வீரமாமுனிவர் (1680 – 1747)
(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]-தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்)
அறிமுகம்:
- இத்தாலி, கேசுதிகிலியோன் என்ற சிற்றூரில் நவம்பர் 8-ந்தேதி பிறந்த கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி கிறித்துவ மதம் பரப்பும் நோக்கில் 1710-ஆம் ஆண்டு தமிழகம் வந்தார்.
- அதற்காக சுப்பிரதீபக்கவிராயர் என்பவரிடம் தமிழ் கற்றார்.
- தமிழ் மேல் கொண்ட பற்று காரணமாக தன் பெயரை நல்ல தமிழில் வீரமாமுனிவர் என தன் இயற்பெயரின் பொருள்பட மாற்றிக் கொண்டார்.
- இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.
தமிழ் மற்றும் இலக்கியப் பணி :
- இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
- உயிர் எழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களில் நெடில் ஓசையை குறிப்பதற்காக “ஆ, ஏ” எனவும் மற்றும் நெட்டெழுத்து கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே,பே) வழக்கத்தை உண்டாக்கியவர்.
- இவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள், இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
படைப்புகள்:
- தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
- கவிதை வடிவில் இருந்து வந்த தமிழ் இலக்கிய இலக்கணங்களை எளிய உரைநடையாக மாற்றினார்.
- தமிழ்–லத்தீன் அகராதியை உருவாக்கினார். இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.
- 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
- பெயரகராதி', 'பொருளகராதி', 'தொகையகராதி', 'தொடையகராதி' ஆகிய அகராதிகளை அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தார்.
- ‘சதுரகராதி’ உருவாக்கி நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தார்
- வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், பரமார்த்தகுரு கதை, திருக்காவலூர்க்கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, தேம்பாவணி உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்
மொழிபெயர்ப்புகள்:
- மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் சிறப்பை மேல்நாட்டார் உணர, திருக்குறளில் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
- தேவாரம், திருப்புகழ், நன்னூல் ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
விருதுகள்/பட்டங்கள்/சிறப்புகள் :
- இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால் இவர் ‘சுவடி தேடும் சாமியார்’ எனவும்,
- மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், "தமிழ் அகராதியின் தந்தை" எனவும்,
- தேம்பாவணி இயற்றியதற்காக “செந்தமிழ் தேசிகர்“ எனவும் போற்றப்பட்டார்.
நன்றி: Annacentenarylibrary