CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (30.01.2025- 31.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (30.01.2025- 31.01.2025)



பொருளாதார ஆய்வறிக்கை 2024-25:

  • 2024 - 25 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 
  • சர்வதேச பொருளாதார, வர்த்தக எதிர்ப்புகளுக்கு இடையேயும்  இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2024-25-ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த ஏற்றுமதி (வணிகம், சேவைகள்) 6 சதவீதம் என்ற அளவில் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. சேவைகள், உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது.


வீட்டு நுகர்வுப் பொருட்கள் செலவு கணக்கெடுப்பு: 2023-24:

  • மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடத்த திட்டமிட்டு இருந்த குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்த தொடர் கணக்கெடுப்புகளில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் 2024-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.  
  • முன்னதாக 2022-23-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விரிவான அறிக்கை 2024-ம் ஆண்டு  ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.


தமிழக அஞ்சல் துறையின் 14-வது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி:

  • “தமிழ்நாட்டின் இயற்கை அதிசயங்கள்” என்கின்ற தலைப்பில் சிறப்பு அஞ்சல் முத்திரை, ஆர்கிட் மற்றும் அயல் நாட்டு பறவைகள் குறித்த புத்தகத் தொகுப்பை தமிழ்நாடு வட்டம் முதன்மை அஞ்சல் துறை தலைவர் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
  • சென்னையில் நடைபெற்று வரும் தபால்தலை கண்காட்சியில், தனித்துவமான சுவை கொண்ட ஆத்தூர், சோழவந்தான் வெற்றிலைகளின் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.


சர்வதேச விண்வெளி மையம் செல்லும் இந்திய வீரர்:

  • அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் செல்வதற்காக இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை அந்த திட்டத்தின் விமானியாக நாசா அறிவித்துள்ளது. 
  • வருகின்ற ஜூன் மாதத்துக்குள் ‘ஆக்ஸியம் திட்டம் 4’ க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தாண்டு மனிதா்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னொட்டமாக, ககன்யான் திட்டத்தில் உள்ள ஒரு இந்திய விண்வெளி வீரரை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்காக நாசாவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது. 
  • நாசாவின் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்வதற்காக இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டு, நாசாவுக்கு பயிற்சிக்காக கடந்தாண்டு அனுப்பப்பட்டிருந்தார்.

தேங்காய் உற்பத்தி:

  • மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கடந்த 2016-ம் ஆண்டு முதல் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கேரளா முதல் இடத்தில் இருந்தது.
  • கடந்த 2022-23-ம் ஆண்டில் கேரளா 563 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்த நிலையில், கர்நாடகா 595 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்துள்ளது. கேரளாவை காட்டிலும் சுமார் 30 கோடி தேங்காய்களை அதிகமாக உற்பத்தி செய்து கர்நாடகா முதலிடத்தை பிடித்துள்ளது.
  •  கடந்த 2023-24-ம் ஆண்டு தற்காலிக மதிப்பீடுகளின்படி, கர்நாடகா 726 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது. 578 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து தமிழ்நாடு 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 564 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து கேரளா 3-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.


வாட்ஸ்அப் அரசாட்சி:

  • ஆந்திர மாநிலத்தில் நேற்று முதல் வாட்ஸ்அப் அரசாட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொது மக்கள் பிறப்பு, இறப்பு உட்பட அனைத்து அரசு சான்றிதழ்களையும் வாட்ஸ் ஆப் வாயிலாகவே விண்ணப்பித்து பெற முடியும். இந்த சேவையை அமைச்சர் லோகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
  • இதற்காக ஆந்திர அரசு 95523 00009 என்கிற எண்ணை மக்களுக்கு வழங்குகிறது.
  • பின்னர், பிறப்பு, இறப்பு, வருவாய், ஜாதி சான்றிதழ் உட்பட பல சான்றிதழ்களை இனி நீங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
  • இனி சான்றிதழ் பெற நாள் கணக்கில் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதேபோல் ரேஷன் அட்டைக்காகவும், வீட்டின் முகவரியை மாற்றவும், வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை இணைக்கவும் நாம் இந்த வாட்ஸ்அப் எண்ணை பயன் படுத்தலாம்.


38-வது தேசிய விளையாட்டி போட்டி 2025:

  • 38-வது தேசிய விளையாட்டி போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.
  • இதில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் நர்மதா நித்தின் ராஜூ தங்கப் பதக்கம் வென்றார். களரிபயட்டுவில் தமிழகம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. நீச்சலில் மகளிருக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநிதி நடேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.


இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது:

  • பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
  • இதுவரை இந்த விருதானது 30 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கௌரவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டது. 
  • இதுவரையில் 30 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விருதினைப் பெறும் 31-வது நபராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளார்.

  • டெஸ்ட் போட்டிகளில் அவர் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். இருப்பினும், அவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு தனது 16 வயதில் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் அங்கம் வகித்துள்ளார்





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..






Post a Comment

0Comments

Post a Comment (0)