திருவள்ளுவர் கலாச்சார மையம்:
- பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு இலங்கை சென்றபோது யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கலாச்சார மையத்தை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
- இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் கலாச்சார மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் பதவியேற்கிறார்:
- அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார்.
- புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்if ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்கிறார்.
ஸ்வமித்வா திட்டம்:
- 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் வழங்கினார்.
கோகோ உலகக் கோப்பை 2025:
- 2025 கோகோ உலகக் கோப்பை தொடரில் மகளிர் பிரிவு மற்றும் ஆடவர் பிரிவு என இரண்டு பிரிவுகளிலும் உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்து இருக்கிறது இந்திய அணி. உலகிலேயே முதன்முறையாக கோ கோ விளையாட்டுக்கு உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது.
- தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி மற்றும் மகளிர் அணிகள் வெற்றி பெற்றன. முதலில் இந்திய மகளிர் அணி நேபாள நாட்டைச் சேர்ந்த மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் 78 - 40 என இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.
- அடுத்த சில மணி நேரங்களில் இந்திய ஆடவர் அணி 54 - 36 என்ற கணக்கில் நேபாள ஆடவர் அணியை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
உலக பொருளாதார மன்றம் 2025:
- டாவோஸில்(தாவோசு-Davos) நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2025-ல் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்க உள்ளார்.
- உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக மேம்பாடு, டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு, தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவது போன்றவை குறித்து உலகப் பொருளாதார மன்றத்தில் விரிவான விவாதம் நடைபெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
- டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டம், 2025 ஜனவரி 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் குறித்த அறிக்கை:
- உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின் முதல் நாளில், உலகளாவிய சமத்துவமின்மைக்கான பின்னணி குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டது. அதில், இங்கிலாந்தின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் குறித்தும், அவை எவ்வாறு அந்நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு பங்கு பிரிக்கப்பட்டது என்பது குறித்தும் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கைக்கு 'Takers, not Makers' என தலைப்பிடப்பட்டுள்ளது
- காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 64.82 டிரில்லியன் அமெரிக்க டாலர்களில் 33.80 டிரில்லியன் டாலர்கள் அந்நாட்டின் 10% பணக்காரர்கள் பிரித்துக்கொண்டதாக ஆக்ஸ்பாம் எனும் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
- 1765 மற்றும் 1900-க்கு இடையிலான 100 ஆண்டுகளுக்கும் மேலான காலனித்துவத்தின் போது இங்கிலாந்து இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்ற பணத்தில் 52 சதவீதத்தை அந்நாட்டின் 10 சதவீத பணக்காரர்கள் பெற்றுள்ளனர். அப்போதிருந்த புதிய நடுத்தர வர்க்கத்தினர் 32 சதவீத பணத்தைப் பெற்றுள்ளனர்.
மக்கள் ‘நம்பும்’ நாடுகளின் பட்டியலில் 3-ம் இடத்தில் இந்தியா!
- சர்வதேச அளவில் நாடுகளை பல நிலைகளில் மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கும் எடில்மேன் என்ற அமைப்பு 2024-ம் ஆண்டுக்கான தனது 25-வது ஆண்டறிக்கையை ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில் சமர்ப்பித்தது.
- வெளிநாடுகளிலும் இயங்கக்கூடிய நிறுவனங்களைக் கொண்டுள்ள நாடுகள் மீது வெளிநாட்டினர் வைக்கும் நம்பகத்தன்மை குறித்த பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. இதில் கனடா முதலிடத்திலும், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பதாக எடில்மேன் அறிக்கை தெரிவிக்கிறது.
- அரசாங்கம், வணிகங்கள், ஊடகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கைக்கான ஒட்டுமொத்த பட்டியலில் சீனா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், இந்தோனேஷியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், கடந்த முறை 2-ம் இடம் பிடித்த இந்தியா இம்முறை மூன்றாம் இடம் பிடித்துள்ளதாகவும் எடில்மேன் அறிக்கை கூறுகிறது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..