CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (05.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025 - (05.01.2025)



ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது:
  • வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. 
  • நீர்வரத்து அதிகரித்து சாத்தனூர் அணையில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 
  • பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்ததில், 7 பேர் உயிரிழந்தனர். கனமழையால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
  • ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மழை வெள்ள சேதத்தை மத்தியக் குழு பார்வையிட்டுச் சென்றதை தொடர்ந்து, ரூ.6675 கோடி நிவாரணத்தொகையை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், ரூ.944.80 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு விடுவித்தது.
  • இதற்கிடையில், தமிழக அரசு ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கைப் பேரிடராக அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.

சீனாவில் பரவி வரும் வைரஸ் காரணமாக அங்கு சூழல் அசாதாரணமானதாக இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது:
  • இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தற்போது பரவி வரும் காய்ச்சல் அடிப்படையில் சீனாவில் சூழல் அசாதாரணமானதாக இல்லை. தற்போதைய பரவலுக்கான காரணம் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆர்எஸ்வி மற்றும் HMPV (Human Metapneumovirus). இவை வழக்கமான நோய்க்கிருமிகள் தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • கடந்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படும் பருவகால மாறுபாட்டைத் தவிர, சுவாச நோய் பாதிப்புகள் எதுவும் இல்லை என்பதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆயத்த பயிற்சியின் தரவுகள், சுவாச நோய்களின் அதிகரிப்பை சமாளிக்க நாடு நன்கு தயாராக இருப்பதாக காட்டுகிறது” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  • HMPV (Human Metapneumovirus) வைரஸ் : சாதாரண சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் போன்றது எனலாம். சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் இது. இந்த வகை வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவும். வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருட்கள், புழங்கிய இடங்களில் இருந்து இன்னொருவருக்குப் பரவும்.எல்லா ஃபோமைட் போர்ன் (fomite borne) அதாவது வைரஸ் பாதித்தவர் தொட்டதால் உயிரற்ற பொருட்களின் மீது வைரஸ் ஒட்டி அதன்மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவுதல் ஒரே பாணியில் தான் நடைபெறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

யானைகள் கணக்கெடுப்பு 2024:
  • தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திராவில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த 2024 மே மாதம் நடத்தப்பட்டது. 
  • அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 3,063 யானைகள் இருப்பதாக அரசு அறிவித்தது. அதிகபட்சமாக நீலகிரி மலைப் பகுதிகளில் 2,253 யானைகள் வாழ்கின்றன. அடுத்ததாக கோவை வனப்பகுதியில் 323, ஆனைமலையில் 310, ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் 227, அகஸ்தியமலையில் 259 யானைகள் உள்ளன.
  • தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் சராசரியாக உயிரிழந்து வருகின்றன. அந்தவகையில் 2024-ம் ஆண்டில் 123 யானைகள் உயிரிழந்திருப்பதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • வனத்துறை புள்ளிவிவரத்தின்படி 2020-ல் 119, 2021-ல் 115, 2022-ல் 117, 2023-ல் 129 யானைகளும் உயிரிழந்துள்ளன.
  • யானைகள் நோய் தாக்குதலால் இறப்பதும், மனிதர்கள் அமைக்கும் மின்வேலி, அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்தல், தந்தத்துக்காக கொல்லுதல் ஆகியவற்றாலும் யானைகள் மரணித்து வருகின்றன.

இரங்கல்:

  • பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்த ராஜகோபால சிதம்பரம் (88) மும்பை மருத்துவமனையில் 04.01.2025 காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • கடந்த 1974 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. புகழ்பெற்ற விஞ்ஞானியான ராஜகோபால சிதம்பரம் இந்த அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்தார். 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2025

  • இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் வென்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 
  • இந்த வெற்றியின் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னேறியது.
  • மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ICC World Test Championship Final 2025) தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் போட்டியிடுகின்றன . 2025 ஜூன் 11 முதல் 15 வரை லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது .



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..



Post a Comment

0Comments

Post a Comment (0)