CONSUMER PRICE INDEX (CPI) - INDIA (DECEMBER 2024) / நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் டிசம்பர் 2024

TNPSC PAYILAGAM
By -
0

CONSUMER PRICE INDEX (CPI) - INDIA


நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் டிசம்பர் 2024


  • ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு எண்  அடிப்படையிலான பணவீக்க விகிதம் 2024-ம் ஆண்டு  டிசம்பர்  மாதத்தில் 2023 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 5.22 சதவீதமாக (தற்காலிக கணக்கீடு) உள்ளது. ஊரக, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதங்கள் முறையே 5.76% மற்றும் 4.58% ஆகும்.
  • 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு எண்  அடிப்படையிலான பணவீக்க விகிதம் 8.39% ஆகும்.கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதம் முறையே 8.65% மற்றும் 7.90% ஆகும். 
  • 2023 டிசம்பர் மாதத்திற்கு பிறகு, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் (பொது) மற்றும் நுகர்வோர் உணவுப் பொருள் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டிற்குமான பணவீக்க விகிதம் 2024 மே மாதம் வரை குறைந்து வந்துள்ளதைக் காணமுடியும். 
  • நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (பொது) 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மிகக் குறைந்த புள்ளியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2024 டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் (பொது), உணவு பணவீக்கம் விகிதம் கடந்த நான்கு மாதங்களை விட  குறைவானதாக உள்ளது.
  • 2024 டிசம்பர் மாதத்திற்கான வருடாந்திர வீட்டு பணவீக்க விகிதம் 2.71% ஆகும். 2024 நவம்பர் மாதத்திற்கான பணவீக்க விகிதம் 2.87% ஆக இருந்தது. வீட்டுவசதி குறியீடு நகர்ப்புறங்களுக்கு மட்டுமே தொகுக்கப்படுகிறது.
  • 2024 டிசம்பர் மாதத்தில் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  காய்கறிகள், பருப்பு வகைகள், தயாரிப்புகள், சர்க்கரை, மிட்டாய், தனிப்பட்ட பராமரிப்பு, தானியங்கள்  போன்றவற்றில் இந்த வீழ்ச்சி காணப்பட்டது.


Source : PIB 



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)