ககன்யான் திட்டம்:
- ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா விண்கலனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்காக திரவ உந்துவிசை அமைப்புடன் கூடிய க்ரூ மாட்யூல் (வீரர்கள் தங்கும் அறை) தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ககன்யான் திட்டத்தை மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2 கட்டமான முதல் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்துவதற்கான ஆராய்ச்சிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
- இந்த நிலையில், இந்த 2-ம் கட்ட திட்டத்துக்கான க்ரூ மாட்யூலில் திரவ உந்துவிசை அமைப்புகளின் ஒருங்கிணைப்பை இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையம் (எல்பிஎஸ்சி) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- துல்லியமான மூன்று-அச்சு கட்டுப்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன இரு-உந்துசக்தி அடிப்படையிலான எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பை (ஆர்சிஎஸ்) இந்த க்ரூ மாட்யூல் கொண்டுள்ளது. இது, க்ரூ மாட்யூல் புரோபல்ஷன் சிஸ்டம் (சிஎம்பிஎஸ்) என்று அழைக்கப்படுகிறது.
அகழாய்வுப் பணிகள் :
- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,210 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியை யாசகர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் யாசகர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது:
- குமரி மாவட்டத்தை யாசகம் எடுப்பவர்கள் இல்லா மாவட்டமாக்கும் வகையில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரி பேரூராட்சி பகுதிகளில் யாசகம் எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், அவர்களை கண்ணியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கு உறுதி செய்ய கன்னியாகுமரி பகுதியில் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
- யாசகம் எடுப்பவர்கள் இல்லா கன்னியாகுமரி பேரூராட்சி உருவாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் சுகாதாரம், உணவு, உடை, படுக்கை, மருத்துவ வசதிகள், கவுன்சிலிங், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி போன்ற முழு அளவிலான அடிப்படை சேவை வழங்க ‘ஸ்மைல்’ எனப்படும் புன்னகை திட்டம் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சி இணைந்து இத்திட்டத்தை செயலாற்றஉள்ளது
வன்தாரா மீட்பு மையத் திட்டம்:
- வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள், மரங்களைத் தூக்கிச் செல்லும் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
- அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் பழக்கப்பட்ட யானைகள், வெட்டப்படும் மரங்களை தூக்கிச் செல்லும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள் அண்மையில் மீட்கப்பட்டன.
- வன்தாரா மீட்பு மையத் திட்டமானது, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
- உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின் உயர்நிலைக்குழு ஒன்று வனப்பகுதிகளுக்குச் சென்று இந்த 20 யானைகளை மீட்டது. இந்த யானைகள் அங்கு, சங்கிலியால் கட்டப்பட்டு மரங்களை தூக்கிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
- மீட்கப்பட்ட இந்த யானைகள் தற்போது வன்தாரா மீட்பு மையத்தில் விடப்பட்டுள்ளன.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
- உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64ஆவது நபராக ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில், “8,600 டெஸ்ட் ரன்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..