ICC -யின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது 2024:
- ஜஸ்பிரீத் பும்ரா :2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்துள்ளது ஐசிசி.
- 31 வயதான பும்ரா, கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பும்ரா கடந்த ஆண்டு விளையாடி இருந்தார். இதில் ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார். இது தவிர கடந்த ஆண்டில் 8 டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
ICC -யின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது 2024:
- ஸ்மிருதி மந்தனா: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2024-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா தேர்வாகி உள்ளார். அவர், கடந்த ஆண்டில் 13 போட்டிகளில் 747 ரன்கள் குவித்திருந்தார்.
- அஸ்மதுல்லா ஓமர்ஸாய்: ஆடவருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2024-ம் ஆண்டின் சிறந்த வீரராக ஆப்கானிஸ்தானின் ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தேர்வாகி உள்ளார். கடந்த ஆண்டில் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர், 417 ரன்களையும், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
ICC -யின் சிறந்த டி 20 கிரிக்கெட்வீரர் விருது 2024: :
- 2024-ம் ஆண்டின் சிறந்த டி 20 கிரிக்கெட் வீரராக (ஆடவர் ) இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளது ஐசிசி. 25 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த ஆண்டில் 18 டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மேலும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங் பவர்பிளேவிலும், இறுதிக்கட்ட ஓவர்களில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர் 17 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் பசல்ஹக் பரூக்கியுடன் முதலிடத்தை பகிர்ந்திருந்தார்.
- ஐசிசி விருதுகள் 2024 இல் நியூசிலாந்தின் மெலி கெர் ஆண்டின் சிறந்த டி20 ஐ கிரிக்கெட் வீரருக்கான (மகளிர்) விருதை வென்றார்.
ICC -யின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் 2024:
- ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருது 2024 - அன்னரி டெர்க்சன் (தென் ஆப்பிரிக்கா)
- ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருது 2024 -கமிந்து மெண்டிஸ் (இலங்கை)
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது:
- பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- இதுவரை இந்த விருதானது 30 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கௌரவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டது.
- இதுவரையில் 30 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விருதினைப் பெறும் 31-வது நபராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளார்.