CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (27.01.2025- 28.01.2025)

TNPSC PAYILAGAM
By -
4 minute read
0

CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (27.01.2025- 28.01.2025)


இந்தியாவின் ஆப்பிள் மனிதர் திரு ஹரிமன் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது:

  • விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பங்களித்தற்காக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி திரு ஹரிமன் சர்மாவுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 
  • எச்.ஆர்.எம்.என் - 99 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புதுமையான, சுய மகரந்தச் சேர்க்கை, குறைந்த குளிர்நிலை கொண்ட ஆப்பிள் வகையை அவர் உருவாக்கினார். இது நாட்டில் ஆப்பிள் சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகுபடிக்கு உகந்த, குறைந்த விலையிலான சாறு அதிகம் நிறைந்த ஆப்பிள் வகை இதுவாகும்.
  • மிதமான தட்பவெப்பநிலை, குளிர் அதிகம் உள்ள பிரதேசங்களில் விளையும் ஆப்பிள் வகைகளை போன்று அல்லாமல், இந்த புதிய ஆப்பிள் வகை வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் சமவெளி பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. கோடைகாலத்தில் நிலவும் 40-45 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையையும் தாங்கி வளரக்கூடியது.
  • இந்தப் புதிய ஆப்பிள் வகையானதூ வீட்டு நுகர்வுக்கு பயன்படுத்தப்படும் நிராகரிக்கப்பட்ட ஆப்பிள் வகைகளிலிருந்து சில விதைகளை நடவுசெய்தபோது இந்த புதிய ஆப்பிள் வகை கண்டறியப்பட்டது.
  • திரு. ஹரிமன் ஷர்மாவின் தனித்துவமான கண்டுபிடிப்பு இந்தியாவில் ஆப்பிள் சாகுபடியில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தையும் அளித்துள்ளது. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும் உள்ளது. அவரது முயற்சியால், ஒரு காலத்தில் பணக்காரர்களின் உணவாக கருதப்பட்ட ஆப்பிள் சாமானிய மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மலிவான விலையில் கிடைக்கிறது. 

புதிய நானோ-உருவாக்கம் பார்கின்சன் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்க உதவும்:

  • பார்கின்சன் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கியமான 17β-எஸ்ட்ராடியோல் எனப்படும் ஹார்மோனை தொடர்ந்து வெளியிட உதவும் நானோ சூத்திரத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • பார்கின்சன் நோய் போன்ற பல நரம்பியல் மற்றும் புற்றுநோயாளியின் மனநல பாதிப்புகள் மனித மூளையில் 17β-எஸ்ட்ராடியோலில் ஏற்படும் ஏற்றத்தாழ்விலிருந்து உருவாகின்றன. இருப்பினும், பார்கின்சன் நோய் சிகிச்சைக்கு இ2-ஐ பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள், மூலக்கூறு பற்றிய குறைவான புரிதல் ஆகியவை அதன் நரம்பியல் சிகிச்சை திறம்பட அளிக்கப்படுவதைத் தடுக்கின்றன.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள், டோபமைன் ஏற்பி டி3-ஐப் பயன்படுத்தினர். இது 17β-எஸ்ட்ராடியோல்-ஏற்றப்பட்ட சிட்டோசன் நானோ துகள்களுடன் இணைந்தது ஆகும்.இது மூளையானது 17β-எஸ்ட்ராடியோல் தொடர்ந்து வெளியிட வழிவகுத்தது.
  • பார்கின்சன் நோயாளிகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் ஹார்மோனின் பங்கைப் புரிந்துகொள்ள கார்போஹைட்ரேட் பாலிமர்ஸ் ஆய்வு உதவி செய்துள்ளது. இந்த ஆய்வு பார்கின்சன் நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்கு பாதுகாப்பான மருந்தாக தன்னை நிலைநிறுத்த முடியும்.

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி 2025:

  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ஆசியாவிலேயே முதன்முறையாக சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியை (Asia’s First International Hyperloop Competition 2025) பிப்ரவரி 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்துகிறது.
  • ஐஐடி சென்னை, ஐஐடிஎம் பிரவர்த்தக், எஸ்ஏஇ இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டிக்கு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகமும் ஒத்துழைப்பு அளிக்கிறது. ஹைப்பர்லூப் கருத்துகளை உலகம் முழுவதும்  கொண்டு செல்வதுடன், போக்குவரத்துத் துறையில் இளம் தலைமுறையினரை ஊக்குவித்து மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் ஆகும்.
  • இப்போட்டி சென்னை ஐஐடி-ன் தனித்துவமான ஹைப்பர்லூப் சோதனை உள்கட்டமைப்பில் நடைபெறும். ரயில்வேத் துறை, ஆர்சிலார் மிட்டல், எல் அண்ட் டி, ஹிண்டால்கோ ஆகிய  நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த அதிநவீன தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஹைப்பர்லூப் என்பது ஏறத்தாழ வெற்றிடக் குழாயில் பயணிக்கும் அதிவேக 5-வது வகை போக்குவரத்து முறையாகும். காற்றுத் தடுப்பு குறைக்கப்பட்டுள்ளதால் அதிவேக ரயில் மணிக்கு 1000 கி.மீ. என்ற அதிவேகத்தில் செல்ல அனுமதிக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவரான திரு.எலான் மஸ்க் கடந்த 2013-ம் ஆண்டில் ‘ஹைப்பர்லூப் ஆல்ஃபா’ என்ற வெள்ளை அறிக்கை மூலம் இக்கருத்தை முன்மொழிந்தார்.
  • இப்போட்டியின் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி சென்னை ஹைப்பர்லூப் ஆலோசகரான பேராசிரியர் சத்யன் சக்ரவர்த்தி கூறுகையில், “சரியான வாய்ப்புகளும் தளங்களும் வழங்கப்படும்போது மாணவர்கள் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு இந்த ஹைப்பர்லூப் போட்டி ஒரு சான்றாகும் என்றார்.
  • அமெரிக்கா, ஐரோப்பா, துருக்கி மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய ஹைப்பர்லூப் சம்பந்தப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக நீடித்த மற்றும் அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளை ஏற்றுக் கொள்வதை விரைவுபடுத்துவதுதான் இப்போட்டியின் இலக்காகும்.

இந்திய விமானப்படை தாம்பரம் விமான தளத்திற்கு புதிய தலைவர் பதவியேற்பு:

  • இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா (27.01.2025) பொறுப்பேற்றார். ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த நிலைய கமாண்டிங் அதிகாரி ஏர் கமடோர் ரதீஷ்குமாரிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதையொட்டி அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
  • ஏர் கமடோர் தபன் ஷர்மா டிசம்பர் 1997-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக பணியில் இணைந்தார். அவர் 'ஏ' தர நிலை கொண்ட விமான பைலட் பயிற்றுவிப்பாளர் ஆவார். தேசிய பாதுகாப்பு அகாடமி, வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சேவை கல்லூரி ஆகியவற்றில் அவர் பயிற்சி பெற்றுள்ளார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான பல்வேறு வகை விமானங்களை 2500 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கி சிறந்த அனுபவம் பெற்றவராவார். 


 38-வது தேசிய விளையாட்டு போட்டி 2025:

  • உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி  (28.01.2025-ம்தேதி) தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 14-ம் தேதிவரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
  • டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், சிவபுரி, நியூ தெஹ்ரி ஆகிய 7 மையங்களில் 18 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டில் 38 அணிகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.


இந்தியாவில் கிராமப்புற பெண் தொழிலாளர்கள்:

  • எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக, ‘எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சொற்பொழிவு’ கடந்த அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் இருந்து பேச்சாளர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
  • அதன்தொடர்ச்சியாக ஜனவரி மாதத்துக்கான சொற்பொழிவில், கேரள மாநில திட்ட வாரியத்தின் துணைத் தலைவர், பேராசிரியர் வி.கே.ராமச்சந்திரன் பங்கேற்று நேற்று பேசினார். அப்போது ‘சமகால இந்தியாவில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற கூலித் தொழிலாளர்கள்’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
  • இந்தியாவின் கிராமப்புற தொழிலாளர் வர்க்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள். இந்தியாவில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அடிப்படையில் 2011-12-ம் ஆண்டு 10.1 கோடியாக இருந்த கிராமப்புற பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2023-24-ம் ஆண்டில் 15.3 கோடியாகவும், ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23.3 கோடியில் இருந்து 25.8 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.
  • குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் கிராமப்புற பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் மொத்தம் 41.1 கோடி பேர் கிராமப்புற தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


டீப்சீக் -ஏஐ அசிஸ்டன்:

  • உலக அளவில் புது பாய்ச்சலோடு பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது சீன தேச ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக்கின் ஏஐ அசிஸ்டன்ட். இப்போதைக்கு ஏஐ உலகில் அதிகம் பேசப்படும் ஏஐ அசிஸ்டன்ட்டாக இது உள்ளது.
  • கடந்த 2023-ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் இதன் தாய் நிறுவனமாகும். சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங் தான் இதன் நிறுவனர். இந்த சூழலில் ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக்.

ICC -யின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது 2024:

  • ஜஸ்பிரீத் பும்ரா :2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்துள்ளது ஐசிசி.
  • 31 வயதான பும்ரா, கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பும்ரா கடந்த ஆண்டு விளையாடி இருந்தார். இதில் ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார். இது தவிர கடந்த ஆண்டில் 8 டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..



Post a Comment

0Comments

Post a Comment (0)