இலக்கணம்-ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகள்
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:
விளக்கம் :
ஒலி வேறுபாடறிந்து பொருளைத் தேர்வு செய்தல் என்பது கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் பொருளை புரிந்து அதற்கான சரியான விடையை தேர்ந்தெடுத்தல் ஆகும்.
ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகள் பின்வருமாறு :
னகர, ணகர சொற்களின் பொருள் வேறுபாடு:
- கன்னன் - கர்ணன் கண்ணன்- திருமால்
- மன்னன் - அரசன் மண்ணன்- மனிதன்
- பனி - குளிர் பணி - வேலை
- ஊன் - இறைச்சி ஊண் - உணவு
- மன் - நிலையான மண் - தரை
- என் - என்னுடையது எண் - எண்ணிக்கை
- தனி - தனிமை தணி - குளிர்மை
- கனி - பழம் கணி - கணித்தல்
- அரன் - ஈஸ்வரன் அரண் - பாதுகாப்பு, அரண்மனை
- மனம் - நெஞ்சம் மணம் - வாசனை
- கான் - கானகம், காடு காண் - பார்
- கனம் - பாரம் கணம் - கூட்டம், நொடி
- வன்மை - திடமான,உறுதியான வண்மை - ஈகை குணம்
- நுனி - முனை நுணி - நுட்பம்
- சுனை - நிரூற்று சுணை - முட்கள்
- கன்னி - குமரிப்பெண் கண்ணி - மாலை
- அனை - அத்தனை அணை-நீர்த்தேக்கம்
- மனை - வீடு, வீட்டிடம் மணை - அமரும் பலகை
- ஆனி - மாதம் ஆணி - சுவற்றில் அடிப்பது
- கனை - அம்பு கணை - பேழை
- ஆனை - யானை ஆணை - கட்டளை
- குனி - குனிதல் குணி - ஆலோசித்தல்
ரகர-றகர பொருள் வேறுபாடுகள்
- சீரிய - சிறப்பான சீறிய - வெகுண்ட
- தரி - அணிந்துகொள் தறி - வெட்டு
- இரு - இருத்தல் இறு - முறிதல்
- பரி - குதிரை பறி - பிடுங்கிக்கொள்
- குரம் - நகரம் குறம் - பக்கம்
- அரம் - கருவி அறம் - ஈகை
- அரை - பாதி, இடுப்பு அறை - வீட்டு அறை
- இறை - தீனி இறை - கடவுள், நீர் இறைத்தல்
- உரு - வடிவம் உறு - மிகுதி
- அரவு - பாம்பு அறவு - விலக்கம்
- உரல் - மாவு இடிக்கப்பயன்படுவது உறல் - பெருத்த துன்பம்
- அரி - வெட்டு அறி - தெரிந்துகொள்
- பொரி - உண்ணும் பொரி பொறி - இயந்திரம்
- உரி - உரித்தல் உறி - உறி அடித்தல்
- குரை - நாய் குரைத்தல் குறை - குறைத்தல்
- திரை - அலை திறை - கப்பம்
- கரை - ஓரம் கறை - அழுக்கு
- துறவு - துறத்தல் துரவு - கேணி
- பறவை - பறக்கும் பறவை பரவை - கடல்
- இரை - உணவு இறை - கடவுள்
- விறல் - வெற்றி விரல் - விரல்
- மறை - வேதம் மரை - மான்
- இரும்பு - உலோகம் இறும்பு - புதர்
- ஏரி - நீர் தேக்கம் ஏறி - ஏறுதல்
- கருப்பு - பஞ்சம் கறுப்பு-நிறம்
- குரம் - நரகம் குறம்-பக்கம்
- பெரு - பருமன் பெறு -பெறுதல்
- குரவர் - சமயக்குரவர் குறவர்-மலைசாதியினர்
- ஒரு - ஒன்று ஒறு - தண்டித்தல்
- அரு - அருகாமை அறு - அறுத்தல், புல்வகை
- பொறுத்து - தாமதித்து பொருத்து- சேர்த்து
- அரிவை - பெண் வகை அறிவை - அறிந்துகொள்
- பொரு - போரிடு பொறு - பொறுத்துக்கொள்
- தெரி - சிதறுதல் தெறி - நொறுங்குதல்
- கூரை - வீட்டின் முகடு கூறை - புடவை
- உரை - பேச்சு உறை - உறைவிடம், மூடி
- நெரி - நசுக்குதல், உடைத்தல் நெறி - நீதிநெறி,
- புரம் - காப்பு, நகர் புறம் - வெளி, பக்கம்
- மருகி - மருமகள் மறுகி - தாங்கி
- செரு - போர் செறு - திணி, வயல்
- சீரடி - சிறப்பான அடி சீறடி - சிறிய அடி
- நரை - தலை நரை நறை - தேன்
- பாரை - கடப்பாரை பாறை - கற்பாறை
ளகர-லகரப் பொருள் வேறுபாடு
- அளகு - காட்டுக்கோழி அலகு - அளவைக்கூறு
- அள் - கூர்மை, காது அல் - இரவு
- அளை - குகை, கல் அலை - திரி, கடல் அலை
- இளை - மெலிதல் இலை - மரத்தின் இலை
- உளை - மயிர் உலை - நீர் உலை
- களம் - போர்க்களம் கலம் -கப்பல்
- கள் - தேன், பானம் கல் - பாறை, கல்வி
- காளை - எருது காலை - பொழுது
- குளவி - பூச்சி குலவி - குலவுதல்
- குளம் - நீர்நிலை குலம் - இனம்
- கொல் - கொலை கொள் - பெறுதல்
- கூளி - பூதம் கூலி-சம்பளம்
- தோள் - உறுப்பு தோல் - சருமம்
- பள்ளி - பாடசாலை பல்லி-விலங்கு
- வாளி - நீர் இறைக்கப்பயன்படுவது வாலி - சுக்ரீவனின் தமயன்
- வாள் - கருவி வால் - விலங்கின் வால்
- வேள் - இறைவன் வேல் - கருவி
- வளி - காற்று வலி - வேதனை
- விளை - விளைச்சல் விலை - மதிப்பு
- எள் - பயிர்வகை எல் - சூரியன், வெளிச்சம்
- தாள் - பாதம் தால் - நாக்கு
- கொள்ளி - நெருப்பு கொல்லி - ஒருமலை
- நீளம் - நெடுமையாக நீலம்-நிறம்
- விள் - விடுதல் வில் - கருவி
- கோள் - கிரகம் கோல் - கொம்பு
- நால் - நான்கு நாள் - தினம்
- மால் - திருமால் மாள் - இறத்தல்