சிதம்பரம் நடராஜரின் உருவப்படம் பொறித்த நிரந்தர முத்திரை அறிமுகம் :
- ஆருத்ரா தேரோட்டத்தையொட்டி ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்ற சிதம்பரத்திற்கு நிரந்தர முத்திரையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.(ஆருத்ரா தேரோட்டத்தையொட்டி கோவில் தேர் இடம் பெற்றுள்ள சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது)
- அஞ்சல் துறை கலை, பக்தி மற்றும் பாரம்பரியத்தின் பெருமை ஆகிய காலத்தால் அழியாத அடையாளமான சிதம்பரம் நடராஜர் கோயிலின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் நடராஜரின் கம்பீரமான உருவம் இடம்பெறுகிறது. வருடாந்திர கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
- இந்த நிகழ்வில் தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் டி.நிர்மலா தேவி சிறப்பு உறையை வெளியிட்டார். நடராஜரின் நிரந்தர முத்திரை சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சி-டாட் - ஐஐடி மண்டி இடையே குறை மின்கடத்தி சிப் உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து:
- உள்நாட்டு அதிநவீன அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மை நிறுவனமான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமானது (சி-டாட்) மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஜம்முவில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. தொலைதொடர்பு அலைக்கற்றை பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான அகண்ட அலைவரிசை அலைக்கற்றைக்கான சென்சார் ஏஎஸ்ஐசி-சிப் உருவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டம், தொலைத்தொடர்பு சானதங்களின் தயாரிப்புகள், வடிவமைத்தல், வர்த்தகமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளுக்கும் உதவுகிறது. இத்திட்டம் குறைந்த விலையில் அகண்ட அலைவரிசைக்கான மொபைல் சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டம்:
- மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார ஆணையம் ஒடிசா மாநில அரசின் சுகாதார, குடும்ப நலத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதையடுத்து, ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தை செயல்படுத்திய 34-வது மாநிலமாக ஒடிசா இணைந்துள்ளது.
- ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டம் ஒடிசாவில் தற்போது நடைமுறையில் உள்ள கோபபந்து மக்கள் சுகாதார திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 1.03 கோடி குடும்பங்கள் பயனடையும். ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் வரும், 67.8 லட்சம் குடும்பங்கள் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடையும்.
நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் டிசம்பர் 2024 -15.84%வளர்ச்சியை பதிவு செய்துள்ளது:
- 2024 டிசம்பர் நிலவரப்படி, நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 209.44 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் மாதத்தின் 180.80 ஜிகாவாட்டுடன் ஒப்பிடும்போது 15.84% அதிகரிப்பைக் குறிக்கிறது.
- 2024-ம் ஆண்டில் மொத்த எரிசக்தி திறன் சேர்ப்பு 28.64 ஜிகாவாட்டாக இருந்தது. இது 2023-ம் ஆண்டின் 13.05 ஜிகாவாட்டுடன் ஒப்பிடும்போது 119.46% ஆண்டு வளர்ச்சியை குறிக்கிறது.
- 2024 ஆம் ஆண்டில், சூரிய சக்தி 24.54 ஜிகாவாட் சேர்க்கப்பட்டது . 2023-ல் ஒட்டுமொத்த நிறுவுதிறன் 73.32 ஜிகாவாட்டிலிருந்து 2024-ம் ஆண்டு 97.86 ஜிகாவாட்டாக அதிகரித்து உள்ளது. இது 33.47% அதிகரிப்பாகும்.
- காற்றாலை எரிசக்தியும் இந்த விரிவாக்கத்திற்கு பங்களித்துள்ளது. 2024-ம் ஆண்டில் கூடுதலாக 3.42 ஜிகாவாட் காற்றாலை மின்சாரம் நிறுவப்பட்டது. இது மொத்த காற்றாலை எரிசக்தியை 48.16 ஜிகாவாட்டாக அதிகரித்தது. 2023-ம் ஆண்டில் இருந்து இது 7.64% வளர்ச்சியாகும்.
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் டிசம்பர் 2024
- ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2023 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 5.22 சதவீதமாக (தற்காலிக கணக்கீடு) உள்ளது. ஊரக, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதங்கள் முறையே 5.76% மற்றும் 4.58% ஆகும்.
- TNPSC EXAM KEY NOTES : CONSUMER PRICE INDEX (CPI) - INDIA (DECEMBER 2024)
உயிரி உற்பத்தி மற்றும் பயோஃபவுண்டரி முன்முயற்சி-ஐந்தாவது இணைய வழி கருத்தரங்கம்:
- மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, தனது உயிரி தொழில், உயிரி உற்பத்தி முன்முயற்சி குறித்த தொடரில் ஐந்தாவது இணைய வழி கருத்தரங்கை (ஜனவரி 13) நடத்தியது.
- இந்த இணையவழி அமர்வானது பயோ இ3 கொள்கையின் கீழ் முக்கிய களமான "பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் விவசாயத்திற்கான உயிரி உற்பத்தி" என்பதில் கவனம் செலுத்தியது.
- ஆகஸ்ட் 2024-ல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பயோ இ3 கொள்கை, உயிரி அடிப்படையிலான கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகளாவிய தலைமையிடத்தில் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பயோ இ3 என்பது பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம் ஆகும்.
தேசிய மஞ்சள் வாரியம்:
- தேசிய மஞ்சள் வாரியத்தை (National Turmeric Board ) மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் புதுதில்லியில் தொடங்கி வைத்தார். திரு பியூஷ் கோயல் அதன் முதல் தலைவராக திரு பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இது மஞ்சள் உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகள், உலகளாவிய மேம்பாடு, மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றுக்கான சிறந்த வாய்ப்புகளை உறுதி செய்யும். இது விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சீராகப் பயனளிக்கும்.
- மஞ்சள் 'கோல்டன் ஸ்பைஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட வாரியம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும்
- மஞ்சள் வாரியத்தை அமைப்பது நாட்டில் மஞ்சள் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும்
- உலகின் அதிகளவு மஞ்சள் உற்பத்தியாளர், நுகர்வோர், ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது
- தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் 30 ரகங்களில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது
- கடந்த ஆண்டு 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.05 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு 10.74 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..