CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (06.01.2025 - 07.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (05.01.2025 - 06.01.2025)


ACTCM படகு அறிமுக விழா:

  • எட்டாவது, ஏவுகணை வெடிமருந்து படகு (Ammunition Cum Torpedo Cum Missile (ACTCM)) அறிமுக விழா  (எல்எஸ்ஏஎம் 22-யார்டு 132) (06 ஜனவரி 2025) மும்பையில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கடற்படை பராமரிப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி கமாண்டர் வினய் வெங்கட்ராம் கலந்து கொண்டார்.
  • 11 ஏசிடிசிஎம் படகுகளை நிர்மாணித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் எம்எஸ்எம்இ கப்பல் கட்டும் தளமான தானேயில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 05 மார்ச் 2021 அன்று மேற்கொள்ளப்பட்டு இருந்தது.  ஏழு ஏசிடிசிஎம் படகுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன, மேலும் கப்பல் கட்டும் தளத்திற்கு நான்கு சுல்லேஜ் படகுகளை நிர்மாணித்து இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. 
  • இதன் மூலம் குறு,சிறு, நடுத்தர (MSME) நிறுவனங்களை ஊக்குவிக்கும் இந்திய கடற்படையின் உறுதிப்பாடு தெளிவாகிறது.
  • இந்த படகுகள் இந்திய கப்பல் விதிகள், ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளன. இந்த படகுகள் இந்தியாவில் தயாரியுங்கள், தற்சார்பு இந்தியா ஆகிய முயற்சிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • இந்த படகுகள் கடற்படையில் சேர்க்கப்படுவதன் மூலம், இந்திய கடற்படை தளங்களுக்கு தளவாடங்கள் / வெடிமருந்துகளை கொண்டு செல்லுதல், எளிதாகும்.

என்ஜிசி 3785 பால் வெளி:

  • பூமியிலிருந்து சுமார் 430 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், சிம்ம ராசி விண்மீன் கூட்டத்தில், என்ஜிசி 3785 பால்வெளியில் (NGC 3785 galaxy) விண்மீன் திரள்களுக்கு விண்மீன்களுக்கு இடையேயான வாயுக்களின் நீண்ட, மெல்லிய நீரோட்டமான அலை வால் முடிவில் ஒரு புதிய வகை பால்வெளி உருவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.  
  • என்ஜிசி 3785 பால்வெளி மற்றும் அதன் அண்டை பால்வெளி இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையால் புதிய பால்வெளி உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. பால்வெளி யின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
  • என்ஜிசி 3785 விண்மீன் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பால்வெளிகளில் மிக நீண்ட அலை வால் கொண்டதாக அறியப்படுகிறது. பால்வெளியில் இருந்து வால் பகுதி விரிவடைந்து உள்ளது.  இரண்டு பால்வெளிகள் நெருக்கமாக வரும்போது ஈர்ப்பு விசைகளால்  ("அலை ஆற்றல்கள்") இந்த வகை வால் பகுதி உருவாகிறது. இரண்டு பால்வெளிகள் நெருக்கமாக தொடர்பு கொள்ளும்போது, ஒவ்வொன்றில் இருந்தும் பொருட்கள் இழுக்கப்படும் போது இவ்வாறான வால் பகுதி உருவாகிறது.
  • அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான இந்திய வான்இயற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின்  கவனத்தை என்ஜிசி 3785 விண்மீன் மண்டலம் ஈர்த்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிக நீண்ட அலைவால் கொண்ட விண்மீனாக மட்டுமின்றி அந்த வால் பகுதியின் முடிவில் தற்போது ஒரு புதிய பால்வெளி உருவாகி வருவதை விஞ்ஞானிகள்  கண்டறிந்துள்ளனர்.


முதலாவது இயற்கை மீன் வளர்ப்பு இடத்தொகுப்பு :

  • அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய மீன்வளத் துறையின் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்கள் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய ரூ.50 கோடி மதிப்பிலான 50 முக்கிய திட்டங்களை அசாம் மாநிலம் குவஹாத்தியில்  தொடங்கி வைத்தார். 
  • வடகிழக்கு மாநிலங்களின் மீன்வள மேம்பாட்டிற்கான நீடித்த முயற்சிகளைத் தொடர்வதற்கு ஏதுவாக, சிக்கிமின் சோரெங் மாவட்டத்தில் இயற்கை மீன் வளர்ப்பு இடத்தொகுப்பை (India’s First Organic Fisheries Cluster) திரு ராஜீவ் ரஞ்சன் சிங், அறிவித்தார். 


யு-19 டேபிள் டென்னிஸில் ஹன்சினி சாம்பியன்:

  • குஜராத் மாநிலம் வடோதராவில் யுடிடி 86-வது ஜூனியர் மற்றும் இளையோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
  • இதில் மகளிருக்கான யு-19 ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ஹன்சினி, ஹரியானாவைச் சேர்ந்த சுகானா சைனியை எதிர்த்து விளையாடினார். இதில் ஹன்சினி 4-2 (1-11,11-9, 13-11,11-9, 10-12,11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.


தமிழகத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர்:

  • தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு அக். 29 முதல் நவ. 28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • வாக்காளர் இறுதிப் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 10 லட்சத்து 61 ஆயிரத்து 556 வாக்காளர்கள் உள்ளனர். வயது வாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாக 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 1 கோடியே 37 லட்சத்து 4 ஆயிரத்து 815 வாக்காளர்கள் உள்ளனர்.
  • கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன், வாக்காளர் இறுதிப் பட்டியலை ஒப்பிடும்போது 3 லட்சத்து 83 ஆயிரத்து 236 ஆண், 4 லட்சத்து 98 ஆயிரத்து 970 பெண், 156 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 8 லட்சத்து 82 ஆயிரத்து 362 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
  • வாக்காளர் இறுதிப் பட்டியலில் 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 ஆண் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பேர் இடம்பெற்றுள்ளனர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 55 ஆயிரத்து 776 பேர் அதிகமாக உள்ளனர்.


ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம்:

  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது.
  • சென்னை ஐஐடி, இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடம், சென்னை ஐஐடி மற்றும் நாட்டின் ஆராய்ச்சி- தொழில்நுட்பத் திறன்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சென்னை ஐஐடி-ல் இருந்து 36 கி.மீ. தொலைவில் தையூரில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
  • துறைமுகங்கள், நீர்வழிகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் (National Technology Centre for Ports and Waterways and Coasts) மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிக்கூடம், துறைமுகங்கள் - கடல்சார் துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகள், மேம்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மையமாகும்.
  • இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகச் செயல்படுவதுடன், துறைமுகங்கள், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (Inland Waterways Authority of India- IWAI) உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குகிறது


ஆட்டோமொபைல்  9.11 சதவீத வளர்ச்சி:

  • இந்தியாவில் பல்வேறு வகையான வாகனங்களின் விற்பனை குறித்த தரவுகளை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டு வருகிறது. 
  • அதன் விவரம் வருமாறு: 2024-ம் ஆண்டில் மொத்தம் 2 கோடியே 61 லட்சத்து 7 ஆயிரத்து 679 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. 2023ம் ஆண்டில் 2 கோடியே 39 லட்சத்து 28 ஆயிரத்து 293 வாகனங்கள் விற்பனையான நிலையில், 2024ம் ஆண்டில் கூடுதலாக 21,79,386 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. 2023 ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024ம் ஆண்டில் சராசரியாக 9.11 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் பேரவைத் தலைவர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் நிலைக்குழு கூட்டம் (CSPOC) :

  • மக்களவைத் தலைவர்   திரு ஓம் பிர்லா 2025 ஜனவரி 07 முதல் 11-ம் தேதி வரை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, குயெர்ன்சி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் ரைட் ஹானரபிள் சர் லிண்ட்சே ஹோய்ல் அழைப்பின் பேரில் திரு பிர்லா 2025 ஜனவரி 07 முதல் 09 வரை இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • 2025 ஜனவரி 10-ம் தேதி குயெர்ன்சி நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் நிலைக்குழுக் கூட்டத்திற்கு (Committee of Conference of Speakers and Presiding Officers of the Commonwealth (CSPOC)) திரு ஓம் பிர்லா தலைமை தாங்குகிறார். 2026-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள 28-வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் மாநாட்டு புரவலர் என்ற முறையில் தலைமை வகிக்கிறார்.


தேர்தல் 2025 :

  • தில்லி சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக 05.02.2025 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் மில்கிபூர் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக இருந்த அவதேஷ் பிரசாத், ராஜினாமா செய்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த இரு தொகுதிகளிலும் 05.02.2025 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


8 வது இண்டஸ்ஃபுட் 2025

  • மத்திய உணவு பதனப்படுத்தல் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத் நகரில் உள்ள இந்தியா எக்ஸ்போசிஷன் மார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 8 வது இண்டஸ்ஃபுட் 2025 ஐ, 2025  (ஜனவரி 8)  (8th Edition of the Indusfood 2025தொடங்கி வைக்கிறார்.  
  • இண்டஸ்ஃபுட் என்பது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசியாவின் முதன்மையான உணவு மற்றும் பானங்களுக்கான வர்த்தக கண்காட்சி ஆகும். இது வர்த்தகத் துறையின் ஆதரவுடன் இந்திய வர்த்தக மேம்பாட்டு குழுமத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • ஜனவரி 8-10 ஆகிய நாட்களில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் இண்டஸ்ஃபுட்  உணவு மற்றும் பானங்கள் வர்த்தக கண்காட்சியுடன் கூடவே டிபிசிஐ ஏற்பாடு செய்துள்ள 4-ஆவது இண்டஸ்ஃபுட் உற்பத்தி கண்காட்சியும்(உணவு பதனப்படுத்தும் தொழில்நுட்பம், பேக்கேஜிங் தொழில்நுட்பம், பொருட்கள் மற்றும் விருந்தோம்பல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது) மற்றும் முதலாவது இண்டஸ்ஃபுட் வேளாண் தொழில்நுட்ப கண்காட்சியும் (வேளாண் தொழில்நுட்பம், மீன்வள தொழில்நுட்பம், பால் மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்) நடைபெறும் . இந்த இரண்டு நிகழ்வுகள் 2025 ஜனவரி 9-11 தேதிகளில் புதுதில்லியின் யஷோபூமி துவாரகாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் - 2024-25 :

  • மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) 2024-25-ம் நிதியாண்டிற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முன்கூட்டிய மதிப்பீடுகளையும், அதன் செலவின அம்சங்களையும் நிலையான (2011-12) நடப்பு விலைகளின் அடிப்படையில்  வெளியிடுகிறது. 
  • பொருளாதார நடவடிக்கைகள், ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் செலவினக் கூறுகளின் அடிப்படையில் மாறுபடும். இதன்படி 2022-23, 2023-24, 2024-25 நிதியாண்டுகளுக்கான மொத்த  நிகர தேசிய வருமானம், தனிநபர் வருமானம் ஆகியவற்றின் வருடாந்திர மதிப்பீடுகளை இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • 2023-24-ம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீட்டில்  8.2% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 2024-25 நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.4. சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் 9.6% வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் 2024-25 நிதியாண்டில் 9.7% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0Comments

Post a Comment (0)