CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (21.01.2025 - 22.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (21.01.2025 - 22.01.2025)


இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் :

  • மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் 79 ரன்களில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது.

  • இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்திய அணியின் பேட்ஸ்மேன் யோகேந்திர படோரியா, 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
  • 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியை ரன் குவிக்க முடியாத வகையில் பந்து வீசினர் இந்திய பவுலர்கள். இங்கிலாந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


பிரதமரின் விருதுகள் 2024-க்கான இணையதளம் :

  • பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்கான பிரதமரின் விருதுகள் 2024-க்கான இணையதளம் (http://www.pmawards.gov.in) இன்று நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் தொடங்கப்பட்டது. 
  • காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில், மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறை அதிகாரிகள், மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் (நிர்வாக சீர்திருத்தங்கள் / தகவல் தொழில்நுட்பம்) மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் / மாவட்ட நீதிபதிகள்  கலந்து கொண்டனர்.

  • பிரதமர் விருதுகள் இணைய தளத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் இன்று (2025 ஜனவரி 20 )முதல் தொடங்கியுள்ளது. 2025 ஜனவரி 27, முதல் விருதுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் 2025 பிப்ரவரி 14 ஆகும்.
  • பொது நிர்வாகத்தில் சிறப்பு தகுதி நிலைக்கான பிரதமரின் விருதுகள் 2024 திட்டத்தில் அனைத்து மாவட்டங்களும் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2022 ஏப்ரல் 1 முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் பொது நிர்வாகத்தில் சிறப்பு தகுதி நிலைக்கான விருதுகள்  மொத்த எண்ணிக்கை 16 ஆகும்.


இந்தியா இப்போது உலகளவில் ஏழாவது பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது:

  • இந்தியாவில் காபி சாகுபடி வளர்ந்து வரும் தொழிலாக உருவாகியுள்ளது. நம் நாட்டின் காபி இப்போது உலகம் முழுவதும் பரவலாக விரும்பப்படுகிறது. இந்தியா இப்போது உலகளவில் ஏழாவது பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது. அதன்  ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 1.29 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 2020-21-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 719.42 மில்லியன் டாலர் மதிப்பை விட இரு மடங்காகும்.
  • 2025 ஜனவரி முதல் பாதியில் இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா 9,300 டன்களுக்கும் அதிகமான காபியை ஏற்றுமதி செய்தது. இந்தியாவின் காபி உற்பத்தியில் ஏறத்தாழ நான்கில் மூன்று பங்கு அராபிகா மற்றும் ரோபஸ்டா காபிக்கொட்டைகள் ஆகும். இவை முதன்மையாக வறுக்கப்படாத கொட்டைகளாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 
  •  2022-23-ம் ஆண்டில் கர்நாடகம் 248,020 மெட்ரிக் டன் அளவிற்கு காபி உற்பத்தி செய்தது. அதற்கு அடுத்த இடங்களில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் உள்ளன.


பராக்கிரம தினம் 2025 / Parakram Diwas 2025 :

  • பராக்கிரம தினம் 2025-யையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த இடமான வரலாற்று நகரம் கட்டாக்கில் உள்ள பாராபதி கோட்டையில் 2025 ஜனவரி 23 முதல் 25 வரை  பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தப் பன்முக கொண்டாட்டம் நேதாஜியின் 128-வது பிறந்த நாளையொட்டி அவரது பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமையும். இந்த மூன்று நாள் நிகழ்வை ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி 23.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார்.
  • நேதாஜியின் பிறந்த தினத்தை 'பராக்கிரம தினம்' என்று நினைவுகூர அரசு 2022 இல் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அந்த ஆண்டு கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் முதலாவது பராக்கிரம தின நிகழ்ச்சி நடைபெற்றது.  புதுதில்லியில் இந்தியா கேட்டில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறக்கப்பட்டது. மேலும் 2023-ம் ஆண்டில், அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு 21 பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. 2024-ம் ஆண்டில், தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இந்த நிகழ்வைப் பிரதமர் தொடங்கி வைத்தார்


இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரிப்பு:

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், சன்சாத் தொலைக்காட்சியில் இந்தியாவின் உயிரி மருந்து, விண்வெளித் துறைகள் மற்றும் ஆளுகை, பருவநிலை நடவடிக்கைகளில் நாட்டின் முன்னேற்றம் குறித்த பிரத்யேக நிகழ்ச்சியின் போது மாநிலங்களவை உறுப்பினர் திரு விஜய் தங்காவுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
  • இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் அடுத்த பத்தாண்டில் 44 பில்லியன் டாலரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக  அமைச்சர் கூறினார். உள்நாட்டு ககன்யான் திட்டம், எதிர்வரும் சந்திரயான் -4 (2027), சுக்ராயன் (2028) மற்றும் இந்திய விண்வெளி நிலையம் (2030) போன்ற மைல்கற்கள் இந்தியாவின் வலுவான பாதையை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.


பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழா:

  • பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது. இது நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், கல்வி கற்பித்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கான ஒரு பத்தாண்டுக்கால இடைவிடாத முயற்சிகளைக் குறிக்கிறது.

  • இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜனவரி 22)  நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே.பி.நட்டா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.


2025 ஜனவரி 22  செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது:

  • செல்வமகள் சேமிப்புத் திட்டம்  நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் அதிகாரமளித்தலின் அம்சமாகத் திகழ்கிறது. இது அவர்களின் கனவுகள், விருப்பங்களுக்கான அரசின் உறுதியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரி 22 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. 
  • இந்த ஆண்டு 2025 ஜனவரி 22  செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது. குடும்பங்கள் தங்கள் மகள்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றன.


தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025:

  • பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025-ஐ புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 20 அன்று ஏற்பாடு செய்திருந்தது. 
  • இந்த மைல்கல் நிகழ்வு இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாக  இந்த மாநாடு அமைந்திருந்தது. இது தார்த்தி ஆபா பழங்குடி கிராம வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாகும்.

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Post a Comment

0Comments

Post a Comment (0)