்சை பெறலாம். அத்துடன் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.இந்தத் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும்.
- பணமில்லா சிகிச்சை திட்டத்தின் மூலம் அசாம், சண்டிகர், பஞ்சாப், உத்தராகண்ட், புதுச்சேரி, ஹரியானாவில் இதுவரை 6,840 பேர் பலனடைந்துள்ளனர். இந்தத் திட்டம் மார்ச் மாதம் முதல் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயலுக்கு வரும்போது, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை காப்பாற்ற முடியும்.
- இந்த திட்டம் அசாம், சண்டிகர், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பணமில்லா சிகிச்சை திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
- 2024 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 1.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30,000 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர்.சாலை விபத்தில் மரணித்தவர்களில் 66% பேர் 18-34 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : இந்து தமிழ் திசை NEWS