பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம்:
- இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த முடிவு 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும்.
- பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இது தவிர, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, இழப்பீட்டைக் கணக்கிடுதல் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைத்தல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கும் ரூ.824.77 கோடி தொகுப்பு நிதியுடன் தனி நிதியத்தை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2025-ம் ஆண்டை பாதுகாப்பு அமைச்சகத்தில் 'சீர்திருத்த ஆண்டாக' கடைபிடிக்க ஒருமனதாக முடிவு-பாதுகாப்பு அமைச்சகம்:
- 2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது.
அர்ஜுனா விருது 2025:
- காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மின்டன் வீராங்கணை எம்.துளசிமதி. இவர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரியில் கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி) 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
- இவருக்கு இந்திய அரசின் விளையாட்டுத் துறை உரிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருது 2025:
- விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாக்கர் உட்பட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய விளையாட்டுத்துறை இதனை அறிவித்துள்ளது.
- ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றிருந்த மனு பாக்கரின் பெயர் இப்பட்டியலில் முதலில் விடுபட்டிருந்தது.
- 2025 ஜனவரி 17ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில், மனு பாக்கர், குகேஷுடன் இணைந்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதினை வழங்குகிறார்.
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்:
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். கால் இறுதி சுற்றில் வைஷாலி 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் சூ ஜினரை தோற்கடித்தார். இதையடுத்து நடைபெற்ற அரை இறுதி சுற்றில் மற்றொரு சீன வீராங்கனையான ஜு வென்ஜுனுடன் மோதினார் வைஷாலி.
- இதில் வைஷாலி 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த வைஷாலிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. ஜு வென்ஜுன் இறுதிப் போட்டியில் சகநாட்டைச் சேர்ந்த லீ டிங்ஜியை 3.5-2.5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். லீ டிங்ஜிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
யுபிஐ பரிவரத்தனை தரவுகள் 2024:
- அதிகரித்து வரும் யுபிஐ பரிவரத்தனை போக்கு டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்தது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வரும் யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலமான பரிவர்த்தனை டிசம்பர் மாதத்தில் 16.73 பில்லியன் எட்டி சாதனை படைத்துள்ளது என்று தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) தரவுகள் தெரிவிக்கின்றன.
- 2024 ஆண்டுக்கான யுபிஐ பரிவர்த்தனை 46 சதவீதம் உயர்ந்து 172 பில்லியனாக இருந்ததது. கடந்த 2023-ம் ஆண்டு இது 118 பில்லியனாக இருந்தது.
மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டம்:
- பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும், இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை உடையவர்களாக அவர் களை உருவாக்கும் நோக்கிலும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டத்தை (Industrial Training Program) நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- இத்திட்டத்தின்படி, 3 ஆண்டு கால படிப்பில் மாணவர்கள் கடைசி ஓராண்டு ஏதேனும் ஒரு தொழில்பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி பெறுவார்கள். அந்த மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அனுமதி பெற்றதாக இருக்கும். முதல் இரண்டு ஆண்டுகள் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து அங்கு தற்போதைய முறையில் தேர்வெழுதுவார்கள்.
- 3-ம் ஆண்டு முழுவதும் கல்லூரிக்கு வெளியே குறிப்பிட்ட தொழில்பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் தியரியுடன் செயல்முறை திறன், தகவல் தொடர்புத்திறன், நேரடி தொழில்பயிற்சி போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த ரூ.2,867 கோடி மதிப்பில் இரு ஒப்பந்தங்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் செய்துள்ளது:
- ஏஐபி இயந்திரத்தை பொருத்த மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் 1,9990 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்படை நீர்மூழ்கி கப்பல்களில் ஏஐபி இயந்திரத்தை பொருத்துவதற்கான மாற்றங்கள் செய்யப்படும். ஏஐபி தொழில்நுட்பம் நீர்மூழ்கி கப்பல்களில் பொருத்துவதன் மூலம், அவை கடலுக்கடியில் நீண்ட காலம் இருக்க முடியும். வழக்கமாக டீசல் இன்ஜின் நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான காற்றை ஸ்னார்கெல் என்ற பைப் மூலம் பெற நீர்மூழ்கி கப்பல்கள் குறிப்பிட்ட தூரம் கடலில் மேற்பகுதிக்கு வரும். ஏஐபி பொருத்துவதன் மூலம், நீர்மூழ்கி கப்பல்கள் கடலின் மேற்பரப்புக்கு வரத் தேவையில்லை.
- கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் நவீன எலக்ட்ரானிக் ஹெவி வெயிட் டார்பிடோ (இஎச்டபிள்யூடி) பொருத்த பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப்புடன் ரூ.877 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன் டார்பிடோ ஏவுகணையில் அலுமினியம் சில்வர் ஆக்சைடு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டார்பிடோ நீண்ட தூரம், அதிவேகத்தில் சென்று எதிரியின் இலக்கை தகர்க்கும். மேலும், இந்த டார்பிடோ நீர்மூழ்கிகப்பல்களில் இருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் வெடிக்காது. நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால் கூட வெடிக்காத வகையில் இந்த இச்டபிள்யூடி தயாரிக்கப்படுகிறது. இந்த டார்பிடோ பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
- நீர்மூழ்கி கப்பல்களின் மேம்பாட்டுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்ட 2 ஒப்பந்தங்களும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப்:
- சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது.
- 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகம், அசாம் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 17-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி தரப்பில் ரம்யா 10 கோல்கள் போட்டார்.
- 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளா 24-22 என்ற கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..