DEEPSEEK AI DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

DEEPSEEK AI DETAILS IN TAMIL


டீப்சீக் -ஏஐ அசிஸ்டன்:

  • உலக அளவில் புது பாய்ச்சலோடு பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது சீன தேச ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக்கின் ஏஐ அசிஸ்டன்ட். இப்போதைக்கு ஏஐ உலகில் அதிகம் பேசப்படும் ஏஐ அசிஸ்டன்ட்டாக இது உள்ளது.
  • கடந்த 2023-ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் இதன் தாய் நிறுவனமாகும். சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங் தான் இதன் நிறுவனர். இந்த சூழலில் ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக்.
  • பல கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் மாதிரியான டெக் நிறுவனங்களும், சாட்ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஏஐ முயற்சியினை வெறும் சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது டீப்சீக். கடந்த 2023-ல் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. டீப்சீக் கோடர், எல்எல்எம், டீப்சீக்-வி2, டீப்சீக்-வி3 மற்றும் டீப்சீக்-ஆர்1 லைட் பதிப்புகள் வெளியாகி உள்ளன.
  • இதில் டீப்சீக்-வி3 தற்போது பரவலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதன் எதிர் விளைவுதான் அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடிக்க காரணம். இது அமெரிக்க டெக் வல்லுநர்களின் பாராட்டினை பெற்றுள்ளது.
  • கடந்த டிசம்பர் மாதம் தான் டீப்சீக்-வி3 பொது பயன்பாட்டுக்கு வெளியானது. கடந்த 8-ம் தேதி இந்தியாவிலும், 10-ம் தேதி அமெரிக்காவிலும் இது அறிமுகமானது. வலைதளம் மற்றும் செயலி வடிவில் இதனை பயனர்கள் பயன்படுத்தலாம். தமிழ் மொழியிலும் இதை பயன்படுத்த முடியும்.
  • கதை, கட்டுரை, கவிதை, கணக்கு உள்ளிட்டவற்றை விரைந்து நொடி பொழுதில் தருகிறது டீப்சீக் ஏஐ. இப்போதைக்கு இதில் டெக்ஸ்ட் வடிவில் மட்டுமே பயனர்கள் உரையாட முடிகிறது. டீப்சீக்-வி3 வெர்ஷனை வெறும் 5.58 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14.8 டிரில்லியன் டோக்கன்களின் டேட்டா செட்களை வெறும் 55 நாட்களில் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments

Post a Comment (0)