மரபுத் தொடரின் பொருளறிதல் / MARABU THODAR PORUL ARITHAL TNPSC TAMIL ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

    MARABU THODAR PORUL ARITHAL TNPSC TAMIL ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் 

மரபுத் தொடரின் பொருளறிதல்:


 

மரபுத் தொடர்கள் :

ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழி வழியாக (மரபு வழியாக)  வழங்கிவரும் பொருளை உணர்த்துவது மரபுத்தொடர் எனப்படும்.
பொதுவாக வழங்கும் மரபுத் தொடர்கள் , சமூகத்திற்கு சமூகம் வழங்கப்படும் மரபுத்தொடர்கள் எனும் அடிப்படையில் பல மரபுத்தொடர்கள்  தமிழில் காணப்படுகிறன.

மரபுத்தொடர் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

இணைமொழிகள் போன்று கருத்தாழமும் நடையழகும் கொண்ட தொடர்கள் மரபாக தொன்று தொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவது மரபுத்தொடர் எனப்படும்.

எ.கா. கானல் நீர்


மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

மனக்கோட்டை கண்ணும் கருத்தும்
அள்ளி இறைத்தல் ஆறப்போடுதல்

  • மணக் கோட்டை - மதியழகன் தான் பெரிய அமைச்சராக வேண்டும் என்ற மனக் கோட்டை கட்டினான்.
  • கண்ணும் கருத்துமாக - தாய் தன் குழந்தையே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.
  • அள்ளி இறைத்தல் - தனக்கு அதிக பணம் இருக்கு என்று அள்ளி இறைத்தல் கூடாது.
  • ஆறப் போடுதல் - ஒரு சில பிரச்சனைகளை ஆறப் போட்டு செய்தல் வேண்டும்.

பொருத்துக:

1. கயிறு திரித்தல் – பொய் அழுகை
2. ஓலை கிழிந்தது – விடாப்பிடி
3. முதலைக் கண்ணீ ர் – இல்லாததைச் சொல்லல்
4. குரங்குப்பிடி – மறைந்து போதல்
5. நீர் மேல் எழுத்து – வேலை போய்விட்டது
Answer:
1. கயிறு திரித்தல் – இல்லாததைச் சொல்லல்
2. ஓலை கிழிந்தது – வேலை போய்விட்டது
3. முதலைக் கண்ணீ ர் – பொய் அழுகை
4. குரங்குப்பிடி – விடாப்பிடி
5. நீர் மேல் எழுத்து – மறைந்து போதல்

 

மரபுத் தொடர்களுக்கான உதாரணங்கள்:


[ அ ]
01 . அள்ளிக் குவித்தல் - நிறையச் சம்பாதித்தல்
02 . அறைகூவுதல்- போருக்கு அழைத்தல்
03 . அரை மனிதன் - மதிப்பில்லாதவன்
04 . அண்டப்புழுகன்- பொய்காரன்
05. அலைக்கழித்தல்- அலட்சியம் செய்தல்
06. அறுதியிடுதல் - முடிவுகட்டுதல்
07. அகடவிகடம்- தந்திரம்
08. அரைப்படிப்பு - நிரம்பாத கல்வி
09. அடியொற்றுதல்- பின்பற்றுதல்
10. அள்ளியிறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்
11. அடுக்கு பண்ணுதல் - ஆயத்தம் செய்தல்
12. அடியிடுதல் - தொடங்குதல்
13. அடிநகர்தல்- இடம்பெயர்தல்
14. அடிபிழைத்தல் - நெறி தவறி நடத்தல்
15. அடி திரும்புதல்- பொழுது சாய்தல்
16. அடிப்பிடித்தல்- தொடருததல்
17. அடி பிறக்கிடுதல் - பின்வாங்குதல்
18. அரக்கப் பறக்க - விரைவாக
19. அடியுறைதல் - வழிப்படுத்தல்
20. அவசரக்குடுக்கை - பதற்றக்காரன்
21. அகலக் கண் வைத்தல் - அளவு கடந்து போதல்
22. அழுங்குப்பிடி - விடாப்பிடி
23. அறுதியிடல் - முடிவு கட்டுதல்
24. அமளி செய்தல் - குழப்பம் செய்தல்
25. அடி பணிதல் - கீழ்ப்பணிதல்
26. அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச் செய்தல்
27. அகலக் கால் வைத்தல் - அளவுகடந்து போதல்
 
[ ஆ ]
28. ஆகாயக் கோட்டை - மிதமிஞ்சிய கற்பனை
29. ஆறப்போடல் - பிற்போடல்
30. ஆசை வார்த்தை - ஏமாற்றுப் பேச்சு
31. ஆட்கொள்ளல் - அடிமை கொள்ளல்
32. ஆழம் பார்த்தல் - ஒருவரின் தகுதி பற்றி ஆராய்தல்
33. ஆயிரம்காலத்து பயிர் - நெடுங்காலம் நிலைத்திருத்தல்
34. ஆடாபூதி - ஏமாற்றுக்காரன்
 
[ இ ]
35. இரண்டும் கெட்டான் - நன்மை தீமை அறியாதவன்
36. இலை மறை காய் - வெளிப்படாது மறைந்திருத்தல்
37. இளிச்சவாயன் - எளிதில் ஏமாறுபவன்
38. இட்டுக்கட்டுதல் - இல்லாததை சொல்லுதல்
39. இலவு காத்த கிளி - காத்திருந்து ஏமாறுதல்
40. இரண்டு தோணியில் கால் வைத்தல் - ஒரே நேரங்களில் இரு செயல்களில் ஈடுபடல்
 
[ ஈ ]
41.  ஈரல் கருகுதல் - வேதனை மிகுதல்
42.  ஈவிரக்கம் - கருணை
43.  ஈயோட்டுதல் - தொழிலெதுவுமின்றி இருத்தல்
44. ஈடேறுதல் - உயர்வடைதல்
 
[ உ ]
45. உள்ளங்கையில் நெல்லிக்கனி - வெளிப்படையாக தெரிதல்
46. உதவாக்கரை - பயனற்றவன்
47. உப்பில்லாப் பேச்சு - பயனற்ற பேச்சு
48. உச்சி குளிர்தல் - மிக்க மகிழ்ச்சி அடைதல்
49. உருக்குலைதல் - தன்னிலையிலிருந்து மாறுபடல்
50. உலை வைத்தல் - பிறருக்கு அழிவு வருவித்தல்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)