தேவநேயப் பாவாணர் (1902 - 1981)
(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]-தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்)
அறிமுகம்
பிறப்பு பிப்ரவரி 7, 1902- கோமதி முத்து புரம் , சங்கரன்கோவில் - இறப்பு சனவரி 15, 1981 (அகவை 78) மதுரை, தமிழ்நாடு. மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்.
தேவநேயப் பாவாணர் குறிப்பு:
- மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார்.
- இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.
- "தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி"யென வழக்காடியவர்.
- "கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது" என்று நிறுவியவர் பாவாணர் ஆவார்.
- தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
- உலகின் முதல் மாந்தன் தமிழன். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதும் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகம் என்பதும் பாவாணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்களாகும்.
- இவர் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்டார்.
- மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது, “மாந்தன் தோற்றமும்; தமிழர் மரபும்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார். அதுவே அவரது பணியாகவும் இருந்தது.
தேவநேயர் ஆக்கிய நூல்கள் சில
1.இசைத்தமிழ்க் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
2.இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள#. 31 பக்கங்கள்#.
3.இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
4.இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் (1968) 89 பக்கங்கள்
5.உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்.
நன்றி: Annacentenarylibrary