இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்:2025
- இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியலை 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது.
- இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ), உலக வங்கி, குற்ற பதிவுகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவு ஆதாரங்களை ஒருங்கிணைத்து இந்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
- இத்துடன் அவதார் சார்பில் நாடு முழுவதும் 60 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,672 பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது
- இந்தப் பட்டியலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
- கடந்த ஆண்டின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
- மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, குருகிராம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் டாப் 10-ல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்:
- இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
- இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து, வி.நாராயணன் பொங்கல் பண்டிகை தினமான ஜன. 14-ம் தேதி பொறுப்பேற்கிறார்.
- அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக பணியாற்றியுள்ளார். கரக்பூர் ஐஐடி-யில் பட்டம் பெற்ற இவர், 1984-ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.
- இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான ‘சிஇ20 கிரையோஜெனிக்’ இன்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார்.
பாரத்போல் வலைதள சேவை:
- புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உருவாக்கியுள்ள , இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (2025-ம் ஆண்டு ஜனவரி 07) தொடங்கி வைத்தார்.
- TNPSC EXAM KEY POINTS : BHARATPOL PORTAL DETAILS IN TAMIL
ஏஐ விரிவாக்கத்துக்காக இந்தியாவில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்:
- இந்தியாவில் கிளவுடு மற்றும் ஏஐ கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
- பெங்களூருவில் நடைபெற்ற ‘மைக்ரோசாப்ட் ஏஐ டூர்’ நிகழ்ச்சியில் சத்ய நாதெள்ளா பேசியதாவது: இந்தியாவின் கிளவுடு மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்துவதற்காக அடுத்த 2 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 3 பில்லியன் டாலரை (ரூ.25 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முதலீடு, அதிகரித்து வரும் கிளவுடு சேவைகள் மற்றும் ஏஐ கட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும். இதன்மூலம் வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி பேருக்கு ஏஐ குறித்து பயிற்சி அளிப்பதுதான் எங்கள் நோக்கம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்
பந்து வீச்சாளர்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் பும்ரா:
- டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டிலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
- ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாட ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை அடைந்துள்ளார்.
- இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.