சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல்:
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மூன்றாவது ஏவுதளத் திட்டமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கான ஏவுதள கட்டமைப்பை உருவாக்குவதோடு ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்திற்கான ஆயத்த ஆதரவு ஏவுதளமாக செயல்படவும் செய்யும். இது எதிர்கால இந்திய மனித விண்வெளிப் பயணங்களுக்கான செலுத்துதல் திறனையும் மேம்படுத்தும். இந்த திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.
- டிஎல்பி எனப்படும் மூன்றாவது ஏவுதளமானது என்ஜிஎல்வி (NGLV) மட்டுமின்றி, எல்விஎம்3 (LVM3) வாகனங்களையும் செமிக்ரையோஜெனிக் நிலை, என்ஜிஎல்வியின் (NGLV-ன்) உள்ளமைவுகளையும் ஆதரிக்கக்கூடிய உலகளாவிய உள்ளமைவைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்படும். முந்தைய ஏவுதளங்களை நிறுவியதிலும், தற்போதுள்ள ஏவுதள வசதிகளை அதிகபட்சமாக பகிர்ந்து கொள்வதிலும் இஸ்ரோவின் அனுபவத்தை
- முழுமையாகப் பயன்படுத்தி, அதிகபட்ச தொழில்துறை பங்களிப்புடன் இது நிறைவேற்றப்படும். இது 4 வருட காலத்திற்குள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- செலவு:ஏவுதளம் அமைப்பது, அதனுடன் தொடர்புடைய வசதிகள் என அனைத்திற்கும் மொத்த நிதி தேவை ரூ. 3984.86 கோடியாகும்.
நடுத்தர தூர வான் ஏவுகணை ஒப்பந்தம்:
- இந்திய கடற்படைக்கு மேற்பரப்பில் இருந்து நடுத்தர தூர வான் ஏவுகணைகளை (Medium-Range Surface-to-Air Missiles (MRSAM)) வழங்குவதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ( Bharat Dynamics Limited (BDL)) நிறுவனத்துடன் சுமார் ரூ. 2,960 கோடி மதிப்பில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- (2025 ஜனவரி 16) புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளும் பிடிஎல் நிறுவன அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பு ஒரு நிலையான அமைப்பாகும். தற்போது வாங்க கையெழுத்திடப்பட்டுள்ள ஏவுகணைகள் வருங்கால கப்பல்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்தை உள்நாட்டு மயமாக்குவதற்கும் நடந்து வரும் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
- தற்சார்பு இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தி, இந்த ஏவுகணைகள் பெரும்பாலும் உள்நாட்டு உள்ளடக்கத்துடன் பிடிஎல் நிறுவனத்தால் உருவாக்கப்படும். இந்த ஒப்பந்தம் பல்வேறு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பாதுகாப்புத் துறையில் சுமார் 3.5 லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும்.
விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2024 / SPORTS AND ADVENTURE AWARDS 2024:
- குடியரசுத்தலைவர் மாளிகையில் (ஜனவரி 17,2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2024-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது -2024; துரோணாச்சாரியா விருது-2024 ; அர்ஜுனா விருது -2024 ; டென்சிங் நார்கே தேசிய சாகச விருது -2023 ; தேசிய விளையாட்டு ஊக்கத்தொகை விருது -2024 ; மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பை -2024 ஆகியவை இந்த விருதுகளில் அடங்கும்.
- சிறந்த செஸ் விளையாட்டு வீரர் டி. குகேஷ், ஹாக்கி விளையாட்டு வீரர் ஹர்மன் பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார், துப்பாக்கிச் சுடும் வீரர் மனுபாக்கர் ஆகியோருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.
- பேட்மிண்டன் பயிற்சியாளர் எஸ் முரளிதரன் உட்பட 5 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதுகள் வழங்கப்பட்டன.
- 34 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டன.
- சாகச செயல்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது 2023 4 பேருக்கு வழங்கப்பட்டது.
- தேசிய விளையாட்டு ஊக்கத்தொகை விருது 2024, இந்திய உடற்பயிற்சி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது
- பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பை வழங்கப்பட்டது.
உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025:
- இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான கண்காட்சியான உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ஐ (பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -Bharat Mobility Global Expo 2025) பிரதமர் திரு நரேந்திர மோடி (17 ஜனவரி 2025) காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.
- இந்தக் கண்காட்சி 2025 ஜனவரி 17 முதல் 22 வரை மூன்று தனித்தனி இடங்களில் நடைபெறும்: புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் மார்ட் ஆகிய இடங்களில் இது நடைபெற உள்ளது.
- இக்கண்காட்சியில் ஒரே நேரத்தில் 9-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், 20-க்கும் அதிகமான கருத்தரங்குகள் இடம்பெறும். மேலும், வாகனத் தொழில்துறையில் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலான முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் நோக்கில் மாநிலங்களின் அமர்வுகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.
- பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 எனப்படும் உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சியானது முழு போக்குவரத்து மதிப்புச் சங்கிலியையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாக, மின்சார இயக்கத்தில் இந்தியா விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 640 மடங்கு அதிகரித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வருடத்தில் சுமார் 2600 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன, ஆனால் 2024 ஆம் ஆண்டில், 16 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முழு ஆண்டில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களை விட இன்று ஒரே நாளில் இரண்டு மடங்கு மின்சார வாகனங்கள் விற்கப்படுகின்றன.
- இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. இதை ஒரு பயணிகள் வாகன சந்தையாக நாம் பார்த்தால், நாம் உலகில் 3- வது இடத்தில் இருக்கிறோம்.கடந்த ஆண்டில் இந்திய வாகன உற்பத்தித் துறை சுமார் 12 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது
இந்தியாவின் முதலாவது தனியார் செயற்கைக்கோள் தொகுப்பு:
- பிக்சல்ஸ்பேஸ் நிறுவனம் செலுத்திய இந்தியாவின் முதலாவது தனியார் செயற்கைக்கோள் தொகுப்பு இந்திய இளைஞர்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். விண்வெளித் தொழிலில் நமது தனியார் துறையின் விரிவடைந்து வரும் திறன்களை இது எடுத்துக்காட்டுகிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
- சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: "பிக்சல்ஸ்பேஸ் நிறுவனம் @PixxelSpace செலுத்திய இந்தியாவின் முதலாவது தனியார் செயற்கைக்கோள் தொகுப்பு இந்திய இளைஞர்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்துகிறது. விண்வெளித் துறையில் நமது தனியார் துறையின் விரிவடைந்து வரும் திறன்களை எடுத்துக்காட்டுகிறது."
சஞ்சார் சாத்தி மொபைல் செயலி, தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0:
- நாடு முழுவதும் தொலைத் தொடர்பு அணுகல், பாதுகாப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா (17.01.2025) குடிமக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தினார்.
- சஞ்சார் சாத்தி மொபைல் செயலி, தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0, டிபிஎன் நிதியுதவி பெறும் 4ஜி மொபைல் தளங்களில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதியின் தொடக்கம் ஆகியவை இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களாகும்.
கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கான விதிகள் 1994-ல் முக்கிய திருத்தங்களை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது:
- உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களின் பதிவு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கான விதிகள் 1994-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் 17.01.2025 முதல் அமலுக்கு வருகின்றன.
- இதன்படி, உள்ளூர் கேபிள் ஒளிபரப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் பதிவுகள் இந்த அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முற்றிலும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும்.
பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோ:
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
- ‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம் வழங்கப்பட்டது.
நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்கான் ஒப்பந்தம்:
- நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, எஸ்ஜெவிஎன் நிறுவனம், ஜிஎம்ஆர் எனர்ஜி நிறுவனம், நேபாள மின்சார ஆணையம் ஆகியவை இணைந்த கூட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி அப்பிராந்தியத்தில் மின் சக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- திட்ட மேம்பாடு, கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவது இந்த ஒப்பந்தத்தின் அம்சமாகும். மின் உற்பத்தி திட்டத்தின் செயலாக்கம், பகிர்மானம் போன்ற முன்மாதிரியின் அடிப்படையில் அதற்கான வர்த்தக செயல்பாடு தொடங்கிய தேதியிலிருந்து 25 ஆண்டுகாலத்திற்கு இத்திட்டம் செயல்பட இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..