விரைவான குடியேற்ற சேவை திட்டம்/ (Fast Track Immigration - Trusted Traveller Programme (FTI-TTP):
By -TNPSC PAYILAGAM
January 16, 2025
0
விரைவான குடியேற்ற சேவை திட்டத்தை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் 3 முனையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்டிஐ-டிடிபி) செயல்படுத்தப்பட உள்ளது.
இதையடுத்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலையங்களில் இத்திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. அகமதாபாத்தில் இருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கவும் சர்வதேச பயணத்தை தடையற்றதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விரைவு குடியேற்றம்-நம்பகமான பயணா் திட்டம்/ ஃபாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன் புரோகிராம்:
விரைவு குடியேற்றம்-நம்பகமான பயணா் திட்டம் என்பது முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு குடியேற்றத்தில் நீண்ட வரிகளைத் தவிர்க்க உதவும் ஒரு சிறந்த வழியாகும்.
இது தகுதியான பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அவர்களின் பயோமெட்ரிக் தரவைச் சமர்ப்பிக்கவும் மற்றும் கட்டணம் செலுத்தவும் அனுமதிக்கிறது. அங்கீகரிக்கப்பட்டதும், அவர்கள் குறிப்பிட்ட விமான நிலையங்களில் மனிதர்கள் இல்லாத குடியேற்ற அனுமதியைப் பயன்படுத்தலாம், இது அவர்களின் காத்திருப்பு நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.
இந்தப் புதிய திட்டம் மூலம், வெளிநாடு செல்வோா் அதற்கான குடியேற்ற நடைமுறைகளை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள முடியும்
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், கைரேகை, முகப் பதிவு உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் இணைய வழியில் விண்ணப்பித்து, எஃப்டிஐ பதிவை செய்து கொள்ளலாம். இந்த எஃப்டிஐ பதிவு அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு அல்லது கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலம் வரை செல்லத்தக்கதாக இருக்கும்.