இலக்கணம்-இனவெழுத்துகள்
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இனவெழுத்துகள் என்பது ஒத்த தன்மையைக் கொண்ட எழுத்துக்களைக் குறிக்கும். இவை எழுத்துகளின் வடிவம், எழுத்துக்கள் பிறக்கும் இடம், எழுத்துக்களை ஒலிப்பதற்கான முயற்சி, காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்
1. வடிவு (எழுத்தின் உருவம்).
2. மாத்திரை (எழுத்தின் ஒலி).
3. பிறப்பு (பிறக்கும் இடம் = மார்பு, கழுத்து, தலை, மூக்கு).
4. தொழில்/முயற்சி (உதடு, நாக்கு, பல், மேல்வாய்{அண்ணம்} ).
5. பொருள் ( ஒரே பொருள் தரக்கூடிய சொற்கள் )
முதலிய காரணங்களால் ஒத்துப்போகும். அவ்வாறு ஒத்துப்போகும் எழுத்துக்களை இனஎழுத்துக்கள் என்று கூறுவோம்.
(i) வல்லின மெய்களுக்கு மெல்லின மெய்கள் இனம். இடையின எழுத்துகள் ஆறும் ஒரே இனம்.
(ii) உயிர்க்குறிலுக்கு உயிர்நெடிலும் உயிர் நெடிலுக்கு உயிர்க் குறிலும் இனம்.
(iii) ‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்ற எழுத்து இனம். ‘ஔ’ என்னும் எழுத்துக்கு ‘உ’ என்ற எழுத்து இனம்.
உயிர் எழுத்துகளில் இனவெழுத்துகள்
உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகளுக்கு இனமாக அமையும்.
குறில் நெடில்
அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ
ஒ ஓ
இ ஐ
உ ஔ
இவை பா புனைகையில் மோனையை அமைக்க உதவுகின்றன.
மெய் எழுத்துகளில் இனவெழுத்துகள்
மெய் எழுத்துகளில் வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகள் இனமாக அமைந்து ககர ஒலிப்பை அதிரொலியாக மாற்றுகின்றன.
வல்லினம் மெல்லினம் எடுத்துக்காட்டு
க் ங் தங்கம்
ச் ஞ் மஞ்சள்
ட் ண் வண்டி
த் ந் பந்து
ப் ம் பம்பரம்
ற் ன் நன்றி