தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்- எதிர்ச்சொற்கள் அறிதல்:
எதிர்ச்சொற்கள்:
ஒரு சொல்லின் எதிர்மறையான பொருளை குறிக்கும் சொல் எதிர்சொல் எனப்படும் . இரண்டு சொற்களும் எதிர்மறையான பண்புகளை கொண்டிருக்கும்.
எ.கா :
இரவு - பகல்
துன்பம் - இன்பம்
ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஒரு சொல்லின் எதிர்ச்சொல்லை அடைய அதே சொல்லோடு ஏதாவது ஒரு முன்னொட்டையோ பின்னொட்டையோ சேர்த்தால் போதும். எதிர்ச்சொல் கிடைத்துவிடும். எடுத்துக்காட்டாக, Dependant என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை அடைய அச்சொல்லுக்கு முன்பாக In என்ற முன்னொட்டைச் சேர்த்தால் போதும். Independant ஆகிவிடும். Literate என்பதன் எதிர்ச்சொல்லை அடைய IL என்பதை முன்னொட்டினால் போதும். Illiterate ஆகிவிடும்.
தமிழ்ச்சொற்களில் அவ்வாறு முன்னொட்டுவதன் வழியே எதிர்ச்சொற்களை அடைவது அரிது. அரிதினும் அரிதாக அல், இல் என்பன உள்ளன. வழி, வழக்கு, புனைவு போன்ற சொற்களுக்கு 'அல்' என்பதை முன்னொட்டினால் அல்வழி, அல்வழக்கு, அல்புனைவு ஆகிய எதிர்ச்சொற்கள் கிடைக்கும். இல் என்பதையும் முன்னொட்டி சில எதிர்ச்சொற்களை உருவாக்கலாம். வழி, பொருள் ஆகியவற்றோடு இல் என்பதை முன்னொட்டினால் இல்வழி, இல்பொருள் ஆகிய எதிர்ச்சொற்கள் கிடைக்கும். நன்மை என்பதற்கு நன்மையின்மை என்று சொல்வது தமிழில் எதிர்ச்சொல் ஆகாது. எதிர்ப்பொருளை மட்டுமே தருவது. நன்மைக்குத் தீமைதான் எதிர்ச்சொல்.
வடசொற்களைப் பொறுத்தவரை, பற்பல சொற்களுக்கு 'அ' என்னும் ஓர் எழுத்தை முன்னொட்டாகச் சேர்த்து, உரிய பல எதிர்ச்சொற்களை உருவாக்குகிறார்கள். ஒரு சொல்லின் எதிர்ச்சொல் 'அ' என்னும் எழுத்தோடு தொடங்கினால், அவ்விரண்டும் வடசொற்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். வடசொல்லைக் கண்டுபிடிப்பதற்கு இது எளிய வழி. கீழுள்ளவற்றைக் காண்க.
- சுத்தம் - அசுத்தம் (தூய்மை -- அழுக்கு)
- சந்தர்ப்பம் - அசந்தர்ப்பம் (வாய்ப்பு - காலந்தவறிய வாய்ப்பு)
- சாத்தியம் - அசாத்தியம் (இயல்வு - இயலாமை)
- சாதாரணம் - அசாதாரணம் (எளிய, எளிதல்லாத)
- ஜாக்கிரதை - அஜாக்கிரதை (விழிப்புணர்வு - விழிப்புணர்வின்மை)
- சுபம் - அசுபம் (நல்விளைவு - தீய விளைவு)
- ஜீரணம் - அஜீரணம் (செரிமானம் - செரிமானமின்மை)
- நாதி - அநாதி (தலைவனுள்ள, தலைவனற்ற)
- நியாயம் - அநியாயம் (முறை, முறையின்மை)
- நீதி - அநீதி (அறம், அறக்கேடு)
- சிரத்தை - அசிரத்தை (உளவேட்பு, உளவேட்பின்மை)
- தர்மம் - அதர்மம் (அறம், அறமின்மை)
எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல, நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
தன்மை
ஒருமை - நான் அல்லேன்.
பன்மை - நாம் அல்லோம்.
முன்னிலை
ஒருமை - நீ அல்லை.
பன்மை - நீவீர் அல்லீர்,
படர்க்கை
ஆண்பால் - அவன் அல்லன்.
பெண்பால் - அவள் அல்லள்.
பலர்பால் - அவர் அல்லர்,
ஒன்றன்பால் - அஃது அன்று.
பலவின் பால் - அவை அல்ல.
'வேறு, உண்டு, இல்லை' - ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.
சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை …………….
2. உங்களோடு வருவோர் ……………. அல்லோம்.
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் …………….
4. மொய்த்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ……………
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் …………. அல்லை.
Answer:
1. அல்ல
2. நாம்
3. அல்லள்
4. அன்ற
5. நீ
எதிர்ச்சொற்கள் பின்வருமாறு :
- அகம் X புறம்
- அகவல் X கிட்டுதல்
- அஞ்சுதல் X அஞ்சாமை
- அடி X நுனி
- அடிமை X சுதந்திரம்
- அடைத்தல் X திறத்தல்
- அண்மை X சேய்மை
- அண்மை X தொலைவு, சேய்மை
- அமர்ந்து X எழுந்து
- அமுதம் X நஞ்சு
- அமைதி X ஆரவாரம்
- அமைதி X குழப்பம்
- அரிது X எளிது
- அருகு X பெருகு
- அருள் X மருள்
- அல் X இரவு
- அல்லும் X பகலும்
- அவ்விடம் X இவ்விடம்
- அழித்தல் X ஆக்கல்
- அளித்தார் X பறித்தார்
- அறப்போர் X மறப்போர்
- அறம் X மறம்
- அற்றகுளம் X அறாதகுளம்
- அற்றை X இற்றை
- அன்பான X அன்பற்ற
- அன்பு X பகை
- ஆக்கம் X கேடு
- ஆகாது X போகாது
- ஆகும் X ஆகாது
- ஆசை X நிராசை
- ஆடவர் X பெண்டிர்
- ஆடுஉ X மகடுஉ
- ஆண்டார் X அடிமை
- ஆண்டான் X அடிமை
- ஆண்டு X ஈண்டு
- ஆதி X அந்தம்
- ஆழ X மிதப்ப
- இகழ்ச்சி X புகழ்ச்சி
- இடும்பை X இன்பம்
- இணை X பிரி
- இணைந்தது X பிரிந்தது
- இம்மை X மறுமை
- இயற்கை X செயற்கை
- இயன்ற X இயலாத
- இரவலர் X புரவலர்
- இரவு X பகல்
- இரும்பை X இன்பம்
- இல்லை X உண்டு
- இல்லை X உண்டு
- இழந்தமை X பெற்றமை
- இழப்பு X ஆதாயம்
- இழப்பு X ஆதாயம்
- இளமை X முதுமை
- இறுக்கம் X தளர்வு
- இறுதி X தொடக்கம்
- இன்சொல் X வன்சொல்
- இன்பம் X துன்பம்
- இன்னா X இனிய
- இனிய X இன்னாத
- ஈதல் X ஏற்றல்
- ஈரம் X வறட்சி
- உடன்பாடு X மாறுபாடு
- உத்தமர் X அதமர்
- உத்தமன் X அதமன்
- உயர்வு X தாழ்வு
- உரிமை X அடிமை
- உருவம் X அருவம்
- உள்பொருள் X வெளிப்பொருள்
- உள்ளது X இல்லது
- உள்ளரங்கம் X வெளியரங்கம்
- உறங்கு X விழி
- உறங்கு X விழி
- உறவு X அயல்
- உற்றுழிவு X உறாவுழி
- எட்டா X எட்டும்
- எந்தை X நொந்தை
- எழுச்சி X வீழ்ச்சி
- எழுச்சி X வீழ்ச்சி
- எளிது X அரிது
- ஏழை X பணக்காரர்
- ஏற்றம் X இறக்கம்
- ஏறி X இறக்கி
- ஓங்கிய X தாழ்ந்த
- ஓங்குதல் X ஒடுங்குதல்
- ஓடுமீன் X உறுமீன்
- ஒதுக்கி X சேர்த்து
- ஓய்வு X உழைப்பு
- ஒருமை X பன்மை
- ஒழிக X தளர்க
- ஒழுங்காக X ஒழுங்கின்றி
- ஒளி X இருள்
- ஒற்றுமை X வேற்றுமை
- கஞ்சம் X தாராளம்
- கடுவன் X மந்தி
- கலக்கம் X தெளிவு
- கவனம் X மறதி
- களிப்பு X எரிச்சல்
- களிப்பு X துயரம்
- காக்க X விடுக
- காலம் X அகாலம்
- கீழைநாடு X மேலைநாடு
- குடியரசு X முடியரசு
- குடியரசு X முடியரசு
- குணம் X குற்றம்
- குமரன் X குமரி
- குழி X மேடு
- குழு X தனி
- குறைவு X நிறைவு
- கூடி X பிரிந்து
- கொள் X கொடு
- சஞ்சலம் X துணிவு
- சத்ரு X நண்பன்
- சாக்கிரதை X அசாக்கிரதை
- சாந்தம் X உக்கிரம்
- சிறப்பு X இழிவு
- சிற்றரசர் X பேரரசர்
- சிற்றாறு X பேராறு
- சிற்றாறு X பேராறு
- சிற்றுார் X பேரூர்
- சிறியவர் X பெரியவர்
- சுருக்கம் X விரிவு
- செங்கோல் X கொடுங்கோல்
- செம்மை X கருமை
- செய்வோம் X செய்யோம்
- செல்வர் X ஏழை
- செல்வர் X வறியவர்
- செல்வீர் X செல்லாதீர்
- சொந்தம் X அந்நியம்
- சொல்லுக X சொல்லற்க
- சோம்பல் X சுறுசுறுப்பு
- செளக்கியம் X அசெளக்கியம்
- தக்கவழி X தகாதவழி
- தட்பம் X எளிமை
- தட்பம் X வெட்பம்
- தண்மை X வெம்மை
- தந்தை X தாய்
- தமயன் X தமக்கை
- தமர் X பிறர்
- தலைவர் X தொண்டர்
- தலைவர் X தொண்டர்
- தவறு X சரி
- தள்ளுதல் X தள்ளாமை
- தளிர் X சருகு
- தன்னலம் X பிறர்நலம்
- தனிமை X குழு
- திண்மம் X நீர்மம்
- திண்மை X மென்மை
- தீது X நன்று
- தீயவர் X நல்லவர்
- துன்பம் X இன்பம்
- தூய்மை X மாசு
- தூயவன் X தூயவள்
- தூயன் X வீராங்கனை
- தேய்ந்து X வளர்ந்து
- தொகுத்து X பகுத்து
- தொடக்கம் X முடிவு
- தொண்மை X புதுமை
- தொன்மை X புதுமை
- தோன்றியது X மறைந்தது
- தோன்று X மறைய
- நஞ்சு X அமிர்தம்
- நட்பு X பகை
- நண்பர் X பகைவர்
- நண்பன் X பகைவன்
- நம்பி X நங்கை
- நல்லறிவு X தியறிவு
- நல்லார் X அல்லார்
- நற்குணம் X திக்குணம்
- நன்மை X தீமை
- நாற்றம் X துர்நாற்றம்
- நீக்குதல் X இணைத்தல்
- நீங்க X சேர
- நீண்ட X குறுகிய
- நீண்டு X குறுகி
- நீதி X அநீதி
- நுண்மை X பருமை
- நோதல் X தணிதல்
- பகட்டு X எளிமை
- பகுத்து X தொகுத்து
- பருத்தல் X சிறுத்தல்
- பழம் X காய்
- பழம்பாடல் X புதுப்பாடல்
- பழமை X புதுமை
- பழமொழி X புதுமொழி
- பழி X புகழ்
- பளபளப்பு X சொரசொரப்பு
- பள்ளம் X மேடு
- பறந்தார் X மறைந்தார்
- பற்பல X சிற்சில
- பற்றி X விடுத்து
- பனையளவு X திணையளவு
- பாவம் X புண்ணியம்
- பிரிந்து X சேர்ந்து
- பிழை X திருத்தம்
- பிறந்தார் X மறைந்தார்
- பிறப்பு X இறப்பு
- பின்னர் X முன்னர்
- புகழ்ச்சி X இகழ்ச்சி
- புதிய X பழைய
- புதுமை X பழமை
- பெரியவர் X சிறியவர்
- பெருகி X சுருங்கி
- பெருகி X சுருங்கி
- பெருந்தொகை X சிறுதொகை
- பெரும்பான்மை X சிறுபான்மை
- பெருமை X சிறுமை
- பெற்றமை X இழந்தமை
- பேதை X மேதை
- பொய் X மெய்
- போற்றி X தூற்றி
- போற்று X தூற்று
- மகிழ்ச்சி X துயரம்
- மகிழ்ச்சி X வருத்தம்
- மருள் X தெருள்
- மலர்தல் X கூம்புதல்
- மற X நினை
- மன்னிப்பு X தண்டிப்பு
- மாறுபட்டு X ஒன்றுபட்டு
- மிகுதி X குறைவு
- முடியும் X முடியாத
- முதன்மை X இறுதி
- முதுகலை X இளங்கலை
- முற்பகல் X பிற்பகல்
- முன் X பின்
- முனிவு X கணிவு
- மூத்த X இளைய
- மூதேவி X சீதேவி
- மேதை X பேதை
- மேலே X கீழே
- மேலை X கீழை
- மேற்கொள்க X கைவிடுக
- மேன்மை X கீழ்மை
- வடக்கு X தெற்கு
- வடநாடு X தென்னாடு
- வடமொழி X தென்மொழி
- வருந்த X மகிழ
- வழுத்தல் X இகழ்தல்
- வளர்ச்சி X தளர்ச்சி
- வளர்ந்து X தளர்ந்து
- வளருதல் X தேய்தல்
- வளைத்தல் X நிமிர்த்தல்
- வாங்கல் X விற்றல்
- வாடுதல் X தழைத்தல்
- வாழ்த்தல் X துாற்றல்
- வாழ்வு X தாழ்வு
- விருப்பு X வெறுப்பு
- விரைவு X தாமதம்
- விழைந்தார் X வெறுத்தார்
- வீரம் X கோழை
- வெற்றமை X இழந்தமை
- வெற்றி X தோல்வி
- வென்று X தோற்று
- வேண்டும் X வேண்டாம்
- வேறுபாடு X ஒருமைப்பாடு