மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல் / MOZHIPEYARPPU TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0
     MOZHIPEYARPPU TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு  

மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்:


ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடு செய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும். மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்கவிடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிபெயர்ப்பு. கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரவவேண்டும். நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது மொழிபெயர்ப்பு.

"ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்கிறார் மணவை முஸ்தபா.

"ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்" என்கிறார் மு.கு. ஜகந்நாதர்.

 
மொழிபெயர்ப்பு - தொடக்கம்

மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. இதுவும் பிறமொழிக் கருத்துக்களை, கதைகளைத் தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.


மொழிபெயர்ப்புக்கலை என்றால் என்ன

  • ஒரு மொழியில் இருக்கின்ற செய்தியை வேறு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பு எனப்படும்.
  • அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது, முதல் மொழிக்கு நிகரான செய்தி இரண்டாவது மொழியிலும் இடம்பெற வேண்டும்.
  • முதல் மொழியை = “மூலமொழி, தருமொழி” என்றும் கூறுவர்.
  • இரண்டாவது மொழி = “பெறுமொழி, இலக்கு மொழி” என்றும் கூறுவர்.


மொழிபெயர்ப்பு வகைகள்

  • பத்திரிகை மொழிபெயர்ப்பு
  • விளம்பர மொழிபெயர்ப்பு
  • வானொலி மொழிபெயர்ப்பு
  • கணிப்பொறி மொழிபெயர்ப்பு
  • இலக்கிய மொழிபெயர்ப்பு
  • அறிவியல் மொழிபெயர்ப்பு

 
மொழிபெயர்ப்பு - தேவை

மொழி பெயர்ப்பு, எல்லாக் காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின் கீழ் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு, மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது; ஒரு மொழியில் இருக்கும் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்த்தது; பல்வேறு மாநிலங்களில் இருந்த இருக்கின்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரைப் பற்றிய நூல்களையும் வெளியிட்டது. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் (NBT), தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.

மொழிபெயர்ப்பின் தேவையை உணர்த்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார்கள். உலகப் போரின் போது அமெரிக்கா, "சரண் அடையாவிடில் குண்டு வீசப்படும்" என்ற செய்தியை ஜப்பானுக்கு அனுப்பியதாகவும் அதற்கு ஜப்பான், 'மொகு சாஸ்ட்டு' என்று விடை அனுப்பியதாகவும் கூறுவர். அந்தத் தொடரின் பொருள் தெரியாமையால் அமெரிக்கா, ஹீரோஷிமாவில் குண்டுவீசியது என்று சொல்கிறார்கள். அந்தத் தொடருக்குப் பொருள், 'விடைதர அவகாசம் வேண்டும்' என்பதாம். ஆனால் அதற்கு அமெரிக்கர்கள், 'மறுக்கிறோம்' என்று பொருள் கொண்டதாகவும் கூறுவர். இது உண்மை எனில், மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் களங்கம் நேர்ந்தது எனலாம்.

 
பாரதியின் மொழிபெயர்ப்பு

  • Exhibition - காட்சி, பொருட்காட்சி
  • East Indian Railways - இருப்புப் பாதை
  • Revolution - புரட்சி
  • Strike - தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்

மொழிபெயர்ப்பு - கல்வி

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்; பல அறிவுத்துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்; மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும்; வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்; நாடு, இன, மொழி எல்லைகள் கடந்து ஓருலகத்தன்மையைப் பெறமுடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டுத் தூதரகங்கள் நம்நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக்கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


இலக்கிய இறக்குமதி

பிற மொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச்சிறப்புடையதாக இருக்கிறபோது அனைவரது அனுபவமாகவும் பொது நிலை பெறு கிறது. அத்தகைய பொது நிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழிவேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின. இவற்றில் தரமான நூல்கள் என்று பார்த்தால் சிலதான் எஞ்சும். இதே போலத் தமிழ் நூல்களும் பிற மொழிகளுக்கு அறிமுகமாயின. தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிகளுக்குரியதாக மாறியது மொழிபெயர்ப்பால்தான்.

மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகளும் கூட உருவாகியிருக்க முடியாது; ஷேக்ஸ்பியர் இருந்திருக்க முடியாது; கம்பன் இருந்திருக்க முடியாது. இரவீந்திரநாத தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் உலக அளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.

ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல, ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

நேரடி மொழிபெயர்ப்பாக பிரஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா முதலான நாடுகளின் நூல்கள் இன்று கிடைக்கத் தொடங்கியிருப்பது நல்ல பயனை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

மொழிபெயர்ப்பின் மூலம் இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளையும் பெற்றிருக்கிறோம். இன்றுள்ள புதிய திறனாய்வு முறைகளை எல்லாம் நாம் ஆங்கிலத்தின் வழியாகவே பெற்றிருக்கிறோம்.

பிற மொழி இலக்கியங்கள், இலக்கிய வடிவங்கள் பலவும் தமிழுக்கு அறிமுகமாகி அது போன்ற முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பு நோக்கி சிந்தனை, வடிவம், உத்தி, மையக்கரு, பண்பாடு போன்ற பலவகைக் கூறுகளை எடை போடவும் வளர்க்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

 
தெரிந்து தெளிவோம்


மொழிபெயர்ப்பு

எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு.

எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன.

ராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். 1949ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

1949 - கணமுத்தையா மொழி பெயர்ப்பு, 2016 – டாக்டர் என். ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு, 2016 - முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு, 2018 - யூமா வாசுகி மொழி பெயர்ப்பு. ---- சா. கந்தசாமி

 
மொழிபெயர்ப்பு - செம்மை

Hundred railsleepers were washed away என்பதை, தொடர்வண்டியில் உறங்கிக் கொண்டிருந்த நூறு பேர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. Railsleeper என்பது தொடர்வண்டியின் போக்குவரத்துப் பாதையான தண்டவாளத்தில் உள்ள குறுக்குக் கட்டைகளைக் குறிக்கும். அதனை உறங்கிக் கொண்டிருந்தோர் என மொழிபெயர்த்தது பெரும்பிழையே.

Camel என்பதற்கு வடம் (கயிறு), ஒட்டகம் என இருபொருள் உண்டு. ஊசி காதில் வடம் நுழையாது என்னும் வேற்றுமொழித் தொடரை 'ஊசி காதில் ஒட்டகம் நுழையாது’ என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோம். இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான சொல்லாக அமையும் (அதாவது ஊசி காதில் நூல் நுழையுமே அன்றிக் கயிறு நுழையாது என்பதே). மொழிபெயர்ப்புகள் கழிவின்றி, சிதறலின்றி மூலமொழியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

'Underground drainage’ என்ற தொடரை மொழிபெயர்ப்பதில் தடுமாற்றம் வந்தது. பாதாளச் சாக்கடை என்பது போன்றெல்லாம் மொழிபெயர்த்தனர். தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதைசாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர். அதையே பயன்படுத்தவும் தொடங்கினர்.

Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிறபோது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலை நோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழி பெயர்க்கப்பட்டன. இதற்கு DIMNH, Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது படியெடுத்தல், மாறுதல் , உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன. இங்கு Trans என்ற முன்ஒட்டை வைத்து மொழி பெயர்க்கவில்லை. இவ்வாறு இடம்பார்த்து மொழிபெயர்ப்பு, முறையாகச் செய்யப்பட வேண்டும்.

 
பல்துறை வளர்ச்சி

இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழி பெயர்ப்பு தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு இல்லை எனில் உலகை எல்லாம் வலையாகப் பிடித்திருக்கிற ஊடகத்தின் வளர்ச்சி இல்லை. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழி பெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன. விளம்பர மொழிக்கு மொழி பெயர்ப்பு தேவைப்படு கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகின்றன. இதனால் புதுவகையான சிந்தனைகள் மொழிக்கூறுகள் பரவுகின்றன.

 
மொழிபெயர்ப்பு - பயன்

இது மொழிபெயர்ப்புக் காலம். காலையில் எழுந்தவுடன் நாளிதழ்ப்படிப்பு, மொழிபெயர்ப்பு மூலமே நமக்குச் சாத்தியமாகிறது. இரவு தொலைக்காட்சியில் காணும் கேட்கும் செய்திகளும் மொழிபெயர்ப்பு மூலமே கிடைக்கின்றன. இடையில் நம் பணிகள் பலவற்றிலும் மொழிபெயர்ப்பின் துணை இருந்துகொண்டே இருக்கிறது.

• இன்றைய வளரும் நாடுகளில் அறிவியலை உருவாக்க - அரசியலை உருவாக்க - பொருளியலை உருவாக்க - சமூகவியலை உருவாக்க - இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பே உதவுகிறது. மொழிபெயர்ப்பு, மனிதர்களையும் நாடுகளையும் காலங்களையும் இணைக்கிற நெடுஞ்சாலையாக இருக்கிறது; காலத்தால் இடத்தால் மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது; கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கும் அது மனித வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது; பல மொழிகளிலும் காணப்படும் சிறப்புக் கூறுகளை எல்லாம் ஒருங்கு சேர்த்து அனைவருக்கும் பொதுமையாக்குகிறது. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன . அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்; இரண்டாமிடம் மலையாளம்; அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது. பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றை அறியமுடிகிறது. அதிலிருந்து நல்லனவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது; பிறமொழி இலக்கிய அறிவு கிடைக்கிறது. அதன்மூலம் நம் இலக்கியத்தை வளப்படுத்த முடிகிறது. உலகப்புகழ் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவார்கள். மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

 
மொழிவளர்ச்சி

நல்ல மொழிபெயர்ப்பாளன் சில மொழி மீறல்களைச் செய்வான். இதன்மூலம் புதிய இலக்கண விதிகளின் தேவையை உருவாக்குவான். செய்யுளையே தன் வெளியீட்டு வடிவமாகக் கொண்டிருந்த தமிழ், அச்சு இயந்திரத்தின் வருகையை ஒட்டி மொழிபெயர்ப்பை எதிர்கொண்டபோது உரைநடை வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது தமிழ், ஆங்கிலத் தொடரமைப்புகளையும் கூறுகளையும் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மொழிபெயர்ப்பு இத்தகைய மொழிப் பிரச்சினைகளைக் கடந்து, அதன் தீர்வாக மொழியில் புதுக்கூறுகளை உருவாக்கி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

 
எதை மொழிபெயர்ப்பது?

எந்த மொழிபெயர்ப்பாக இருப்பினும் எதை மொழிபெயர்ப்பது என்ற முன்னுரிமை வேண்டும். ஒரு மொழியின் குப்பைகள் இன்னொரு மொழிக்குப் போய்விடக் கூடாது. பழைய நூல்களையே அறிமுகப்படுத்தும் போக்கை விட்டுப் புதுப்புது நூல்களையும் அறிமுகப்படுத்தும் நிலை வளர வேண்டும். ஒரு குறிப்பிட்ட சிறு குழுவில் பேசப்படும் மொழியில் இருப்பவையும் கூட நம்மை வந்தடைய வேண்டும். சிறு குழுவினர் பேசும் ஆப்பிரிக்க மொழிகளின் படைப்பாளர்கள் நோபல் பரிசு பெறுகிறார்கள். ஆனால் அந்தப் படைப்புகள் நம்மை எட்டுவதில்லை. தமிழின் தொன்மையான இலக்கியங்கள் முன்னரே மொழி பெயர்க்கப்பட்டு அறிமுகமாகியிருந்தால் தமிழின் பெருமை உலகெங்கும் முறையாகப் பரவியிருக்கும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும். தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும். இதனை குலோத்துங்கன்,

"காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்

கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி

பேசி மகிழ் நிலை வேண்டும்"

என்று குறிப்பிடுகிறார்.

 
செய்ய வேண்டுவன

மொழிபெயர்ப்பு நிறுவனங்களை அமைப்பதும் மொழிபெயர்ப்பைக் கல்வி ஆக்குவதும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்குவதும் ஒரு மொழியின் சிறப்புக் கூறுகளுக்கு இணையான சமன்பாடுகளை உருவாக்குவதும் பட்டறைகள் நடத்துவதும் நூல் வெளியிடுவதும் செய்யப்பட வேண்டும். சாகித்திய அகாதெமி நிறுவனமும் தேசிய புத்தக நிறுவனமும் பல மொழிகளிலிருந்து நல்ல படைப்புகளை எல்லா இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்துள்ளன. வெவ்வேறு படைப்புகள் மட்டுமன்றி, துறைசார்ந்த நூல் மொழிபெயர்ப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வகையில் தமிழில் பல நூல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”

என்று பாரதி கூறுவதைத் தமிழுலகம் செயல்படுத்த வேண்டும். அங்கிருந்து கொணர்ந்து சேர்ப்பதோடு அவர் கூறுவது போல, "தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்."

செப்புமொழிகள் பலவாக இருப்பினும் சிந்தனை ஒன்றுடையதாக உலகம் ஆக்கப்பட வேண்டும். இதற்கு மொழிபெயர்ப்புக் கல்வி இன்றியமையாதது...

 
பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும்

பிரான்சு "தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். "மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்" முதலிய நூல்களும் அங்கு உள."

- தனிநாயக அடிகள்


மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • உமர்கய்யாம் பாடல்கள் பாரசீகப் புலவரால் எழுதப்பட்டவை. அவற்றை எட்வர்டு பிற்செரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றைக் கவிமணி, தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சுந்தர ராமசாமி தமிழில் எழுதிய ‘ஒரு புளியமரத்தின் கதை என்னும் நாவலை Black went worth என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சூத்திரகரின் “மிருச்ச கடிகம்” என்ற வடமொழி நாடக நூலை “மண்ணியல் சிறுதேர்” எனப் பண்டிதமணி மு.கதிரேசனார் மொழிபெயர்த்துள்ளார்.


திருக்குறள் மொழிபெயர்ப்பு:

  • ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்தவர் = ஜி.யு.போப்.
  • திருக்குறளை ஜெர்மானிய (செருமானிய) மொழியில் மொழிப்பெயர்த்தவர் = டாக்டர் கார்ல் கிரௌல்.
  • திருக்குறளை “மாண்டரின்” (சீன) மொழியில் மொழிபெயர்த்தவர் = தைவானை சேர்ந்த கவிஞர் யூஸி ஆவார். இவருக்கு இம்மொழிப்பெயர்பபு பணிக்காக தமிழக் அரசு 77.4 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.


மொழிபெயர்ப்பு பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுதல்:

  • தொல்காப்பியர், தனது தொல்காப்பியத்தில் மரபு நிலையறிந்து, அந்த மொழிவழக்குக்கு ஏற்றார் போல் மொழிபெயர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் தொல்காப்பியர், வடமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்த வேண்டிய சூழலில், வடமொழியில் இருக்கின்ற சிறப்பு எழுத்துக்களை நீக்கிவிட்டு தமிழ் எழுத்திலேயே எழுத வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும், “வடசொல்லின் வடிவம் சிதைந்தாலும் வடமொழிச் சொல்லாகவே கருத வேண்டும் என்கிறார்”.
  • வருஷம் என்ற வடமொழி சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = ஆண்டு.
  • “வருஷம்” என்பதற்கு பதில் “வருடம்” என்பதை பயன்படுத்தலாம் என்கிறார்.
  • “பிரசங்கம்” என்னும் வடமொழிச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = சொற்பொழிவு
  • “பிரசாரம்” என்னும் வடமொழிச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = பரப்புரை



தமிழாக்கம் தருக.


Periyar was not only a great social revolutionary; he was something more than that.He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

தமிழாக்கம்: 

பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்தப்பட்டோர்களுக்காகப் போராடி வெற்றி கண்டவர். அதுமட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை உடையது. எந்தப் பிரச்சினைக்கும் அவர் கூக்குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியார் அவர்களின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது. 

 

தமிழாக்கம் தருக.


A White woman, about 50 years old, was seated next to a black man. Obviously disturbed by this, she called the airhostess.

"Madam, what is the matter?'' the hostess asked. 

"You placed me next to a black man. Give me an alternative seat”.

The hostess replied. “Almost all the places on this flight are taken. I will go to see if another place is available. The hostess went away and came back a few minutes later: "Madam, just as I thought, there are no other available seats in the economy class. We still have one place in the first class”.

Before the woman could say anything, the hostess continued. “It would be scandalous to make someone sit next to someone so disgusting”.

She turned to the black guy and said, “Sir, a seat awaits you in the first class”.

At the moment, the other passengers who were shocked by what they had just witnessed stood up and applauded. 

Take a lesson from the sun who shines his light on everyone. 

Or the rain that falls on every single shore. 

No distinction of our race or the colour of our face. 

Nature's gifts are there for all men rich or poor.

 விடை:

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு நிற (நீக்ரோ) மனிதன் அருகே அமர்ந்திருந்தாள். இதனால் வெறுப்புற்ற அவள், விமான பணிப்பெண்ணை அழைத்து, தமக்கு வேறு இருக்கை வேண்டும் என முறையிட்டாள். ஏறக்குறைய எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வேறு ஏதேனும் உள்ளனவா என பார்க்கிறேன் என்று பணிப்பெண் பதிலளித்தாள். சற்று தூரம் சென்ற பணிப்பெண் ஒருசில வினாடிகளில் திரும்பி வந்து இரண்டாம் வகுப்பில் இருக்கைகள் இல்லை. ஆனால் முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது என்றாள். அந்தப் பெண் வாய் திறக்குமுன், விமான பணிப்பெண் தொடர்ந்தாள்.

பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது வெறுப்பாக உள்ளது என்பதை நானும் வெறுக்கிறேன்என்று கூறிவிட்டு அந்தக் கருப்பின இளைஞனை நோக்கி, “ஐயா, உங்களுக்கு முதல் வகுப்பில் ஒரு இருக்கை காத்திருக்கிறதுஎன்று அவனை அழைத்தாள். இதனைக் கண்ட மற்ற பயணிகள் எழுந்து நின்று அவளின் செயலைக் கண்டு கைதட்டி பாராட்டினார்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், சூரியன், பேதமின்றி அனைவருக்கும் ஒளி வீசுகிறது. மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது. இயற்கையே இவ்வாறு பேதமின்றி தனது கொடைகளை வழங்கும் போது, இனத்தையும், நிறத்தையும் மற்றும் முகத்தையும் பார்த்து சக மனிதனை நாம் வெறுக்கலாமா


தமிழாக்கம் தருக.

1. The Pen is mightier than the Sword.
சுத்தியின் முனையைவிட எழுதுகோலின் முனை கூர்மையானது.
2. Winners don't do different things, they do things differently.
வெற்றியாளர்கள் மாறுபட்ட செயல்களைச் செய்வதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
3. A picture is worth a thousand words.
ஆயிரம் சொற்களைவிட ஓர் ஓவியம் மதிப்பு வாய்ந்தது.
4. Work while you work and play while you play.
வேலையில்போது வேலையிலும், விளையாடும்போது விளையாட்டிலும் சுவனம் வை.
5. Knowledge rules the world.
அறிவே ஆட்சி செய்யும்.


தமிழாக்கம் தருக.


The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India's status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected; There are no travelling libraries to reach them of kind that are to be found even in some backward countries.

The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers, in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits 

 விடை:

இந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொது நூலகத்தை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது. மேலும், அது தலைநகரத்தின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. இங்கு ஒரு சில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை பயனடையச் செய்வதற்கு சில பின் தங்கிய நாடுகளில் உள்ளதைவிட நூலகங்கள் ஏதும் இங்கு இல்லை.

இந்தியாவில் நூலகங்களின் வளர்ச்சி தாமதமாகவே உள்ளது. பின்னாளில் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்றம் இருந்தாலும், எழுத்தறிவில் பின்தங்கியே இருக்க நேரிடும். இந்தியாவில் பெருமளவு மக்களுக்குப் புத்தகங்கள், வார இதழ்கள், பத்திரிக்கைகள் வாங்குவதற்கு வழி இல்லை மற்றும் போதுமான பொது நூலகங்கள், வாசிப்பு அறை, இல்லாமையால் பெரும்பாலானவர்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போகிறது


தமிழாக்கம் தருக.

1. Just living is not enough. One must have sunshine, freedom and a little flower - Hans Anderson.
சாதாரண வாழ்க்கை வாழ்ந்தால் மட்டும் போதாது சூரியனைப் போல பிரகாசமாகவுயும் சுதந்திரமாகவும் பூவின் மணம் போலவும் வாழ வேண்டும் - ஹேன்ஸ் ஆண்டர்சன்.
2. In nature, light creates the colour. In the picture, colour creates the light - Hans Hofmann.
இயற்கையின் ஒளியிலிருந்து நிறம் கிடைக்கிறது. ஆனால் ஓவியங்களின் நிறம் ஒளியை உண்டாக்குகிறது - ஹேன்ஸ் ஹோ ஃப்மன்,
3. Look deep into nature and then you will understand everything better - Albert Einstein.
இயற்கையை உற்று நோக்குங்கள். பின்னர் எல்லாவற்றையும் நன்கு அறிவீர்கள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்..
4. Simplicity is nature's first step, and the last of art – Philip James Bailey.
எளிமைதான் இயற்கையின் முதற்படியும் சுலையின் இறுதிப்படியும் ஆகும் - பிலிப் ஜேம்ஸ் பெய்லி.
5. Roads were made for journeys not destinations - Confucius.
வாழ்க்கைப் பாதையில் பயணம் தொடரும்; எண்ணங்கள் ஈடேறுவதில்லை - கன்பூஷியஸ்.

 

தமிழாக்கம் தருக.


The folk songs of Tamilnadu have in them a remarkable charm just as we find in the folk songs of any other country. But what is special in these Tamil songs is, they not only possess a native charm and the aroma of the soil but have preserved in them a certain literary and artistic quality. This is so because the people who speak the language of these folk songs, the Tamils, have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet so full of life that they are always new and progressively modern. These songs were born several centuries ago; they are being born every generation; they will be born and reborn over and over again!

விடை

நாட்டுப்புறப் பாடல்

பிறநாடுகளில் காணப்படும் நாட்டுப்புறப் பாடல்களைவிட தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள் குறிப்பிடத்தக்க அழகுடையதாக உள்ளது. ஆனால் தமிழக நாட்டுப்புறப்பாடல்களின் சிறப்பு என்னவென்றால், இயற்கை அழகு, மண்வாசனை அல்லாமல் இலக்கிய நயமும் கலைத்திறனும் கொண்டதாக உள்ளது. அது ஏனென்றால், மக்கள் பேசும் தமிழ்மொழியிலேயே நாட்டுப்புறப் பாடல்களும் உள்ளன. தமிழ்மொழி பழமையான வரலாற்றினையும் சிறப்பான இலக்கிய மரபினையும் உடையது. நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் பழமை வாய்ந்தவை ஆயினும், வாழ்வில் கலந்து புதுமை உடையதாகவும், இக்காலத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக் கொள்கின்றன. இத்தகைய பாடல்கள் பல நூ ற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றின. இப்பாடல்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்காகவே தோன்றுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் மீண்டும் தோன்றி, மறுமலர்ச்சிப் பெற்று மேலும் மேலும் (மென்மேலும்) வளரும்.


தமிழாக்கம் தருக.


In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life-and that is the main theme of this chapter-let it be clearly stated that educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.

In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life. Educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.

விடை:

கல்வி என்பது மனித வளர்ச்சி அடிப்படையில் ஒன்று. அதுவே இறுதியானது. ஆயினும் அது முடிவானது அன்று. கல்வி என்பது மனிதனுடைய அடிப்படை உரிமை. இது மக்களின் பொருளாதாரம் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த துறைகளினுடைய கதவுகளைத் திறக்க உதவும் திறவுகோல். இது வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் உயர்த்துகிறது. மனிதனுடைய வாழ்கையில் நல்ல வாய்ப்புகளைப் பற்றி பொருளாதார வல்லுநர்கள் விரிவாக ஆய்ந்துள்ளனர். மக்களுக்கு கல்வியறிவு வழங்குவது சிறந்த குறிக்கோளாகும். அது எந்த விதமான பொருள் மதிப்பையும் திருப்பி அளிக்கா

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)