ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் / ORELUTHU ORUMOZHI TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0
ORELUTHU ORUMOZHI TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்:


ஓரெழுத்து ஒருமொழி:


நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.
  • ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ
  • 'க' வரிசை: கா,கூ,கை,கோ
  • 'ச' வரிசை: சா,சீ,சே,சோ
  • 'த' வரிசை: தா,தீ,தூ,தே,தை
  • 'ந' வரிசை: நா,நீ,நே,நை,நோ
  • 'ப' வரிசை: பா,பூ,பே,பை,போ
  • 'ம' வரிசை: மா,மீ,மூ,மே,,மை,மோ
  • 'வ' வரிசை: வா,வீ,வை,வௌ
  • 'ய' வரிசை: யா
பெரும்பாலும் நெடில் இனத்தில் வரும்.குறில் இனம் என்று பார்த்தால் உயிர் மெய் எழுத்துக்களான 'நொ' மற்றும் 'து' போன்றவை
மேற்கண்ட 42 எழுத்துக்களும் நன்னூல் குறிப்பிடப்படுபவை.

ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்:


1.ஆ- பசு
2.ஈ- கொடு
3. ஊ- இறைச்சி
4. ஏ- அம்பு
5. ஐ- தலைவன்
6. ஓ- மதகுநீர் தாங்கும் பலகை 
7. கா- சோலை
8. கூ- பூமி
9. கை- ஒழுக்கம்
10.கோ-அரசன்
11. சா- இறந்துபோ
12. சீ- அடக்கம்
13.  சே- உயர்வு
14. சோ- அரண்
15. தா- அழிவு, கொடு
16. தீ- தீமை, நெருப்பு
17. தூ- தூய்மை, சுத்தம்
18. தே- கடவுள்
19. தை- தைத்தல் 
20. நா- நாவு
21. நீ- முன்னிலை ஒருமை
22. நே-  அன்பு
23. நை- இழிவு
24. நோ- வறுமை
25. பா- அழகு, பாடல்
26. பூ- பூமி
27. பே – மேகம்
28. பை- அழகு, இளமை
29. போ- செல்
30. மா- மாமரம்
31. மீ- வான்
32. மூ-மூப்பு
33. மே- அன்பு
34. மை- அஞ்சனம்
35. மோ- முகத்தல்
36. யா- ஐயம்
37. வா- அழைத்தல்
38. வீ- சாவு
39. வை- புல்
40. வெள- கவர் 
41. நொ- நோய்
42. து- உண்


-மேலும்-

  • அ -எட்டு,அழகு,சிவன்
  • ஆ-பசு, ஆன்மா, எருது
  • இ-'அரை'யின் தமிழ் வடிவம்
  • ஈ-ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி
  • உ -சிவன், ஆச்சர்யம், இரண்டு(தமிழ்)
  • ஊ-ஊண், இறைச்சி, உணவு
  • எ-வினா எழுத்து, ஏழு(தமிழ்)
  • ஏ-அம்பு, வினாப் பெருக்கம், இறுமாப்பு
  • ஐ-தலைவன், அரசன், வியப்பு, ஆசான்
  • ஓ-மகிழ்ச்சி, வியப்பு, மதகுப்பலகை
  • ஔ-உலகம், ஆனந்தம்
  • க-கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று
  • கா-சோலை, காத்தல், காவல், காடு
  • கி-இறைச்சல் ஒலி
  • கு-பூமி, உலகம், குற்றம்
  • கூ-பூமி, உலகம், கூகை
  • கை-உறுப்பு, ஒழுக்கம், சிறகு, ஒப்பனை
  • கோ-அரசன், தலைவன், பசு, இறைவன்
  • கௌ-கொள்ளு, தீங்கு, பற்று
  • சா-சாதல், இறத்தல், சோர்தல்
  • சி/சீ-இகழ்ச்சி, இலக்குமி, வெறுப்பு
  • சு-விரட்டுதல், சுகம், மங்களம்
  • சே-எருது, சிகப்பு, மரம்
  • சை-கைப்பொருள், அருவெருப்பு, ஒலி
  • தா-தருதல், கொடுத்தல், கேடு
  • தீ-நெருப்பு, சினம், தீமை, நரகம்
  • து-உண், அசைதல், உணவு
  • தூ-வெண்மை, தூய்மை, பகைமை
  • தே-தெய்வம், கடவுள், அருள்
  • தை-மாதம், தைத்தல், அலங்காரம்
  • நா-நாக்கு, சொ, நடு, அயலர்
  • நீ-முன்னிலை
  • நே-அன்பு, அருள், நேயம்
  • நை-நைதல், வருந்துதல்
  • நொ/நோ-துன்பம், நோய்
  • ப-நூறு
  • பா-பாட்டு, அழகு, பாதுகாப்பு
  • பி-அழகு, பிறவினை விகுதி
  • பீ-பெருமரம், மலம்
  • பூ-மலர், பூமி, பிறப்பு
  • பே-நுரை, மேகம், அச்சம்
  • ம-சந்திரன், சிவன்
  • மா-பெரிய, விலங்கு, மேன்மை, மாமரம்
  • மீ-மேலே, உச்சி, ஆகாயம்
  • மூ-மூப்பு, முதுமை, மூன்று
  • மே-அன்பு, மேன்மை, மாதம், மேலே
  • மை-அஞ்சனம், கண்மை, இருள், மலடு
  • மோ-மோத்தல், முகர்தல்
  • ய-தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
  • யா-யாத்தல், யாக்கை, ஒரு வகை மரம்
  • வ-கால் பாகம்
  • வா-வருதல், தாவுதல், உண்டாக்குதல்
  • வி-அறிவு, நிச்சயம், ஆகாயம்
  • வீ-மலர், விரும்புதல், பறவை
  • வை-கூர்மை, வைத்தல், வைக்கோல்
  • வௌ-கைப்பற்று, ஒலிக்குறிப்பு, திருகு


9th பெரியபுராணம்

மா – வண்டு

கா – சோலை

9th குறுந்தொகை

யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது

11th திருமலை முருகன் பள்ளு

கா – சோலை

ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்:

1.   நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ___? 42
2.    ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன? ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவதே ஓரெழுத்து ஒரு மொழி ஆகும். எ.கா. (தீ, நீ, வா, போ).
3.   _______ புல்லை மேயும்? ஆ
4.   _______ சுடும்? தீ
5.   ______ பேசும்? கை
6.   ______ பறக்கும்? ஈ
7.   ______ மணம் வீசும்? பூ
8.   தீ – நெருப்பு
9.   பா – பாடல்
10. தை – தை மாதம்
11. வை – புல், வைக்கோல்
12. மை – அஞ்சனம்
13. தா – கொடு
14. தே என்பதன் பொருள் _______ எனப்படும்? கடவுள்
15. மா – வண்டு
16. கா – சோலை
17. யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
18. மா - ஒரு நில அளவு (1/3 ஏக்கர்)
19. கா – காடு
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியர் _____? பவணந்தி முனிவர்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)