தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்:அலகு III: எழுதும் திறன்
மரபுத் தமிழ்:
திணை மரபு:
உலக மொழிகள் அனைத்திலும் பெயர்ச் சொற்களே மிகுதி என்பர். பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என்று இருவகையாகப் பிரிப்பர். இவ்வாறு பாகுபடுத்தும் முறை எல்லா மொழிகளிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை . தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு இருதிணைப் பாகுபாடு அமைந்துள்ளதை இலக்கண நூல்களால் அறியலாம்.
" உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" (தொல். சொல் 1)
எனவரும் தொல்காப்பிய நூற்பா, மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை; அவரல்லாத பிற அஃறிணை என்று கூறுகிறது. இவ்வகைப் பாகுபாடு ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் இல்லை.
(i) திணை – உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும்.
(ii) உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்.
(iii) ஆனால் நம் முன்னோர் தாழ்திணை என்று கூறாமல் உயர்வு அல்லாத திணை (அல் + திணை) அஃறிணை என்று பெயரிட்டனர்.
இன்றைய தமிழில் யார்? எது? போன்ற வினாச் சொற்களைப் பயனிலையாக அமைத்துத் திணை வேறுபாடு அறியப்படுகிறது.
அங்கே நடப்பது யார்?
அங்கே நடப்பது எது?
என்னும் தொடர்கள் பொருட்குறிப்பின் அடிப்படையில் யார் என்ற பயனிலை உயர்திணையையும் எது என்ற பயனிலை அஃறிணையையும் உணர்த்துகின்றன.
குழந்தை, கதிரவன் போன்றவை இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள். இப்பெயர்கள் எழுவாயாக அமையும்போது அவற்றின் வினைமுடிபு இருதிணை பெற்றும் வருகின்றது.
குழந்தை சிரித்தான் - குழந்தை சிரித்தது
கதிரவன் உதித்தான் - கதிரவன் உதித்தது
பால் மரபு:
தமிழில் பால்பகுப்பு இலக்கண அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தன்மை, முன்னிலை இடத்தைத் தவிர, தமிழில் உள்ள பெயர்கள், படர்க்கை இடத்தில் வரும். பயனிலை விகுதிகளான ஆன், ஆள், ஆர், அது, அன் முதலியவை பால் பகுப்பைக் காட்டுகின்றன.
.பழந்தமிழில் ஐம்பால்களுள் பலர்பால்சொல் பன்மையிலும் உயர்வு கருதிச் சிலவேளைகளில் ஒருமையிலும் வந்துள்ளன.
மாணவர் வந்தனர் (பன்மை ) - ஆசிரியர்
வந்தார் (ஒருமை)
இக்காலத் தமிழில் பலர்பாலை உணர்த்தும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தாமல் ஒருமைப் பொருளை மட்டுமே உணர்த்துகிறது. பன்மைப் பொருள் உணர்த்துவதற்குக் கள் என்னும் விகுதி உதவுகிறது.
அவர் வந்தார் ( ஒருமை )
அவர்கள் வந்தார்கள் (பன்மை)
தமிழில் உயர்திணையில் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் உரிய பொதுப்பெயர்கள் உண்டு. இப்பெயர்கள் தொடர்களில்அமையும்போது வினைமுற்றைப் பொறுத்தே பால் அறியப்படுகிறது.
தங்கமணி பாடினான் -
தங்கமணி பாடினாள்
பால் காட்டும் விகுதிகள் இன்றியும் உயர்திணைப் பெயர்ச்சொற்கள் தத்தம் பால் உணர்த்துகின்றன.
ஆண் - பெண் ;
தம்பி - தங்கை ;
அப்பா - அம்மா;
தந்தை – தாய்
அஃறிணை எழுவாயில் ஆண் பெண் பகுப்புமுறை மரபில் இருந்தாலும் வினைமுற்றில் அவற்றை வேறுபடுத்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லை . எனவே ஒருமை, பன்மை அடிப்படையிலேயே ஒன்றன்பால் பலவின்பால் என்பன அறியப்படுகின்றன.
காளை உழுதது, பசு பால் தந்தது.
ஆகிய தொடர்களில் காளை ஆண்பாலாகவும் பசு பெண்பாலாகவும் உள்ளன. ஆனால் வினை முற்று, பால் பாகுபாட்டிற்குரிய விகுதிகளைப் பெறாமல் ஒன்றன்பால் விகுதி பெற்று முடிந்துள்ளது
தற்காலத்தில் அஃறிணை எழுவாய் மாற்றம் அடைந்துள்ளது. மாட்டினத்தில் பெண்பாலைக் குறிக்க பசுமாடு எனவும் ஆண்பாலைக் குறிக்க காளைமாடு (எருது) எனவும் சொற்கள் வழங்கப்படுகின்றன. பிற விலங்குகளைக் குறிக்கையில் ஆண்குரங்கு, பெண் குரங்கு எனவும் எழுவாய்ப் பொதுப்பெயருடன் ஆண் பெண் என்னும் பால் பாகுபாட்டுப் பெயர்கள் முன்சேர்த்து வழங்கப்படுகின்றன.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி புத்தகத்தில் (6th to 10 th Std Tamil Bpok) இருந்து எடுக்கப்பட்டதே.
மரபுத் தமிழ்:
- திணை மரபு -உயர்திணை அஃறிணை
- பால் மரபு:
- காலம்:
- இளமைப் பெயர்:
- ஒலிமரபு:
- வினைமரபு:
- தொகை மரபு:
5ஆம் வகுப்பு புதிய புத்தகம்
ஒலி மரபுச் சொற்கள்
- குரங்கு அலப்பும்
- புலி உறுமும்
- குயில் கூவும்
- யானை பிளிறும்
- ஆடு கத்தும்
- ஆந்தை அலறும்
- சிங்கம் கர்ச்சிக்கும், முழங்கும்
- மயில் அகவும்
- நாய் குரைக்கும்
- பாம்பு சீறும்
- சிங்கம் முழங்கும்
- அணில் கீச்சிடும்
- மயில் அகவும்
- குயில் கூவும்
- யானை பிளிறும்
- ஆந்தை அலறும்
- பூனை சீறும்
- எலி கீச்சிடும்
- காகம் கரையும்
- சேவல் கூவும்
- வண்டு முரலும்
- நாய் குரைக்கும்
விலங்குகளின் இளமைப்பெயர்
- ஆட்டுக் குட்டி
- யானைக் கன்று
- கோழிக் குஞ்சு
- சிங்கக் குருளை
- குதிரைக் குட்டி
- புலிப்பறழ்
- குரங்குக் குட்டி
- கீரிப் பிள்ளை
- மான் கன்று
- அணிற்பிள்ளை
வினைமரபுச் சொற்கள்
- அம்பு எய்தார்
- ஆடை நெய்தார்
- பூ பறித்தாள்
- மாத்திரை விழுங்கினான்
- நீர் குடித்தான்
- சோறு உண்டான்
- கூடை முடைந்தார்
- சுவர் எழுப்பினார்
- முறுக்கு தின்றாள்
- பால் பருகினான்
- பூ பறித்தாள்
- நீர் குடித்தான்
- முறுக்கு தின்றான்
- உணவு உண்டான்
7ஆம் வகுப்பு பழைய புத்தகம்
இளமைப்பெயர்கள்
தாவரங்கள்: காய்களின் இளமை மரபு:
- அவரைப்பிஞ்சு
- முருங்கைப்பிஞ்சு
- கத்தரிப்பிஞ்சு
- வாழைக்கச்சல்
- வெள்ளரிப்பிஞ்சு
- கொய்யாப்பிஞ்சு
- பலாமூசு
- தென்னங்குரும்பை
- மாவடு
விலங்குகள்: இளமை மரபு:
- குருவிக்குஞ்சு
- கோழிக்குஞ்சு
- ஆட்டுக்குட்டி
- கழுதைக்குட்டி
- எருமைக்கன்று
- குதிரைக்குட்டி
- பன்றிக்குட்டி
- குரங்குக்குட்டி
- நாய்க்குட்டி
- பூனைக்குட்டி
- மான்கன்று
- யானைக்கன்று
- சிங்கக்குருளை
- புலிப்பறழ்
- கீரிப்பிள்ளை
ஒலி மரபுச்சொற்கள்:
- குயில் கூவும்
- மயில் அகவும்
- சேவல் கூவும்
- காகம் கரையும்
- கிளி கொஞ்சும்
- கூகை குழறும்
- வானம்பாடி பாடும்
- ஆந்தை அலறும்
- கோழி கொக்கரிக்கும்
- குதிரை கனைக்கும்
- சிங்கம் முழங்கும் (கர்ச்சிக்கும்)
- நரி ஊளையிடும்
- நாய் குரைக்கும்
- பன்றி உறுமும்
- யானை பிளிறும்
வினை மரபுச்சொற்கள்
- அப்பம் தின்
- காய்கறி அரி
- இலை பறி
- நெல் தூற்று
- களை பறி
- பழம் தினம்
- நீர் பாய்ச்சு
- பாட்டும் பாடு
- மலர் கொய்
- கிளையை ஒடி
- மரம் வெட்டு
- விதையை விதை
- நாற்று நடு
- படம் வரை
- கட்டுரை எழுது
- தீ மூட்டு
- விளக்கேற்று
- உணவு உண்
பொருத்துக
1. காகம் கூவும்
2. குதிரை கரையும்
3. சிங்கம் கனைக்கும்
4. நரி முழங்கும்
5. குயில் ஊளையிடும்
விடை: 2, 3, 4, 5, 1
8ம் வகுப்பு புதிய புத்தகம்
பறவைகளின் ஒலிமரபு
- ஆந்தை அலறும்
- குயில் கூவும்
- காகம் கரையும்
- கோழி கொக்கரிக்கும்
- சேவல் கூவும்
- புறா குனுகும்
- மயில் அகவும்
- கூகை குழறும்
- கிளி பேசும்
பொருட்களின் தொகை மரபு
- மக்கள் கூட்டம்
- ஆநிரை
- ஆட்டு மந்தை
- வினை மரபு
- சோறு உண்
- தண்ணீர் குடி
- முறுக்குத் தின்
- பால் பருகு
- சுவர் எழுப்பு
- கூடை முடை
- பூக் கொய்
- பானை வனை
- இலை பறி
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி __________ (கூவும்/கொக்கரிக்கும்)
விடை: கொக்கரிக்கும்
2. பால் __________ . (குடி/ பருகு)
விடை: பருகு
3. சோறு __________ . (தின்/உண்)
விடை: உண்
4. பூ __________ . (கொய்/பறி)
விடை: கொய்
5. ஆ __________ (நிரை/மந்தை)
விடை: நிரை
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
விடை :
சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
இளமைப் பெயர்கள்
- புலி பறழ்
- சிங்கம் குருளை
- யானை கன்று
- பசு கன்று
- கரடி குட்டி
- ஒலி மரபு
- புலி உறுமும்
- சிங்கம் முழங்கும்
- யானை பிளிறும்
- பசு கதறும்
- கரடி கத்தும்
8ஆம் வகுப்பு பழைய புத்தகம்
இளமைப்பெயர்கள்:
- அணிற்பிள்ளை
- கீரிப்பிள்ளை
- பன்றிக்குட்டி
- ஆட்டுக்குட்டி
- குதிரைக்குட்டி
- புலிப்பறழ்
- எருமைக்கன்று
- சிங்கக்குருளை
- பூனைக்குட்டி
- எலிக்குஞ்சு
- நாய்க்குட்டி
- மான்கன்று
- கழுதைக்குட்டி
- குரங்குக்குட்டி
- யானைக்கன்று
விலங்குகளின் வாழிடங்கள்-தொகை மரபு:
- ஆட்டுப்பட்டி
- கோழிப்பண்ணை
- யானைக்கூடம்
- குதிரைக்கொட்டில்
- மாட்டுத்தொழுவம்
- வாத்துப்பண்ணை
- விலங்கு பறவை இனங்களின் ஒலிமரபு
- ஆந்தை அலறும்
- குதிரை கனைக்கும்
- நரி ஊளையிடும்
- கழுதை கத்தும்
- குயிர் கூவும்
- புலி உறுமும்
- காக்கை கரையும்
- கோழி கொக்கரிக்கும்
- மயில் அகவும்
- கிளி கொஞ்சும்
- சிங்கம் முழங்கும்
- யானை பிளிறும்
தாவர உறுப்புப் பெயர்கள்
- ஈச்ச ஓலை
- தாழை மடல்
- பனையோலை
- சோளத்தட்டை
- தென்னையோலை
- பலா இலை
- மாவிலை
- மூங்கில் இலை
- வாழை இலை
- வேப்பந்தழை
- கமுகங்கூந்தல்
- நெற்றாள்
- காய்களின் இளநிலை
- அவரைப்பிஞ்சு
- மாவடு
- முருங்கைப்பிஞ்சு
- தென்னங்குரும்பை
- வாழைக்கச்சல்
- வெள்ளரிப்பிஞ்சு
செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்
- ஆலங்காடு
- சவுக்குத்தோப்பு
- தென்னந்தோப்பு
- கம்பங்கொல்லை
- சோளக்கொல்லை
- தேயிலைத்தோட்டம்
- பனந்தோப்பு
- பலாத்தோப்பு
- பூஞ்சோலை
பொருள்களின் தொகுப்பு-தொகை மரபு
- ஆட்டுமந்தை
- கற்குவியல்
- சாவிக்கொத்து
- திராட்சைக்குலை
- வேலங்காடு
- பசுநிரை
- மாட்டுமந்தை
- யானைக்கூட்டம்
- வைக்கோற்போர
பொருளுகேற்ற வினை மரபு
- சோறு உண்
- நீர் குடி
- பால் பருகு
- பழம் தின்
- பாட்டுப்பாடு
- கவிதை இயற்று
- கோலம் இடு
- தயிர் கடை
- விளக்கை ஏற்று
- தீ மூட்டு
- படம் வரை
- கூரை வேய்
இளமைப்பெயர்களை எழுதுகு
(அ) கீரி – பிள்ளை
(ஆ) மான் – கன்று
(இ) சிங்கம் – குருளை
(ஈ) பூனை – குட்டி
(உ) எருமை – கன்று
பொருத்துக
1. மக்கள் போர்
2. வீரர் கற்றை
3. விறகு கூட்டம்
4. சுள்ளி கட்டு
5. வைக்கோல் படை
விடை: 3, 5, 4, 2, 1
10ஆம் வகுப்பு பழைய புத்தகம்
பொருத்துக
1. ஆடு கன்று
2. மான் பிள்ளை
3. கீரி குட்டி
4. சிங்கம் குஞ்சு
5. கோழி குருளை
விடை: 3, 1, 2, 5, 4
ஒலி மரபு
- ஆடு கத்தும்
- எருது எக்காளமிடும்
- குதிரை கனைக்கும்
- குரங்கு அலப்பும்
- சிங்கம் முழங்கும்
- நரி ஊளையிடும்
- புலி உறுமும்
- பூனை சீறும்
- யானை பிளிறும்
- எலி கீச்சிடுமு்
- ஆந்தை அலறும்
- கிளி பேசும்
- காகம் கரையும்
- குயிர் கூவும்
- கூகை குழறும்
- கோழி கொக்கரிக்கும்
- சேவல் கூவும்
- புறா குனுகும்
- மயில் அகவும்
- வண்டு முரலும்
- வினை மரபு
- அம்பு எய்தார்
- ஆடை நெய்தார்
- உமி கருக்கினான்
- ஓவியம் புனைந்தான்
- கூடை முடைந்தான்
- சுவர் எழுப்பினான்
- செய்யுள் இயற்றினான்
- சோறு உண்டான்
- தண்ணீர் குடித்தான்
- பால் பருகினான்
- பூப் பறித்தாள்
- மரம் வெட்டினான்
- மாத்திரை விழுங்கினான்
- முறுக்குத் தின்றான்
பொருத்துக
1. மயில் கரையம்
2. கூகை கத்தும்
3. யானை அலறும்
4. காகம் அகவும்
5. ஆடு பிளிறும்
விடை: 4, 3, 5, 1, 2