CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (15.01.2025 - 16.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (15.01.2025 - 16.01.2025)



பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்:

  • உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
  • உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது.
  • மகா கும்பமேளா (14.01.2025 -26.02.2025 )பிப்ரவரி 26-ம் தேதி வரை ஒன்றரை மாத காலம் இந்த விழா நடைபெற உள்ளது. கோடிக்கணக்கில் பக்தர்கள் குவிவதால், 4,000 ஹெக்டேர் பரப்பளவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1.60 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா திருவிழாவுக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
  • மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.5,000 செலவு செய்தால்கூட, 40 கோடி பேர் வரும்பட்சத்தில் உத்தர பிரதேச மாநில அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் மதிப்பீடாக உள்ளது.


கடற்படை பயன்பாட்டுக்காக நீர்மூழ்கி உட்பட 3 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி:

  • கடற்படை பயன்பாட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை, மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ கிளாஸ் (Yard 12651 (Nilgiri) -Stealth Frigate ) மற்றும் பி15பி கிளாஸ் (Yard 12707 (Surat)-Stealth Guided Missile Destroyer) கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 

பி17ஏ கிளாஸ் (Yard 12651 (Nilgiri) -Stealth Frigate )  போர்க் கப்பல்: 
  • பி17ஏ ரக கப்பலான ஐஎன்எஸ் நீல்கிரி கப்பல் கடலில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த போர்க்கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், இதில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 
  • எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் நெருங்கினால் இதில் உள்ள சென்சார் கருவிகள் உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கும். 
  • அவற்றை தாக்குதவதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் இந்த கப்பலில் உள்ளன. இந்த போர்க்கப்பலுக்கு உதவியாக எந்த துணை போர்க்கப்பல்களும் செல்லத் தேவையில்லை. 
  • எங்கும் தனியாக செல்லும் முன்னணி கப்பலாக இது கடற்படையில் இருக்கும்.
பி15பி கிளாஸ் (Yard 12707 (Surat)-Stealth Guided Missile Destroyer) போர்க் கப்பல்:
  • பி15 பி ரகத்தில் ஐஎன்எஸ் சூரத் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் பராக்-8 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவமுடியும். 
  • மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஆயுதங்களும், சென்சார்கள் இதில் உள்ளன. 
  • கப்பலின் அடிப் பகுதியில் சோனார் ஹம்சா என்ஜி, டார்பிடோ ஏவுகணைகளை ஏவும் ட்யூப் லாஞ்சர், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட் லாஞ்சர் ஆகியைவை இந்த கப்பலில் உள்ளன.
  • இந்திய கடற்படையின் முந்தைய போர்க்கப்பல்களை விட அதிகளவிலான வசதிகள், இந்த புதிய போர்க்கப்பல்களில் உள்ளன. எதிரி படைகளின் தாக்குதலையும் தடுக்கும் திறனும் இந்த போர்க்கப்பலில் உள்ளது.
பி75 ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி கப்பல் :
  • பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6-வது மற்றும் கடைசி பி75 ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி கப்பலுக்கு ஐஎன்ஸ் வக்ஷீர் என பெயரிடப்பட்டுள்ளது.

காசி தமிழ்ச் சங்கமம் 3.0:

  • பிரதமர் மோடி​யின் மக்களவை தொகு​தியான வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் 1 மற்றும் 2 நிகழ்ச்​சிகள் கடந்த 2022, 2023-ம் ஆண்டு​களில் சிறப்பாக நடைபெற்றன. அதன் தொடர்ச்​சியாக 3-வது ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் 3.0, பிப்​ரவரி 15 முதல் 24 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
  • இந்த முறை காசி தமிழ்ச் சங்கமம் 3.0-ன் மூலக்​கருத்தாக தமிழ் இலக்​கி​யத்தை முதன்​முறையாக எழுதிய மகரிஷி அகத்திய முனி என்று வைக்​கப்​பட்​டுள்​ளது
  • கடந்த முறையை போலவே, வாராணசி​யின் கங்கை கரைகளில் ஒன்றான நமோ காட்​டில் இந்நிகழ்ச்​சி​கள் நடைபெற உள்ளன. 
  • இந்நிகழ்ச்​சிக்கான வருகை பதிவுகளை தேர்வு செய்​ய​ நேற்று சென்னை ஐஐடி​யின் இணைய தளம் (kasitamil.iit.m.ac.in) தொடங்​கப்​பட்​டுள்​ளது. 


விரைவான குடியேற்ற சேவை திட்டம் (Fast Track Immigration - Trusted Traveller Programme (FTI-TTP):

  • நாடு முழு​வதும் 21 முக்கிய விமான நிலை​யங்​களில் நம்பகமான பயணி​யருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்​டிஐ-டிடிபி) செயல்​படுத்​தப்பட உள்ளது.
  • இத்திட்​டத்தை டெல்லி இந்திரா காந்தி விமான நிலை​யத்​தின் 3 முனை​யத்​தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி தொடங்கி வைத்​தார்.
  • இதையடுத்து மும்பை, சென்னை, கொல்​கத்தா, பெங்​களூரு, ஹைதரா​பாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலை​யங்​களில் இத்திட்டம் இன்று தொடங்​கப்​படுகிறது. அகமதாபாத்​தில் இருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பயணி​களுக்கு உலகத்​தரம் வாய்ந்த வசதிகளை வழங்​க​வும் சர்வதேச பயணத்தை தடையற்​ற​தாக​வும் பாது​காப்​பாக​வும் ​மாற்​ற​ இத்​திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.


சோனமார்க் சுரங்கப்பாதை:

  • சோனமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இது ஸ்ரீநகர்- லே நகர் இடையிலான என்எச்-1 சாலையை இணைக்கிறது.
  • 6.5 கி.மீ. நீளத்தில் 10 மீட்டர் அகலத்தில் இருவழிச் சாலையாக சுரங்கப்பாதை கட்டப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு சோனமார்க் மலைப்பகுதியை கடந்து செல்ல சுமார் 3 மணி நேரம் ஆகும். தற்போது சுரங்கப்பாதை வழியாக 20 நிமிடங்களில் சோனமார்க் பகுதியை கடந்து செல்ல முடியும். மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும். ஒரு மணி நேரத்தில் 1,000 வாகனங்கள் சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியும்.
  • ராணுவ பயன்பாடு மட்டுமன்றி உள்ளூர் மக்களுக்கும் புதிய சுரங்கப்பாதை வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக காஷ்மீர், லடாக்கின் சுற்றுலா மேலும் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சோனமார்க் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2005-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டு,2012-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு சோனமார்க் சுரங்கப் பாதை பணிகள் வேகம் பெற்றன. 
  • ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தில் ரூ.2,700 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் சுரங்கப்பாதையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகளால் சுரங்கப்பாதை திறக்கப்படவில்லை.

 
லாஸ் ஏஞ்சல்ஸ்-காட்டுத் தீ:

  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால், இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ். இங்குதான் ஹாலிவுட் பகுதி உள்ளது.
  • கடந்த 7-ம் தேதி இங்கு ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து 5 நாட்களாக வேகமாக பரவி வருகிறது. கடந்த 8 மாதங்களாக போதிய மழை பொழிவு இல்லாததால் வறண்டு காணப்பட்ட இப்பகுதியில் ஏற்பட்ட தீ, பலத்த காற்று வீசியதன் காரணமாக காட்டுத் தீயாக மாறி வேகமாக பரவியது. இதனால், லட்சக்கணக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வெளியேற வேண்டிய கட்டாயத்தில் மேலும் பல லட்சம் மக்கள் உள்ளனர்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Post a Comment

0Comments

Post a Comment (0)