கிராமப்புற பாரத திருவிழா 2025
- பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத திருவிழா 2025- ஐ (Grameen Bharat Mahotsav 2025) தொடங்கி வைக்கிறார்.
- கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இத்திருவிழா ஜனவரி 4 முதல் 9 வரை 'வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன்மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்' என்ற கருப்பொருளுடன் நடைபெறும்.
- இத்திருவிழாவில் விவாதங்கள், பட்டறைகள், பயிற்சி வகுப்புகள் மூலம், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தற்சார்பு பொருளாதார நிலையை உருவாக்குதல், கிராமப்புற சமூகங்களிடையே புதுமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- வடகிழக்கு இந்தியாவில் சிறப்பு கவனம் செலுத்தி, கிராமப்புற மக்களிடையே பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி பாதுகாப்பை ஊக்குவித்தல், நிதி உள்ளடக்கம், நிலையான விவசாய நடைமுறைகளை செயல்படுத்துதல் மூலம் இதன் குறிக்கோள்களை எட்டுவது உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும்.
- தொழில்முனைவோர் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் திருத்தம்:
- வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை உருவாக்குவது அல்லது திருத்துவது தொடர்பாக இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்கள் / தொழில்துறை வல்லுநர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் பெறப்படும்.
- பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வகுத்து சட்ட முன்வடிவை உருவாக்கும் வகையில் பத்தி 1.07ஏ மற்றும் 1.07பி ஆகியவற்றைச் சேர்க்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் ( Foreign Trade Policy, 2023)உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்தது.
'பாங்க்நெட்' மின்னணு ஏல போர்ட்டல்:
- நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு, புதுதில்லியில் புதுப்பிக்கப்பட்ட மின்னணு ஏல இணையதளமான 'பாங்க்நெட்' -(BAANKNET’ e-Auction Portal)ஐ தொடங்கி வைத்தார்.
- இந்தத் தளம் அனைத்து பொதுத்துறை வங்கிகளிலிருந்தும் மின்-ஏல சொத்துக்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைப்பதுடன், வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பரந்த அளவிலான சொத்துக்களைக் கண்டறிய ஒற்றை இடத்தை வழங்குகிறது. பட்டியல்களில் குடியிருப்புகள், வீடுகள், மனைகள் போன்ற குடியிருப்பு சொத்துக்கள், வணிகச் சொத்துக்கள், தொழில்துறை நிலம் மற்றும் கட்டிடங்கள், கடைகள், வாகனங்கள், ஆலை மற்றும் இயந்திரங்கள், விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத நிலம் ஆகியவை அடங்கும்.
- இந்த விவரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேகரிப்பதன் மூலம், சொத்து மின்-ஏலங்களைக் கண்டுபிடித்து பங்கேற்பதற்கான செயல்முறையை இது எளிதாக்குகிறது. இது வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் மதிப்புமிக்க வாய்ப்புகளை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது.
தனிப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகள்- 2025:
- மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தனிப்பட்ட டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு சட்டம் -2023-ஐ (DPDP சட்டம்) செயல்படுத்த வசதியாக தனிப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகள்- 2025- ஐ உருவாக்கியுள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..