தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்:அலகு II: சொல்லகராதி
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்:
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி புத்தகத்தில் (6th to 10 th Std Tamil Bpok) இருந்து எடுக்கப்பட்டதே.
பள்ளிக்குச் சென்று கல்வி ……………………. சிறப்பு.
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
விடை : அ) பயிலுதல்
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………………….
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
விடை : ஆ) ஓடை
ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
விடை : சமூகம்
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ____________________ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
விடை : அசதி
தாய் மொழியில் படித்தால் _________________ அடையலாம்
அ) பன்மை
ஆஈ) ) மேன்மை
இ) பொறுமை
சிறுமை
விடை : மேன்மை
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _________________ சுருங்கிவிட்டது
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
விடை : மேதினி
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ——————–
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கட்பேறு
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
விடை : அறிவுடைய மக்கட்பேறு
நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________
அ) நூலறிவு
ஆ) நுண்ணறிவு
இ) சிற்றறிவு
ஈ) பட்டறிவு
விடை : நுண்ணறிவு
தானே இயங்கும் இயந்திரம் _______________.
அ) கணினி
ஆ) தானியங்கி
இ) அலைபேசி
ஈ) தொலைக்காட்சி
விடை : தானியங்கி
வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
விடை : ஆ) முகில்
மொழியின் முதல்நிலை பேசுதல், …………………. ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
விடை : ஆ) கேட்டல்
ஒலியின் வரிவடிவம் …….. …… ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
விடை : ஆ) எழுத்து
பேச்சுமொழியை ………………….. வழக்கு என்றும் கூறுவர்.
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
விடை : ஆ) உலக
வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது ………………. மொழியாகும்.
அ) பேச்சுமொழி
ஆ) எழுத்துமொழி
இ) இரட்டை வழக்கு மொழி
ஈ) இவை ஏதும் இல்லை
விடை : ஆ) எழுத்துமொழி
வாழை, கன்றை …………
அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது
விடை : அ) ஈன்றது
குறில் எழுத்துகளைக் குறிக்க …………. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
அ) கரம்
ஆ) கான்
இ) கேனம்
ஈ) கோடை
விடை : அ) கரம்
நெடில் எழுத்துகளைக் குறிக்க ……….. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
அ) கேனம்
ஆ) கரம்
இ) கான்
ஈ) கோடை
விடை : இ) கான்
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ….
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
விடை : ஆ) கோலிக்குண்டு
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………………
அ) ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேக வைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
விடை : அ) ஒட்டிய பழங்கள்
ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ….
அ) காது
ஆ) தந்தம்
இ) கண்
ஈ) கால்கள்
விடை : ஆ) தந்தம்
விடை : ஈ) பணம் கிடைத்தது
வாய்மை எனப்படுவது.
அ) அன்பாகப் பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்
விடை : ஆ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
……… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
விடை : ஈ) பொறாமை உள்ளவன்
‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது
விடை : ஆ) எங்கு
ஊர்வலத்தின் முன்னால்……………….. அசைந்து வந்தது.
அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்
விடை : இ) வாரணம்
பாஞ்சாலங்குறிச்சியில் ……………. நாயை விரட்டிடும்.
அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி
விடை : அ) முயல்
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடி வீடு
விடை : ஈ) மாடி வீடு
வேயாமாடம் எனப்படுவது ………..
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது
விடை : ஆ) சாந்தினால் பூசப்படுவது
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……………….
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்
விடை : இ) கடல்
தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ……..
அ) கலம்
ஆ) வங்கம்
இ) நாவாய்
ஈ) ஓடம்
விடை : ஈ) ஓடம்
தொல்காப்பியம் கடற்பயணத்தை …………………….. வழக்கம் என்று கூறுகிறது.
அ) நன்னீ ர்
ஆ) தண்ணீ ர்
இ) முந்நீர்
ஈ) கண்ணீ ர்
விடை : இ) முந்நீர்)
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ……………….
அ) சுக்கான்
ஆ) நங்கூரம்
இ) கண்ண டை
ஈ) சமுக்கு
விடை : அ) சுக்கான்
பெண்க ளுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……
அ) மயில்
ஆ) குயில்
இ) கிளி
ஈ) அன்னம்
விடை : அ) மயில்
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
விடை : ஆ) கல்வி
கல்வியைப் போல் , ……………….. செல்லாத செல்வம் வேறில்லை .
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
விடை : ஆ) கேடில்லாத
கல்வியில்லாத நாடு ……………………… வீடு.
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
விடை : அ) விளக்கில்லாத
மயிலும் மானும் வனத்திற்கு ………………………… தருகின்ற ன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
விடை : ஆ) வனப்பு
மிளகாய் வற்றலின் ……………… தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
விடை :அ) நெடி
அன்னை தான் பெற்ற ………….. ….. சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
விடை : இ) மழலையின்
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ………. இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு
இ) ஏழ்மை
ஈ) செல்வம்
விடை : அ) சோம்பல்
மரம் வளர்த்தால் …………………………….. பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
விடை : ஆ) மாரி
உழவர் சேற்று வயலில் ………………………. நடுவர்.
அ) செடி
ஆ) பயிர்
இ) மரம்
ஈ) நாற்று
விடை : ஈ) நாற்று
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை …………………… செய்வர்.
அ) அறுவடை
ஆ) உழவு
இ) நடவு
ஈ) விற்பனை
விடை : அ) அறுவடை
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ………
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
விடை : அ) வைப்பு
பறவைகள் ………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
விடை : ஆ) விசும்பில்
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………… –
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
விடை : அ) மரபு
செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
விடை : ஆ) ஓடை
பள்ளிக்குச் சென்று கல்வி ……………… சிறப்பு
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
விடை : அ) பயிலுதல்
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் …………….
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
விடை : ஆ) கல்லாதவர்
உடல்நலம் என்பது …………….. இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
விடை : இ) பிணி
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது …………..
அ) விளக்கு
ஆ) கல்வி
இ) விளையாட்டு
ஈ) பாட்டு
விடை : ஆ) கல்வி
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் …………..
அ) இளமை
ஆ) முதுமை
இ) நேர்மை
ஈ) வாய்மை
விடை : அ) இளமை
பசியால் வாடும் ……………. உணவளித்தல் நமது கடமை.
அ) பிரிந்தவர்க்கு
ஆ) அலந்தவர்க்கு
இ) சிறந்தவர்க்கு
ஈ) உயர்ந்தவருக்கு
விடை : ஆ) அலந்தவர்க்கு
நம்மை …………..ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை
ஆ) அகழ்வாரை
இ) புகழ்வாரை
ஈ) மகிழ்வாரை
விடை : அ) இகழ்வாரை
மறைபொருளைக் காத்தல் …………….. எனப்படும்.
அ) சிறை
ஆ) அறை
இ) கறை
ஈ) நிறை
விடை : ஈ) நிறை
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ………………. தகுதி அறிந்து பேச வேண்டும்.
அ) சொல்லின்
ஆ) அவையின்
இ) பொருளின்
ஈ) பாடலின்
விடை : ஆ) அவையின்
என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ………………….. பெருகிற்று.
அ) காரி
ஆ) ஓரி
இ) வாரி
ஈ) பாரி
விடை : இ) வாரி
சிங்கம் ……………….. யில் வாழும்.
அ) மாயை
ஆ) ஊழி
இ) முழை
ஈ) அலை
விடை : இ) முழை
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ……………… க் கண்டு அஞ்சமாட்டார்கள்.
அ) புலனை
ஆ) அறனை
இ) நமனை
ஈ) பலனை
விடை : இ) நமனை
மனிதர்கள் தம் ……………. தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
அ) ஐந்திணைகளை
ஆ) அறுசுவைகளை
இ) நாற்றிசைகளை
ஈ) ஐம்பொறிகளை
விடை : ஈ) ஐம்பொறிகளை
ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ……………..
அ) பகர்ந்தனர்
ஆ) நுகர்ந்த னர்
இ) சிறந்தனர்
ஈ) துறந்தனர்
விடை : அ) பகர்ந்தனர்
வறுமை வந்த காலத்தில் …………….. குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்பம்
ஆ) தூக்கம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
விடை : இ) ஊக்கம்
ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
அ) குலம்
ஆ) குளம்
இ) குணம்
ஈ) குடம்
விடை : அ) குலம்
அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.
அ) உவகை
ஆ) நிறை
இ) அழுக்காறு
ஈ) இன்பம்
விடை : இ) அழுக்காறு
இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக:
1. சிறுமி ……………… (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ……………… (தனது தமது) உழைப்பை நல்கினார்.
3. உயர்ந்தோர் …………… (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.
4. இவை ………………. (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.
5. குழந்தைகள்……………. (தன்னால் தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.
விடை :
1. தனது
2. தமது
3. தம்மைத்தாமே
4. தாம்
5. தம்மால்
அறிவை மறந்ததாக …… இருக்கக் கூடாது.
அ) உணர்ச்சி
ஆ) வேகம்
இ) செயல்
ஈ) பண்பாடு
விடை: அ) உணர்ச்சி
கழனிகள் சுமக்க வேண்டியது ……
அ) கதிர்கள்
ஆ) வெம்பிய பழங்கள்
இ) வறண்ட தாவரம்
ஈ) அழுகிய பொருள்கள்
விடை: அ) கதிர்கள்
உணவினை ஆக்கல் மக்கட்கு ……….. அன்றோ
அ) உயிர் ஆக்கல்
ஆ) உயிர் அழித்தல்
இ) உணவாக்கல்
ஈ) உணவழித்தல்
விடை : அ) உயிர் ஆக்கல்
கல்வியை உடைய பெண்கள் …………… ஆவார்.
அ) உவர் நிலம்
ஆ) பண்படாத நிலம்
இ) திருந்திய கழனி
ஈ) கிணற்றுத் தவளை
விடை : இ) திருந்திய கழனி
விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது எது …………
அ) மைல்கல்
ஆ) சுடுகல்
இ) நடுகல்
ஈ) கருங்கல்
விடை : இ) நடுகல்
சிற்பிகள் …………. என சிறப்பிக்கப்பட்டனர்.
அ) கல்லோவியர்கள்
ஆ) கற்கவிஞர்கள்
இ) கற்சொல்லோவியர்கள்
ஈ) சுவரோவியர்கள்
விடை : ஆ) கற்கவிஞர்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- 1. சிரம் என்பது தலை (தலை / தளை )
- 2. இலைக்கு வேறு பெயர் தழை (தளை / தழை)
- 3. வண்டி இழுப்பது காளை (காலை/காளை)
- 4. கடலுக்கு வேறு பெயர் பரவை (பரவை / பறவை)
- 5. பறவை வானில் பறந்தது (பறந்தது/பரந்தது)
- 6. கதவை மெல்லத் திறந்தான் (திறந்தான் / திரந்தான்)
- 7. மணம் வீசும். (மனம்/மணம்)
- 8. புலியின் கண் சிவந்து காணப்படும். (கன்/கண்)
- 9. குழந்தைகள் பந்து விளையாடினர். (பந்து/பன்து)
- 10. வீட்டு வாசலில் கோலம் போட்டனர். (கோலம்/கோளம்)