இஸ்ரோவின் 100-வது ராக்கெட் :
- என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15. 29.01.2025 காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
- விண்ணில் செலுத்தப்பட்ட 19-வது நிமிடத்தில் செயற்கைக்கோளை புவியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
- TNPSC KEY NOTES : என்விஎஸ்-02 செயற்கைக்கோள் / NVS-02 SATELLITE
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 31-வது தேவி விருதுகள்:
- சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த 11 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருது வழங்கப்பட்டது.
- கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், கவிஞர் மற்றும் எழுத்தாளர் அருந்ததி சுப்ரமணியம், நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், கல்வியாளர் டாக்டர் சுதா சேஷய்யன், இசைக் கலைஞர் கதீஜா ரஹ்மான் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
- மேலும், கல்வியாளர் ஓமனா தாமஸ், அர்ஜுனா விருது பெற்ற பாராலிம்பிக்ஸ் வீராங்கனை ஜெர்லின் அனிகா, தொழிலதிபர் டாக்டர் லட்சுமி வேணு, சோல்ஃப்ரீ அறக்கட்டளை இணை நிறுவனர் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், தொழில்முனைவோர் ராஜவள்ளி ராஜீவ் மற்றும் சுசித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர் விருது பெற்றனர்.
THE TAMIL NADU PROHIBITION OF HARASSMENT OF WOMAN (AMENDMENT) ACT, 2025
- பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் 2025 ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடலுறுப்பு தானம் தமிழகம் புதிய சாதனை :
- உடலுறுப்புகளை தானம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தும் சேவையில், தமிழகம் புதிய சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 268 பேரின் உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.
- இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் வார்னே முரளிதரன் டிராபி தொடர் இலங்கையில் காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 2 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
- 29.01.2025 தொடங்கிய முதலாவது போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 1 ரன் எடுத்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டிய 4-வது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலகவில் ஒட்டுமொத்தமாக 16 வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..