76வது குடியரசு தினம்:
- 76வது குடியரசு தினம் நாடு முழுவதும் 26.01.2025 கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய தலைநகர் டெல்லியில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது.
- இதற்காக கடமைப் பாதைக்கு வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
- டெல்லி கடமைப் பாதையில் முதல் முறையாக முப்படைகளின் அலங்கார வாகனம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியா என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அந்த ஊர்தியில், இந்தியாவின் முப்படைகளுக்கு இடையே நெட் ஒர்க்கிங் மற்றும் தகவல்தொடர்புக்கு உதவும் ‘கூட்டு செயல்பாட்டு அறை’ அமைக்கப்பட்டிருந்தது.
- இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 5000 கலைஞர்கள் பங்கேற்ற 45 நடன வடிவங்கள் அடங்கிய 11 நிமிட கலாச்சார நிகழ்ச்சி நடந்தது. ஜெயதி ஜெய மமஹே பாரதம் என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வு முதல் முறையாக விஜய் சவுக் முதல் சி ஹெக்ஸாகன் வரையிலான முழு கடமைப்பாதையில் ஒரே நேரத்தில் நடந்தது.
- இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பின் மற்றொரு சிறப்பம்சமாக இந்தியாவின் படைவீரர்களின் அசைக்க முடியாத மனப்பான்மைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘எப்போதும் வளர்ந்த இந்தியாவை நோக்கி’ என்ற கருப்பொருளில் முன்னாள் ராணுவ வீரர்களின் அலங்கார ஊர்தி நடைபெற்றது.
- இந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில், பிரமோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் ஆகாஷ் வான்பாதுகாப்பு அமைப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோல், ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பு, சஞ்சய் மற்றும் டிஆர்டிஒ- வின் பிராலே ஏவுகணையும் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.
- உலகில் தற்போது இருக்கும் ஒரே குதிரைப் படை பிரிவான 61-வது குதிரைப்படை பிரிவு பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பினை வழிநடத்தியது. மூன்று ராணுவ சேவைகளின் மூத்த பெண் அதிகாரிகள் பெண் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
பத்ம விருதுகள் 2025 அறிவிக்கப்பட்டுள்ளன
- தமிழ்நாட்டில் 3 பேர் பத்ம பூஷன் விருதும் 10 பேர் பத்மஸ்ரீ விருதும் பெறுகின்றனர்
- நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப்பணி, பொது நலன், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பான சேவைக்காக 'பத்ம பூஷண்' விருதும் எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவைக்கு 'பத்மஸ்ரீ' விருதும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
- இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மார்ச் / ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. 2025-ம் ஆண்டிற்கான 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள், இந்த பட்டியலில் வெளிநாட்டினர் / வெளிநாடுவாழ் இந்தியர் / பிஐஓ / ஓசிஐ பிரிவைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெறும் 13 பேரும் அடங்குவர்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு நல்லி குப்புசாமி செட்டிக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவிலும் திரு ஏ அஜித்குமார், திருமதி ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு கலைப் பிரிவிலும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
- TNPSC NOTES AWARDS 2025 -பத்ம விருதுகள் / PADMA AWARDS 2025
தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய விருது:
- தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பாக செயல்பட்ட மாநிலத்துக்கான தேசிய விருதை தலைமைத் தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
- தமிழகத்தில், திருநெல்வேலியை சேர்ந்தவர் கே.ரவிகுமார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஜார்கண்ட் மாநில ஐஏஎஸ் தொகுப்பை சேர்ந்தவர். இவர், அந்த மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கிறார். அங்கு இவர் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் திறம்பட நடத்தினார்.
உலகின் ஈரநில அங்கீகாரம் பெற்ற நகரங்களின் பட்டியல் :
- உலகின் 31 ஈரநில அங்கீகாரம் பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தூர் மற்றும் உதய்பூர் இணைந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இந்த அங்கீகாரம் நிலையான வளர்ச்சி, இயற்கை மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீர கதை 4.0:
- புதுதில்லியில் 2025, ஜனவரி 25 அன்று நடைபெற்ற வீர கதை 4.0 சூப்பர்-100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் ஆகியோர் பாராட்டினர். வெற்றியாளர்களான 100 பேரில் 66 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். பாராட்டு விழாவில், வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2025, ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் காணும் சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களில் இந்த சூப்பர் -100 பேரும் அடங்குவர்.
- பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில், வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, நாட்டின் துணிச்சலான வீரர்களின் புகழ்பெற்ற வரலாற்றுடன் இளைஞர்களை இணைக்கும் வீர கதையின் நோக்கத்தை அடைவதில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் கூட்டு முயற்சிகளைப் பாராட்டினார்.
- இத்திட்டத்தின் நான்காவது பதிப்பில் 1.76 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் அகில இந்திய அளவில் பங்கேற்றது பற்றி குறிப்பிட்ட அவர், இது கல்வியின் மூலம் துணிச்சலான இதயங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்றார் . போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் புத்திசாலித்தனம், உற்சாகம் மற்றும் தேசபக்தியை அவர் பாராட்டினார்.
- வீர கதை 4.0 சூப்பர்-100 வெற்றியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு ராஜ்நாத் சிங், மணிப்பூரைச் சேர்ந்த 'நெம்னெனெங்' என்ற 10-ம் வகுப்பு மாணவி குழந்தையாக இருந்தபோது பெற்றோரை இழந்ததைக் குறிப்பிட்டார். பல சிரமங்களுக்கு மத்தியிலும் தனது படிப்பை கைவிடாமல் வெற்றி பெற்றவர்களில் ஓர் இடத்தைப் பெற்ற அவரது விடாமுயற்சியை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.
பொது சிவில் சட்டம் -உத்தராகண்ட் அமலுக்கு வருகிறது:
- கடந்த 2002 உத்தராகண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. அதன் அடிப்படையில் புஷ்கர் சிங் சாமி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில் இந்த சட்டம் 27.01.2025 முதல் அமலுக்கு வருகிறது.
- இதுகுறித்து உத்தராகண்ட் முதல்வரின் செயலாளர் சைலேஷ் பகோலி நேற்று கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி வரும் 28.01.2025 தேதி உத்தராகண்ட் வருகிறார். அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. பொது சிவில் சட்ட இணையதளம் 27.01.2025 தேதி மதியம் 12.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி இதனை தொடங்கி வைக்கிறார். நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தராகண்ட் பெற உள்ளது" என்றார்
யுஎஸ்-எய்ட் நிதியுதவியை (USAID) நிறுத்தம்:
- உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த யுஎஸ்-எய்ட் நிதியுதவியை (USAID -United States Agency for International Development) நிறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
- இதற்கான உத்தரவை கடந்த 20.01.2025 ட்ரம்ப் பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு 24.01.2025 உத்தரவிட்டுள்ளது.
- பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. வேறு எந்த நாட்டையும்விட அதிக நிதி உதவி அளிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. இதற்காக அந்த நாடு தனது பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது. கடந்த 2023-ல் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோறாயமாக ரூ.5.17 லட்சம் கோடி) அல்லது அந்நாட்டின் பட்ஜெட்டில் சுமார் 1% ஒதுக்கப்பட்டது.சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நிதியுதவியை விரைவாக நிறுத்த உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.
- உலகளவில் பாராட்டப்பட்ட எச்ஐவி எதிர்ப்புத் திட்டமான, PEPFAR-க்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியும் நிறுத்தப்பட இருக்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் இத்திட்டத்தை தொடங்கினார். அதிலிருந்து, இத்திட்டத்தின் மூலம் 55 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உட்பட 2.5 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
2024-ம் ஆண்டின் சிறந்த டி 20 கிரிக்கெட் வீரர்:
- 2024-ம் ஆண்டின் சிறந்த டி 20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளது ஐசிசி.
- 25 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த ஆண்டில் 18 டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மேலும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங் பவர்பிளேவிலும், இறுதிக்கட்ட ஓவர்களில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர் 17 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் பசல்ஹக் பரூக்கியுடன் முதலிடத்தை பகிர்ந்திருந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் 2025:
- ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா,19-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதினார்.
- இதில் 32 வயதான மேடிசன் கீஸ் 6-3, 2-6, 7-5 என்ற செட்களில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..